Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஏன் 2ஆண்டுகள் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்

திமுகவை விமர்ச்சித்து "மீம்ஸ்" போட்டதிற்கே "கேஸ்" போட்டு நல்லிரவில் வீடு புகுந்து தூக்கி உள்ளே தள்ளும் ஆளும் திமுக அரசு, திரு.ராகுல் காந்தி அவர்களுக்கெதிரான ஜனநாயக உரிமைக்காக உடன் நிற்போம் என்று சொல்வது "கூட்டத்தில் திருடன் திருடன்" என கத்திக்கொண்டே திருடன் ஓடிவந்தான் என்பதற்கு ஒப்பானதாகவே சொல்லலாம். தவிர்த்து,

2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான பரப்புரையின் போது காங்கிரஸின் தலைவராக நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்தில் தனது பரப்புரையின் ஓரிடத்தில் "அனைத்து திருடர்களும் மோடியை  தனது குடும்ப பெயராக வைத்திருப்பது ஏன்?" என்ற வார்த்தையை குறிப்பிட்டு பேசியிருந்தார்.

லலித் மோடி, நீரவ் மோடி என்று மக்கள் பணத்தை சட்டப்படி(!) ஏமாற்றி நாடுகடந்தவர்களை பற்றி குறிப்பிட்டு இந்த வார்த்தையை தெரிவித்திருந்தார். இதை சொன்னதற்கு தான் 2ஆண்டுகள் (பிரமாதம்!!) சிறை தண்டனையை சூரத் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

2019இல் கர்நாடகாவில் பேசிய அவதூறு குற்றச்சாட்டை குஜராத்தில் வழக்கு தொடுக்கப்படுகிறது. கவனிக்க, வழக்கு தொடுத்தவர் பாஜக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான "புர்ணேஷ் மோடி" என்பவராவார்.



4ஆண்டுகளாக இல்லாத தீர்ப்பு இப்பொழுது அவசர அவசரமாக அதுவும் 2ஆண்டுகள் சிறை தண்டனை என்னும் அளவிற்கு அவ்வளவு பெரிய கலவரத்தையா அவர் தூண்டி விட்டார் என்பதையெல்லாம் எதார்த்தமாக பார்த்தாலே புரிந்துவிடும்.

சமீபத்தில் உலகபணக்காரர்கள் பட்டியலில் 3 வது இடத்திற்கு அதானி உயர்ந்து(!?) 11இடத்திற்கு சரிந்தார். எப்படி இதெல்லாம் இவர்களுக்கு மட்டும்(!) சாத்தியமாகிறது என்பதை பற்றிய தேடுதல் மேற்கொண்டால் அதற்கு எளிய விடையை அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான "ஹிண்டன் பர்க்" வெளியிட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

ஆய்வின்படி, அதானி குழும பங்குகள் "திட்டமிட்டு இயல்புக்கு மாறாக முறைகேடாக உயர்த்து விற்க/வாங்கப்படுகிறது. இதன் காரணமாகவே அதானிக்கு தனிப்பட்ட வகையில் அதிக இலாபம் கிடைக்கும். அதே சமயத்தில் இவ்வாறான முறைகேடால் சாமானிய பங்குதாரார்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்றும் இதனால் இந்திய பொருளாதாரத்திலும் கனிசமான இழப்பு ஏற்படுகிறது என்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஆட்சியாளர்களின் துணையின்றி இப்படியான முறைகேடுகள் சாத்தியமில்லை.

இந்த விவகாரத்தையொட்டி ராகுல்காந்தி மற்றும் எதிர்கட்சிகள் மாநிலங்களவையில் சரமரியாக ஆளும் பாஜகவிற்கு  எதிராக கேள்வி எழுப்பினார்கள். வழக்கம் போல பதில் இல்லை. இருப்பினும் ராகுல் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அதானி முறைகேடு குறித்து பெருமளவு பேசத்தொடங்கினார். ஒருவேளை இது பூதாகரமாக தொடங்கினால் நண்பர் அதானிக்கு கடும் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

மேலும் சமீபத்திய தேர்தல்கள் பாஜவிற்கு சாதகமான சூழ்நிலை என்பதாகவே தோன்றுகிறது. நடைபெற இருக்கிற கர்நாடக தேர்தலில் காங்கிரசின் "கை" ஓங்கியிருப்பதாகவே பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

ராகுலின் நடை பயணத்திற்கு பிறகு அவரின் "இமேஜ் கூடியிருக்கிறது".
ஆக, ராகுல் மீது பாஜக கனைகள் தொடுப்பதற்கான காரணங்கள் அடுக்கடுக்காவே இருக்கின்றன.

2024 தேர்தலிலும் பாஜக வெல்வதற்கான சூழ்நிலைகளே இருப்பினும் தேவையில்லாமல் தேன்கூட்டிற்குள் கையைவிட்ட குரங்கை போல இந்த தண்டனை கொடுத்ததும் தொடர்ந்து அவசர அவசரமாக மாநிலங்களைவில் அவரின் பதவியை தண்டனையை காரணம் காட்டி பறித்ததும் தவரான மூவ் ஆகும்.

மேபி, இன்னும் தேர்தலுக்கான நாட்கள் அதிகமாக இருப்பதால் வழக்கம் போல "முட்டாள் மக்கள்கள்" அனைத்தும் மறந்து விடுவார்கள் என்ற அனுபவபாடம் கூட பாஜகவின் இந்த மூவ்விற்கான தைரியத்தை கொடுத்திருக்கலாம்.

எது எப்படி இருப்பினும் அதிகாரத்தில் இருப்பவர்கள் நினைத்தால் "ஜனநாயத்தின் குரல்வளை மட்டுமல்ல குடலையும் உருவி விற்றுவிட முடியும்" என்ற ஆபத்தான பாதையை இந்தியா/தமிழ்நாடு உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

என்றாவது ஒரு நாள் நல்லறிவு கொண்டோர் ஒன்றாகி புரட்சி செய்துவிடக்கூடாது என்ற நீண்ட நாள் திட்டமிடுதலுடன் கிரெடிட் கார்டு, ஹவுசிங் லோன், ஈஸி இன்ஸ்டால்மெண்ட் லோன்களை கந்துவட்டி வங்களின் மூலமாக அளித்து தங்களை ஃசேப் சோனில் வைத்து அதிகாரத்தை சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாழ்க திராவிடம். பாரத் மாத்தாவிக்கி ஜே!!

#தொழிற்களம்_அருணேஸ்

Post a Comment

0 Comments