Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

வாடிக்கையாளர்களின் சைக்காலஜி தொழில் பழகு I தொடர்பதிவு 09 I I Business Secrets I #2. கஸ்டமரை கண்டுபிடியுங்கள்

2 பில்லியனுக்கு அதிகமாக முதலீடினை குவித்து சைனாவின் மிகப்பெரிய் OFO வாடகை சைக்கிள் தமது திட்டத்தை சீனாவை தாண்டி உலகின் முன்னணி நாடிகள் பலவற்றிற்கும் பரப்பியது.    

ஐடியா என்னவோ சூப்பர்தான். ஆனா சூடு பிடிக்காம துருப்பிடித்து போனது? வாடிக்கையாளருக்கு எது உதவும் என்பதை தெரிந்து கொண்டு அதை தானே கொடுத்தோம்?? பின்ன எப்படி தோல்வியடைந்தோம்ன்னு OFO மூளையை கசக்கி பிழிஞ்சுட்டு இருக்கு.


அதென்ன ஐடியா? ஏன் OFO தோற்றது?



சிம்பிளா சொல்லனும்னா OFO என்பது ஒரு வாடகை வைக்கிள் கம்பெனிங்க. நகரின் பிராதன இடங்களில் கேட்பாரற்ற இடங்களில் கூட இவர்களின் சைக்கிள் அனாமத்தா நின்னுட்டு இருக்கும். நோ செக்யூரிட்டி. ஆனா அந்த சைக்கிளின் லாக் ஓப்பன் ஆகனும்னா OFO ஓட ஆன்லைன் ஆப்ல லாகின் பன்னி அதன் மூலமா நீங்க மெம்பர் ஆகியிருக்கனும். GPRS தொழில்நுட்ப உதவியுடன் அந்த சைக்கிள்கள் இயங்கும். திருடனும்னு நினைச்சா மாட்டிக்குவீங்க.

பிளான் என்னன்ன, நகரின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவம் சுற்றுச்சூழல் மாசுவிலிருந்து பாதுகாக்கவும் லட்சக்கணக்கான சைக்கிள்களை  நகரின் முக்கிய பகுதிகளில் OFO நிறுத்தி வைத்திருக்கும். பயனாளிகள் தங்களுக்கு போகவேண்டிய இடத்திற்கு தாங்களே எடுத்துகொண்டு ஓட்டிச்சென்று வேற பகுதியில் அப்படியே நிறுத்திவிட்டு போய்விடலாம். வெரி சிம்பிள் அன் ஸ்மார்ட் ஐடியாஜீ!!! பக்கா!!! 


இனிமே பஸ்ஸிற்காக கால்கடுக்க நிக்க வேண்டியதில்லை, சுற்றுச்சூழலையும் பாதிக்காது, உடம்புக்கும் நல்லது… சூப்பர் ஜீ சூப்பர்ஜீ ந்னு மக்கள் கொண்டாடி தீர்த்திருக்க வேண்டாமா??


க்ஹூம்ம்… அட, நம்ம கோயம்புத்தூர்ல கூட சமீபத்தில் (2019) மஞ்சாக்கலர்ல நூற்றுக்கணக்கான சைக்கிள்கள் இருந்துச்சே பார்த்தீங்களா?? ஆமாங்க, இந்தியாவில், அதுவும் நம்ம தமிழகத்தின் கோவை மாநகராட்சியோட கைகோர்த்து OFO சைக்கிள்களை  இறக்கி விட்டாங்க…


ஆப் (App) வொர்க் ஆச்சோ இல்லையோ நல்லா ஆப்பு வெச்சாங்க நம்ம மக்கள். சைக்கிள எடுத்துட்டு போயி அதோட சாமன்களை உடைத்து எடுப்பது… அசிங்க அசிங்கமா பெயின் அடிச்சு நாஸ்த்தி பன்னுவது என எதெல்லாம் ஆகாதோ அதெல்லாம் வெச்சு சிறப்பாக செஞ்சிங்….


துண்டை காணோம் துணிய காணோம்னு வந்த விலைக்கு எடைக்கு போட்டுட்டு இந்தியாவை விட்டே ஓடி போயிடுச்சு அந்த மில்லியன் டாலர் நிறுவனம்.


உங்கள் வாடிக்கையாளருக்கு என்னதான் அது உபயோகமான பொருளா இருந்தாலும் அந்த பொருளை அவர்கள் எப்படி பயன்படுத்துவார்கள் என்பதை நன்றாக தெரிந்துகொண்டு, அவர்களின் பழக்க வழக்கங்களை புரிந்துகொண்டு பின்னர் வணிக சந்தையில் அறிமுகபடுத்துங்கள். 


OFO போலவே Bounch-இன் வாடகை வாகனங்கள் பெங்களூர் சாலைகளில் சக்கை போடு போடுவதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். அனைத்து முன்னணி IT கம்பெனிகளில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான யுவன்/யுவாதிகள் பெளன்ஸ் சவாரியை ரொம்பவும் லைக் பன்னி வரவேற்கவும் செய்திருக்கிறார்கள். 


ஒரு சின்ன கதை, அந்த குக்கிராமத்தின் பெருகி வரும் மக்கள் தொகையை கடுப்படுத்த அரசு அதிகாரிகள் ஊர் முழுவதும் காண்டம் இலவசமா கொடுத்தார்கள். மக்களுக்கு அதை எப்படி பயன்படுத்தனும்ன்னு டெமோ காமிப்பதற்காக, காண்டம் எடுத்து தனது கட்டை விரலில் இழுத்து மாட்டி.. பாருங்க இப்படி இத மாட்டிக்கிட்டு உடலுறவு வெச்சுகிட்டா குழந்தை பிறக்காது. இனிமே இத மாட்டிகிட்டு உடலுறவு வெச்சுகங்கன்னு கொடுத்துட்டு போனாங்க.


அடுத்த வருசம் போய் பார்த்தால் முன்பை விட அதிகமா ஜனத்தொகை பெருக ஆரம்பிச்சுடுச்சு. என்னடான்னு விசாரிச்சதில் அதிகாரிகள் தலையில் அடித்துக்கொண்டார்கள். காரணம்,


எல்லோரும் உடலுறவு வைக்கும் பொழுது தங்கள் கட்டை விரலில் காண்டமை மாட்டிக்கொண்டு உடலுறவு வெச்சிகிட்டாங்கலாம்!!(?).


ஆக, வாடிக்கையாளர்களின் பயன்பாடு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை விரல் நுனியில் வைத்துக்கொண்டு உங்கள் புரோடக்டை வடிவமையுங்கள். 


ஏப்ரல் மாத இறுதிகளில் பள்ளி முழு ஆண்டு விடுமுறை தினங்களை குறிவைத்து ஸ்போக்கன் இங்லீஸ், கம்யூட்டர் கிளாஸ், நீச்சல் பயிற்சிகள் என வித விதமான சம்பர் கிளாஸ் நடத்தும் நிறுவனங்களின் விளம்பரங்களை காணலாம் அல்லவா?


அவர்கள் டார்கெட் யார் என்று பார்ப்போம். 


ஒரு நீச்சல் பயிற்சி வகுப்பு நடத்தும் நிறுவனத்தின் விளம்பர போஸ்டர் ஒன்றை தேர்வு முடிந்து வெளிவரும் போது ஒரு மாணவன் கண்ணிற்கு தெரியும்படி ஒட்டப்படிருக்கிறது. இப்ப அந்த மாணவந் அதில் சேர ஆசைப்பட்டு அவனின் பெற்றோருக்கு தெரிவிக்கிறான். இது ஒரு வகை ஸ்ட்ரேடர்ஜின்னு வெச்சுக்குவோம்.


ஒரு அம்மா சூப்பர் மார்கெட் போறாங்க. அங்கே அப்டியே மேலே போயி ரெடிமேட் டிரஸ் செக்சன்ல ரெண்டு டாப்ஸ் எடுத்துட்டு பில்கவுண்டர்ல நிற்கும் போது அருகில் அடுக்கிவைக்கபட்டிருந்த அழகிய பேம்ப்லெட்டை எடுத்து பார்க்கிறார். அதில் 30% ஸ்பெசல் ஆஃபராக உங்கள் பிள்ளைகளை நீச்சல் பயிற்சியில் சேர்த்து விடுங்கள் என்று இருக்க்கிறது. பில் போட்டபடியே அந்த பேம்லெட்டை எடுத்து தனது கேண்ட்பேக்கில் போட்டபடி நகர்கிறார் அந்த பெண்மனி. இது இன்னொரு ஸ்ட்ரேட்டர்ஜி.


இப்ப, சரியா சொல்லுங்க பார்க்கலாம். அந்த நீச்சல் நிறுவனத்தின் உன்மையான வாடிக்கையாளர் யார்? அந்த மாணவனா அல்லது அந்த பெண்மணியா??


என்னதான் அந்த மாணவனுக்கு விருப்பம் இருந்தாலும் கடைசியில் முடிவு எடுக்க வேண்டிய அதிகாரத்தை கொண்டவர் பெற்றோர்கள் தான். அப்படி இருக்க நேரடியாக சூப்பர்மார்கெட் பேம்ப்லெட்டில் பெற்றோரிடமே தெரிவித்துவிடுவது தான் அதிகம் பலனளிக்கும். இனி அந்த நிறுவனம் தன்னிடம் பயில வரும் குழ்ந்தைகளை பத்திரமாக பாதுகாத்து அவர்களுக்கு பிடித்தார் போல நடந்துகொண்டால் போதுமே???!!


இதில் இந்த ரெண்டு பேருமே வாடிக்கையாளர்கள் தான். இருந்தாலும் நீங்கள் திருப்தி படுத்த வேண்டியது முதலில் பெற்றோர்களை தான். ஏனென்றால் அவர்கள் தான் "வாங்கும் முடிவை இறுதியாக எடுக்க கூடியவர்கள்".


இதே பார்முலாவை ஐஸ்கிரீம் விற்பனையிலோ அல்லது திருவிழாவில் பலூன் விற்கும் போதோ பயன்படுத்தி விடாதீர்கள். அங்கு உங்கள் வாடிக்கையாளர்கள் முதலில் குழந்தைகள் தான். அவர்கள் அடம்பிடித்து வாங்க வைத்து விடுவார்கள்.


இந்த ரெண்டு பார்முலாவை விடவும் இன்னொரு சக்திவாய்ந்த பார்முலாவை முன்னணி கல்வி நிறுவனங்கள் பின்பற்றுவதை பார்கலாம். அதுதான் "கெளரவத்தை கொம்பு சீவி விடுவது" என்னும் பார்முலா.


தொடர்ந்து வாசிப்போம்

முந்தைய பதிவுகளுக்கு

Post a Comment

0 Comments