Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

MK Stalin Birthday special I முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் - ஒரு சமகால வரலாற்று நாயகன்

முத்தமிழறிஞர் டாக்டர் மு.கருணாநிதி அவர்களுக்கும் தயாளு அம்மாள் அவர்களுக்கும் மகனாய் 1951, மார்ச் 1 ஆம் தேதி முக ஸ்டாலின் அவர்கள் பிறந்தார். 

முக ஸ்டாலின் அவர்களை பொறுத்த வரையில் அவர் போராடி வெற்றி கண்ட ஒரு சமகால நாயகன் என்றே சொல்லலாம்.

இவரால் கடைசி வரைக்கும் முதலமைச்சர் நாற்கலியில் உட்கார முடியாது என்று எள்ளி நகையாடியவர்கள் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு  தன்னுடைய உழைப்பால் இன்று தமிழக (2023) முதல்வராக சிம்மாசனத்தில் ஆத்மநாயகாய் அமர்ந்திருக்கிறார். 

தன்னுடைய 14வது வயதில் சில பள்ளி மாணவர்களை சேர்த்துக்கொண்டு திமுக இயக்கதின் முதல்விதையாக அரசியல் களத்தில் தனது முதல் அடியை எடுத்து வைத்தார். உருவத்தில் பெரிய ஒரு பாகுபலியாய் இல்லாவிட்டாலும் பார்க்கும், திசை எங்கும் இளைஞர்களுக்கு திராவிட சிந்தனைகளை சுடர்விட தானும் ஒரு காரணமாய் இருக்கிறார்.

மிசாகால அடக்குமுறையை கண்டவர் ஒருசில நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடித்து தனது கலையார்வத்தையும் வளர்த்துக்கொண்டார் என்றே சொல்லலாம்.



ஆயிரம் விளக்கு தொகுதில் நின்று முதல் முறை தோற்றார். ஆனால் அந்த தோல்விக்கு பின் தொடர்ந்து அதே தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்று  தான் தோல்விக்கு பயந்தவனல்ல என்பதை நிரூபித்தார்.

கலைஞர் அவர்களின் மறைவிற்கு பின் திமுகவின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கேள்விக்குறியை தன்னுடைய அயாராது உழைப்பின் மூலம் அசைக்க முடியாத மக்கள் செல்வாக்குடன் அரியனை ஏற்றியிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.

தன்னுடைய தந்தையை போலவே அனைத்து தோழமை கட்சி தலைவர்களையும் சமமாக மதித்து அரவணைத்து செல்வதே ஸ்டாலின் அவர்களின் தனிச்சிறப்பு. எதிர்கட்சி தலைவர்களும் கூட தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் அவர்கள் மேல் மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.




நீண்ட போராட்டத்திற்கு பின் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின் அவர்கள் தன் தேர்தல் வாக்குறுதியில் சொன்னவற்றில்  ஒன்னரை ஆண்டுகளில் முடிந்தவரையில் நிறைவேற்றிக்கொண்டு வருகிறார்.

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், கல்லூரி மாணவிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை போன்ற திட்டங்கள் மூலம் மகளிர் மத்தில் அசைக்க முடியாத நாயகனாகவே மாறிவிட்டார்.

தான் ஒருமுறை பள்ளிக்கு சென்றிருந்த பொழுது பிஞ்சு குழந்தைகள் காலை நேரத்திலேயே மிக சோர்வாக இருக்கிறார்களே என்று கேட்டறிந்து காலை உனவை சாப்பிடாமல் பெரும்பாலன குழந்தைகள் வருகிறார்களே என்ற கவலைப்பட்டார். உடனே காலைச்சிற்றுண்டி திட்டத்தை அறிவித்து அறிவுச்சுடர் தழைக்க பசியில்லா காலையை பிஞ்சுகளுக்கு பரிசளித்தார்.

இப்படி அரசியல் இலாபத்திற்கு என்றில்லாமல் மக்களின் தேவைக்கு என்றே எப்போதும் தன் சேவையை தொடர்கிறார்.

ஆரம்பத்தில் மீத்தேனுக்கு திட்டத்திற்கு கையெழுத்திட்டது. டாஸ்மாக் சாராயக்கடைகளை முற்றிலும் ஒழிக்க முடியாவிட்டாலும் குறைத்திருக்கலாம். தாலிக்கு தங்கம் தருவதை காட்டிலும் குடும்ப தலைவனின் கெளரவத்தை கெடுக்கும் விசச்சாரயத்தை அரசே நடத்துவது இழிவு என்பதையெல்லாம் ஸ்டாலின் அவர்கள் உணர்ந்து வரும்காலத்திலாவது இந்த தவறுகளை சரிசெய்வாராயின் வரலாறு நிச்சயம் திரு ஸ்டாலின் அவர்களுக்கு என்று ஒரு பெரிய இடத்தை ஒதுக்கி வைக்கும்.

மார்ச் 1இல் பிறந்தநாள் காணும் திரு ஸ்டாலின் அவர்களை தொழிற்களம் சேனல் வாழ்த்தி மகிழ்கிறது.

Post a Comment

0 Comments