Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

வாடிக்கையாளர்களின் சைக்காலஜி தொழில் பழகு I தொடர்பதிவு 06 I I Business Secrets I #1. தனித்துவத்தை தக்கவையுங்கள்

அமேசான் துவக்கத்தில் புத்தகங்களுக்கென மிகப்பெரிய கடல் என்றே தன்னை ஆன்லைன் வணிகத்தில் அறிமுகப்படுத்தி கொண்டது. அதில் உண்டான அனுபவமும் நம்பிக்கையையுமே மூலதனமாக மாற்றி இன்று ஆன்லைன் ஷாப்பிங்கில் நெம்பர் 1 ஆக பலதரப்பட்ட பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது. வால்மார்ட்டின் வாலை ஒட்ட நறுக்கும் அளவிற்கு ஆன்லைனை பொருத்த வரையில் அமேசான் விளங்குகிறது.

கூகுளின் சிறப்பம்சம் ஈஸி இண்டர்பேஸ். கலர்கலரா எக்கசக்கமான விளம்பரங்களோட இருந்த யாகூ, பிங் எல்லாம் இன்னைக்கு எங்க இருக்காங்களோ தெரியாது ஆன கூகுள் சர்ச் என்ஜின் நெம்.1 என்பதை மாற்ற இப்போதைக்கு வேறு கொம்பன் இல்லை.


பயனர்கள் உள்ளிடும் வார்த்தைகளை கொண்டே ஆட்டோ ப்ரோக்ராம் அப்ளிகேசன் மூலம் தன்னை தேடுபொறிகளின் ராஜாவாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது கூகுள். இப்பொழுதும் அதன் முகப்பு பக்கத்தில் ஒரு லோகோ ஒரு சர்ச் பார் மட்டுமே இருக்கிறது. எதையாவது தேட வருபவர்களுக்கு எதற்கு கலர்கலர் பக்கங்கள்?? அவர்களுக்கு தேவை சரியான தகவல்கள் மட்டுமே அதை கொடுப்போம் போதும்.


ஒரு ஐஸ்கிரீம் கடையில் டேபிள் எப்படி இருக்கனும்? அங்கென்ன பிஸினஸ் ப்ரசண்டேசனா நடக்கும்? இல்லையே… பேமிலி மற்றும் குழந்தைகளோட வருவார்கள். அல்லது தன் காதலி அல்லது நண்பர்களோட வருவார்கள். அங்க எதுக்கு நீண்ட செவ்வகமான டேபிள்? தலைவாழை இலை போட்டு சாப்பாடு பறிமாற ஆரியபவனா அது??  ஒரு அழகான ரவுண்ட் டேபிள் போதுமே!! நாற்காளியை அருகருகே போட்டுகொண்டு ஒட்டி உட்கார்ந்து பேசிக்கொண்டே சாப்பிட அது தானே சிறப்பா இருக்கும் ஹா? அது உங்களின் தனிதன்மையா கூட இருக்கலாமே??!!


தனிதன்மை என்பதை மற்ற பிராண்ட்களில் இருந்து தன்னை வித்தியசமாக காட்ட பயப்படும் ஒரு வழி என்று நினைத்துவிடாதீர். தனிதன்மை என்பதற்கும் வித்தியாசம் என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. 


வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை என்பதை ஆராய்ந்து அவர்களின் தேவையை நிறவேற்றக்கூடிய உங்களின் தனித்துவமான அனுபவம் அல்லது அறிவாற்றல் அல்லது இரண்டையுமே குறிக்கும் ஒரு செயல்பாடாகும்.


1886இல் சக்கபோடு போட்ட கோக் தனக்கு பின்னால் புதிதாக வந்த பெப்சியை ஒரு போட்டியாளராக நினைத்தது. கோக்கை விட பெப்சியோட டேஸ்ட் கொஞ்சம் இனிப்பு சுவை அதிகமா இருக்கும். அது ஒருசில வாடிக்கையாளர்களுக்கு பிடித்தது.  அதனால, நாம பெப்சிய ஓரங்கட்டுவோம்ன்னு நினைச்சு போட்டிக்காக "பெப்சி சேலஞ்ச்" என்று சொல்லி கோக்(Choke) தன்னோட பாரம்பரிய சுவையை மாற்றி அதிக இனிப்பு தன்மை கொண்ட புதிய பானத்தை அறிமுகம் செய்தது. அப்பறம் கோக்கோட நிலைமை என்னவாயிருக்கும்???  அதேதான்.. வாடிக்கையாளர்கள் ஆதரவின்றி திரும்பவும் அவசர அவசரமா தன்னோட பழைய பிளேவரையே ரிப்ளேஸ் செய்து கோக்கோ கோலா கிளாசிக் என திரும்பவும் ரெகுலர் பார்முலாவிற்க்கு வந்தது.  


இதெல்லாம் புதிதாக தயாரிக்கப்படும் கார், பிவ்ரேஜஸ், காஸ்மெடிக்ஸ் போன்ற பொருட்களுக்கு ஓக்கேங்க நாங்க மளிகை கடை வெச்சிருக்கோம் இல்ல விவசாயம் பன்னுறோம் இதுல என்னங்க தனிதன்மைய காமிக்க முடியும்ன்னு சாக்கு கண்டு பிடிக்க முயலாதீர்கள். 


உங்க கடைக்கு வரவங்கள ரொம்ப நேரம் நிற்க வைக்காம வேகமா பொட்டலம் கட்டி கொடுத்து கால்குலேட்டரே இல்லாம கணக்கு போட்டு சொல்கிறீர்கள் அல்லவா? அதான் உங்கள் தனித்துவம். 


என்னதான் கஸ்டமான சூழ்நிலை இருந்தாலும் கொடுக்குற பொருளில் கலப்படம் வந்திடக்கூடாது வெயிட்லாஸ் ஆனாலும் பரவாலைன்னு பதம் பார்த்து வண்டில லோடு ஏத்திவிடுறீங்களா? அது தான் உங்கள் தனித்துவம். 


உங்க கிட்ட இருந்து வாடிக்கையாளர்கள் வெளியே போக மாட்டார்கள்.



உங்களுக்கு என்ற தனிதன்மை இருந்தால் போதுமா? தொழிலில் ஜெயிச்சுடலாமா? கல்லா கட்டிடலாமான்னு கனவு காண வேண்டாங்க. இங்க வணிக ரீதியான வெற்றி என்பதை அடைய வேண்டுமெனில் தோல்வியை முதலில் துறத்தி விட வேண்டும். வெற்றி ஏணியில் ஒரு படியில் ஏறிவிட்டு நின்றுவிட முடியாது. 


நிர்வாகத்திறமை, சரியான சூழல், மார்கெட்டிங், இன்வெஸ்ட்மெண்ட் என்று பல்வேறு ஸ்ரேட்டஜிகளையும் சரியாக கையாண்டால் மட்டுமே உங்களால் வணிக ரீதியான வெற்றியை அடைய முடியும். 


ஒரு சாதாரண சிசிடிவி ஆபரேடவிற்கும் சுபைர் ரகுமான்,  வருடம் 60 கோடிக்கும் அதிகமாக டிசர்ட்களை விற்கும் நிறுவனமாக தனது, தி பேசன் பேக்டரி கம்பெனியை உருவாக்கியதன் தனித்துவம்  என்ன தெரியுமா? ஏற்கனவே லட்சக்கணக்கான போட்டியாளர்கள் இருக்கும் ஜவுளி துறையில் டிசர்ட்களை காம்போ ஆஃபர் மூலம் விற்றால் லாபம் அடையலாம் என்ற ஐடியாவை கண்டுபிடித்து அதை செயல்படுத்தியது தானே? 


அதே போல பேமிலி டிசர்ட்கள் என்று அப்பா-மகன் ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான கலர் பிரிண்ட் என்று உருவாக்கி அதை மார்கெட்டில் கொண்டு சேர்த்து வெற்றியை சுவைக்கிறாரல்லவா?


எல்லோரும் வித்தியாசமா செய்யனும்னு நினைத்து தனித்துவத்தை மறந்து விடுகிறார்கள். வித்தியாசம் வேறு தனித்துவம் வேறு.


அதே போல ஜவுளிதுறையில் ஆன்லைன் வர்த்தகத்தில் சாதித்த இன்னொருவர் கதையை தெரிஞ்சுகங்க, ஆன்லைனில் எல்லாமே கிடைக்குது. ஆனா இது தான் தனக்கு வேணும் அப்படி என்று குறிப்பிட்ட ஒன்றை தேடும் போது அதில் யார் வல்லுனர்கள் என்றே முதலில் பார்ப்பார்கள். அப்படி பட்ட வாடிக்கையாளர் தான் எங்க டார்கெட். இந்திய கைத்தறிகளுக்கென்றே தனி மார்க்கெட்டை உருவாக்கி கைத்தறி ஆடைரகங்களுக்கென்றே பிரத்யேகமாக ஒரு ஆன்லைன் விற்பனையகத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் அவிஷ்யா நிறுவனத்தின் ஜவஹர்-கல்யாணி தம்பதியினரின் தனித்துவம் சாதித்திருகிறதல்லவா??


உங்கள் முதலீடு என்பது வெறும் காகிதத்தால் அச்சிடபட்ட பணம் மட்டுமல்ல. அது ஒரு வேல்யூ.


உங்களின் உழைப்பிற்கு நீங்கள் கொடுக்கப்போகும் உட்சபட்ச மரியாதைதான் உங்களின் தனித்துவம். 


வாடிக்கையாளர் உங்கள் புரோடக்டை ஏன் வாங்கனும் என்ற கேள்விக்கு சரியான  பதிலை கண்டுபிடித்து விட்டீர்களா?? 


சூப்பர்ங்க நீங்க!!!!


தொடர்ந்து வாசிப்போம்

முந்தைய பதிவுகளுக்கு

Post a Comment

0 Comments