Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

எப்படி இருக்கிறது RRR - திரை பார்வை

  ராஜமெளலி மீண்டும் ஒருமுறை தன்னை திரைக்கதையின் ராஜாவாக  நிருபித்திருக்கும் மற்றுமொரு சம்பவம் தான் RRR.  1920களில் சுதந்திர போரட்ட காலத்தில் நடப்பதாக கதை நகர்கிறது. 


 தன் கூட்டத்திலிருந்து வலுக்கட்டாயமாக ப்ரெட்டிஷாரால் இழுத்துச்செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்ற கிளம்பி செல்லும் "கொமரம் பீம்மும்", சுதந்திர போராட்டத்திற்கான ஆயுதங்களை கொண்டு வந்த பின் தான் தன் நிலத்தில் காலை வைப்பேன் என்று சபதம் எடுத்துகொண்டு சென்ற "அல்லுரி சீத்தாராம ராஜலுவும்" எப்படி சந்திக்கிறார்கள், இருவரும் தன்னுடையைய இலக்கை அடைகிறார்களா? என்பதை மூனுமணி நேர திரைக்கதையாக தந்திருக்கிறார் இயக்குனர் ராஜமெளலி. 

  ராமன் இருக்குமிடத்தில் சீத்தா இருந்தாகனுமே என்று ராம்சரணுக்கு ஜோடியாக அலியாபட் கதாபாத்திரத்தை வலுக்கட்டாயமாக திணித்திருந்தாலும், பீம்மாக வரும் ஜூனியர் என்.டி.ஆரின் மேல் மெல்லிதான காதல்கொள்ளும் பிரிட்டிஷ் பெண் மனதை ரொம்பவே கவருகிறார். 

இருபெரும் ஹீரோக்களில் கதைப்படி இயக்குனர் ராம்சரணுக்கு ஒரு பாய்ன்ட் தூக்கலா கொடுத்திருந்தாலும், ரசிகர்களின் மனதில் என்னமோ ஜூனியர் என்.டி,ஆர்க்குதான் மார்க் அதிகம் கிடைச்சிருக்கு. விசில் சத்தம் சும்மா அதிருது.

   இருவரின் இன்ட்ரோ ஆகட்டும், இன்டர்பிளாக் பைட் சீனாகட்டும் ராஜமெளலியின் ஸ்கிரீன்ப்ளேவும், வி.எப்.எக்ஸ் காட்சிகளும் பிரம்மாண்டத்தை சும்மா அள்ளிகொட்டியிருக்கு. நாட்டுக்கூத்து பாடலை என்சாய் பன்னி பார்க்காம எந்திரிச்சு வெளிய போறான்னா நிச்சயமா ஒய்ப்போட போன்கால்ல அட்டன் பான்னத்தான் போவான். செம்ம ஆட்டம் செம்ம கலர்புல்...

   கூடவே சுத்துற சமுத்திரக்கனியும், பிளாஸ்பேக் சீனில் வரும் அஜய் தேவ்கானும் அனைத்து மொழிக்காகவும் அடித்து தினிக்கப்பட்ட சிறப்பான ஆணிகள். படத்தோட கிளைமேக்ஸ்ல "காவி" தூக்கலா இருக்கக் கூடாதுங்கறக்காக பீம்மிற்கு உதவும் நல்ல உள்ளங்களாக ஒரு இஸ்லாமிய குடிம்பத்தை காட்டியிருப்பதன் மூலம் ராஜமெளலி தான் தப்பிச்சிடலாம்ன்னு கணக்கு போட்டிருப்பார் போல. என்னதான் கதை நடந்த இடங்களாக அதிலாபாத். ஆக்ரான்னு லாஜிக் சொல்லப்பட்டாலும் கூட வழக்கமான தென்னிந்திய படமாக இல்லாமல் ஒரு பாலிவுட் படத்தின் தமிழ்டப்பிங் போல மனசுல ஏதோ ஒரு மூலையில் நெருடல் வரத்தான் செய்யுது. 

   லாஜிக் பார்க்காம சினிமா ரசிகர்களுக்காக என்று எடுக்கப்பட்டிருந்தாலும் கூட கதையோடு பெரிய ஒரு எமோசனல் பான்டிங் எதுவுமே கன்னெக்ட் ஆகமாட்டிங்குது. மெளலிகாருக்கு கொஞ்சம் பாலிவுட் மோகம் எட்டிபார்க்குது போல...

ஒரு நூற்றம்பந்து ரூபாய கொடுத்துட்டு மூனு மணி நேரத்தை என்சாய் பன்னிட்டு வர்லாம்ன்னு நினைச்சு தியேட்டருக்கு போறவங்கள நிச்சயமா RRR ஏமாத்தாது. மீண்டும் சந்திப்போம்.

- தொழிற்களம் அருணேஸ்


Post a Comment

1 Comments

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்