Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

எலக்ட்ரிக் கார்கள் வாங்கலாமா? முன்னோட்டம்

எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டிற்கான சார்ஜிங் ஸ்டேசன்களை அதிகரிக்கும் பொழுது, குறைந்தது 2 மணி நேரம் வாகனத்தை சார்ஜ் பன்ன வேண்டியிருக்கும். இன்றைய மார்க்கெட்டில் அறிமுகமாகவிருக்கும் வாகனங்களை குறைந்தது 20நிமிடம் சார்ஜ் ஏற்றினால் 80கிமி சராசரியாக பயணிக்கலாம் என்கிறார்கள். ஆனால் நீண்ட பேட்டரி லைப் வேண்டுமென்றால் குயிக் சார்ஜிங் மெத்தடுகள் பலனளிக்காது. பேட்டரி பல் இளித்துவிடும். வீட்டிலிருந்து சார்ஜிங் குறைந்தது 5 மணி நேரம் ஏற்றியிருந்தால் தான் நெடுந்தூர பயணம் மற்றும் பேட்டரிகளின் சார்ஜ்ஜிங் சைக்கில் காப்பாற்றப்படும்.


இன்றைய பெட்ரோல் பங்குகளை போல சார்ஜிங் ஸ்டேசன்களை திறந்து வியாபாரம் பார்க்க முடியாமல் போகும். காரணம் பார்க்கிங் பிராப்லம். கட்டணம் அதற்கும் சேர்த்து வசூலிப்பதாக இருப்பின் அதற்கு பெட்ரோல் விலையே தேவலை என்று தோன்றிவிடுமே?

அதனால் ஹோட்டல்கள், பார்க்கிங், மால்கள் போன்ற மக்கள் புழங்கும் இடங்களிலெல்லாம் சார்ஜிங் போர்ட்களை மாட்டி வைத்திருக்கலாம்.தவிர்த்து குறைந்தது 200கிமி கெப்பாசிட்டி உள்ள பேட்டரிகளை கார்களில் பொருத்தியிருக்க வேண்டும். ஸ்டெப்னி டயர்களை போல ஸ்டெப்னி பேட்டரிகளை அட்டாச்டாக வைத்திருக்க முடியுமா?

 ஆக, ரன்னிங் டைமிலேயே சார்ஜிங் ஏறும்படியான திட்டத்தோடு எலெக்ரிக் வாகனங்களை தயாரிக்க வேண்டியிருக்கும்.

சோலார், மேக்னடிக் எனர்ஜி தவிர்த்து இதர எனர்ஜி சோர்ஸ்களையும் ஆராய்ந்து அதை அடுத்தகட்ட சோதனைகளுட்படுத்தி வாகனங்களில் பொறுத்த திட்டமிடக்கூடும்.



மார்க்கெட்டில் சொல்லப்படும் வகையில் ஒருமுறை சார்ஜிங் பன்னினால் 500கிமீ சாலை பயணம்  என்பதெல்லாம் நம்மூர் சாலைகளை நம்பி அப்படியே ஒத்துவரும் என்று மனக்கணக்கு போடமுடியாது. ஒவ்வொருமுறை புல்லிங் மாறும் போதும் பேட்டரி மின்சாரத்தை இழுத்து தள்ளிவிடும். 


சரி வீட்டிலியேயே எல்லோரும் இரவு ஒரே நேரத்தில் சார்ஜ் போடுகிறார்கள் என்றால் இரவு நேர ஏசி, மின்விசிரி, இதர சாதனங்களோடு இந்த சார்ஜிங் வேலையும் அனைத்து வீடுகளிலும் நடக்குமேயானால் மின்சாரம் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக இழுத்து தள்ள வேண்டியிருக்கும். இன்றைய சாதாரன தேவைக்கே தள்ளாடும் அரசுகள் அத்தகைய சூழலில் அணுமின்சாரமே தீர்வு என்று நம்பவைத்து சுடுகாடுகளின் மத்தியில் குடியிருப்பை கட்டியதை போன்ற பய உணர்வுடன் நம் சந்ததிகளை வாழ நிர்பந்திக்க கூடும்?

எலட்ரிக் வாகனங்களை 100% போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியுமா? என்று கேட்போமேயானால் இன்றைய நாளில் வாய்ப்புகள் மிகக்குறைவே. இருப்பினும் எதிர்காலத்தில் இதை சரிசெய்யவும் 100% வாய்ப்புகள் இருக்கிறது.

சுயசார்பு மின்சார தயாரிப்பு எந்த அளவில் எடுபடுமோ அதைக்கொண்டே இதன் வெற்றி இருக்கிறது. வெறும் வாகன தயாரிப்பில் கவனம் செலுத்துவதை விட சுயசார்பு மின்சார உற்பத்திக்கான வேலைகளை பெரிய நிறுவனங்கள் ஈடுபடுவதே இதற்கான திறவுகோலாக இருக்கும்.



Post a Comment

0 Comments