Ticker

6/recent/ticker-posts

ஆழ்தூக்கத்தில் காணும் கனவுகள் நம் நிஜ வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுத்துமா? உண்மை என்ன?

   இந்த பிரபஞ்சத்தில் நம்மால் தெளிவாக சொல்ல முடியாத பல அதிசயங்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.  அத்தகைய அதிசயங்களில், கனவுகளும் அதன் தாக்கங்களும் குறித்த ஆராய்ச்சிகளை உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். 

     வெறும் கனவு தானே என்று அவ்வளவு ஈஸியா சொல்லிட முடியாதுங்க. நம்மூர் சித்தர்களிலிருந்து சிக்மண்ட பிராய்ட் (Sigmund freud) வரை கனவுகளின் உளவியல் (Dreams Psychology) குறித்த லட்சக்கணக்கான புரிதல்களை நாம் உள்வாங்க முடியும். 

ஒரு சாதாரண கனவு, நம் நிஜ வாழ்வில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? நாம் காணும் ஒவ்வொரு கனவும் ஏதேனும் ஒரு அர்த்தத்தை நமக்கு உணர்த்துகிறதா? ஆழ்மனதிற்கும் கனவுக்குமான கனெக்சன்ஸ் (Connection) என்ன? கனவு நிஜத்தில் பழிக்குமா? இப்படி தொடர்ந்து கேட்டுக்கொண்டே போகலாம். 

  கனவுகளும் அதன் உளவியல்களும் என்ற தலைப்பில் ஒரு நெடுந்தொடரே கனவுகளின் ரகசியஙகள் குறித்து எழுத முடியும். அத்தனை ஆச்சர்யங்களை கனவுகள் சுமந்துகொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் பல உண்மை சம்பவங்களில் கனவுகளின் நிழல் உலக சாம்ராச்சியம் வியாபித்து நிறைந்து கிடக்கின்றது.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஒவ்வொரு கனவிற்கு பின்னாலும் ஒரு "நிஜம்" அடங்கியிருக்கிறது என்ற உண்மையை உலகம் ஒரு கோட்பாடாய் ஒத்துக்கொண்டிருக்கிறது.

   ஆம், நாம் தூக்கத்தில் காணும் ஒவ்வொரு கனவிற்கு பின்னாலோ அல்லது முன்னாலோ ஒரு நிஜமான சம்பவம் கண்டிப்பாக ஒழிந்து கொண்டு இருக்கிறது.

    எங்கோ ஓர் இடத்தில் ஒருவர் தனது தூக்கத்தில் காணும் ஒரு கனவு இன்னொருவரது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி விட முடியும். மாற்றியும் காட்டியிருக்கிறது இதை நம்புவதற்கு கஷ்டமாக இருந்தாலும் இது தான் உண்மை.


   கனவுகளில் பல வகைகள் இருக்கின்றன. சில கனவுகள் உடல்சார்ந்த தாக்கத்தையும், சில கனவுகள் உணர்வு சார்ந்த தாக்கத்தையும் நடத்துவது இயல்பு.

ஆனால், எக்ஸ்ட்ரீம் லெவல் கனவுகள் (Extreme Level Dreams) இருக்கின்றன. அத்தகைய கனவுகள் ஒரு தீர்க்கதரிசியின் வாக்கு போல ஆச்சர்யம் அளிக்கின்றது எதிர்காலத்தை அப்படியே புட்டு புட்டு வைத்திருக்கிறது. சில கனவுகள் பூர்வ ஜென்ம கதைகளை நிகழ்கால மனிதர்களிடம் ஆதாரத்துடன் (Proofs) நிரூபித்து காண்பித்திருக்கிறது.

   இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது. கனவுகளுக்கு இத்தகைய சக்திகள் எங்கிருந்து கிடைக்கிறது என்று ஒரு பெரிய நெடுந்தொடராகவே எழுதலாம்.

   ஏலியன்கள் (Alien) கனவுகளின் வழியே நுழைந்து மனிதர்களின் பரிணாம வளர்ச்சி குறித்து அறிந்துகொள்கிறார்கள் என்ற ஒரு நம்பிக்கையும் உண்டு இங்கே.

எது எப்படியோ?!! நாம் தூக்கத்தில் காணும் கனவுகளுக்கு பின்னால் உள்ள அறிவியல் / நம்பிக்கை என்ன? ஆழ்மனதுடன் கனவுக்கு உள்ள பந்தமா அல்லது அது ஒரு அமானுஷ்ய சக்தியின் வெளிப்பாடா?  

     இந்த கேள்விக்கான சரியான பதிலை தெரிந்துகொண்டு விட்டால் போதும். உங்க வீட்டிலோ, நிறுவனத்திலோ கல்லா பெட்டிக்கு பின்சுவற்றில் ஒரு மந்திர தகடு மாட்டி இருந்தால் அது எப்படி வேலை செய்கிறது என்கின்ற நிஜத்தை நீங்களாகவே அறிந்துகொள்வீர்கள்.

தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளில் விளக்கமாக இது குறித்து பேசுவோம். உங்கள் கருத்துகள், ஆலோசனைகள், சந்தேகங்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். ஆராய்வோம் தொடர்ந்து.

Post a Comment

1 Comments

  1. sir... thookkathil kanavu morning time mattum palikkuma? illa day time la vara kavum palikkuma?

    ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்