Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பசி எடுக்குதா எடுடா ஸ்னீக்கர்ஸ் - மார்க்கெட்டிங் தெரிந்துகொள்ளுவோம்

    ஒரு சக்சஸ்புல் பிஸினஸ் அப்டிங்கறது பிரான்டு வேல்யூம் இன்ஸ்கிரிஸ் ஆகனும், ப்ராபிட் வேல்யூவும் இன்கிரீஸ் ஆகனும். 

பலரும் மார்கெட்டிங்க வெறும் விளம்பர வேலைன்னு மட்டும் நினைக்குறாங்க. உண்மையில் உங்க பிராண்டிற்கான சக்சஸ் என்பது உங்க புராடக்ட்ட கஸ்டமர்ட்ட கன்வே பன்றதிலிருந்து அவர கன்வைன்ஸ் பன்னி சேல்ஸ் அஹ் முடிக்குற வரைக்கும் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் நெட்வொர்கிங் பன்ற ஓவரால் கன்சப்ட்ட தான் மார்க்கெட்டிங்னு சொல்லுறோம்.

மார்க்கெட்ல என்ன தேவை இருக்குன்னு ஆராய்ந்து, அதற்கு ஒரு செயல் வடிவம் கொடுத்து, கடைசி நிலையில் வாடிக்கையாளர் கையில் அந்த புரோடக்ட்ட கொடுத்து அவரின் பீட்பேக் வாங்குற வரைக்குமான அனைத்து வேலைகளையும் தெளிவா திட்ட மிட வேண்டும். இதுல எந்த ஒரு இடத்தில சொதப்பினாலும் உங்க பிராண்ட் "டமால்" ஆயிடும்.

"பசி எடுக்குதா? எடுடா ஸ்னிக்கர்ஸ்"

என்னதான் வேர்ல்டுவைடு பிராண்டாக இருந்தாலும் சாக்லெட் கேட்டகிரில, அதுவும் இன்டியன் மார்க்கெட்ல ஸ்னிக்கர்ஸ் தனக்கான இடத்தை பிடிக்கறதுக்கு ரொம்பவே சிரமப்பட்டாங்க. 

சாக்லெட் அப்டின்னாவே குழந்தைகளுக்கானது, அது ஒரு எமோசனல் கனெக்டர் இப்டில்லாம் சொல்லிட்டு முன்ணணி பிராண்டுகளான கேட்ப்ரி, கிட்கட், கிண்டர்ஜாய்ன்னு ஓடிட்டு இருக்கும் ரேஸ்ல, ஸ்னிக்கர்ஸ் தங்களக்கான ஒரு புதிய ஸ்டேட்டர்ஜிய கிரியேட் பன்னி அதுல ஜெயிக்கவும் செஞ்சாங்க.

கொஞ்சம் நட்ஸ், வித் சாக்லெக்ட். இதுதான் பார்முலா. "பசி எடுக்கும் போது நீ, நீயா இருக்க மாட்டே எடுட்டா ஸ்னிக்கர்ஸ்" அப்படின்னு அதற்கொரு கேப்சன கொடுத்து மர்க்கெட்ல இறக்கி அடிச்சாங்க. 
இந்தியன் கிளைமேட் அன்ட் நம்முடைய உணவு கலாச்சாரத்த பொறுத்த வரைக்கும் இன்ஸ்டன்ட் உணவுவகைகள் இப்பத்தான் மெல்ல மெல்ல க்ரெளவ்த் ஆயிட்டிருக்கு. அதனால ஸ்னிக்கர்ஸ் இந்தியாவ பொறுத்த வரையில் பெரிய வெற்றியை அடையவில்லை என்றாலும் உலக அளவில் இந்த கேப்சன் பெரிய சக்சஸ்ச கொடுத்திருக்குன்னு சொல்லலாம். 
இந்த இடத்தில, ஸ்னிக்கர்ஸ் வெறும் இந்தியன் மார்க்கெட்ட மட்டும் நம்பிட்டு இருக்கிற ஒரு பிராண்டா இருந்திருந்தால் கதையோட ரிசல்ட்டே தலைகீழா இருக்கும்ங்கறது கொசுறு செய்தி. 

பின்தொடர்ந்து வாசியுங்கள்

Post a Comment

0 Comments