Ticker

ஆன்லைன் UPI வேலட்டிற்கு இனிமே கட்டணம் செலுத்த வேண்டும் உண்மையா?

UPI பரிவர்த்தனைகளுக்கு இதுவரை எந்த சேவை கட்டணமும் இல்லை. வழக்கம் போல நண்பர்களுக்கு அனுப்புவதில் எந்த சிக்கலும் இல்லை. மாறாக வணிக ரீதியாக, பெட்ரோல் உள்ளிட்ட ஒருசில சேவையின் போது UPI வேலட்டிலிருந்து பணம் அனுப்பினால் மட்டுமே குறிப்பிட்ட அளவிலான சேவை வரி வசூலிக்கப்படும்.

முட்டைக்கு 40பைசா விலையேறினாலே ஆம்லெட்க்கு 5ரூபா விலையேறும். பால் லிட்டருக்கு 2ரூ ஏறினால் 1கப் டீயின் விலையில் 2ரூபாயை ஏற்றி விடுவார்கள். இங்கு அறம் சார்ந்த வணிகத்தை தொலைத்து பல ஆண்டுகள் ஆகியாயிற்று. 

இப்படி இருக்கையில், UPI பரிமாற்றத்தில் 1.1% வரை பிடித்தம் என்பது சாதாரணமாக கடந்து செல்ல வேண்டிய அன்றாட நிகழ்வுதான். எந்த சேவையும் இலவசம் கிடையாது. அதையும் தாண்டி ஏதேனும் இலவசமாக கிடைக்குமானால் ஒன்று உங்கள் உழைப்பை திருடும் அல்லது இன்பர்மேசனை திருடும். மாற்றாக, வெறும் சேவையாற்ற இங்கு யாரும் உத்தமர்கள் இல்லை.

டிஜிட்டல் பண பரிமாற்றம் தவிர்க்க முடியாதது. இப்போதைய தேவை பள்ளியிலருந்தே Money Psychology பற்றிய வகுப்பெடுத்தல் நலம்.

மிகைநுகர்வுக்கும் தேவைக்கும் இடையேயான வித்தியாசங்கள். இருப்பில் இருக்கும் பணத்தை பெருக்கும் திட்டம்சார் அறிவு, சேமிப்பிற்கும் தவணைமுறை நுகர்வுக்குமான நெறிமுறைகள் என குழந்தைகளும், அலுவலக பணியாளர்களுக்கும் கற்றுக்கொடுக்க மேல்மட்டத்தில் உள்ளவர்கள் ஆலோசனை செய்வது எதிர்காலத்தில் ஒன்றுபட்ட இந்தியாவில் தமிழகம் மிளிர்வதற்கு வழி ஏற்படுத்தி தரும். மாற்றாக சமூகஊடகத்தில் பொறுமித்தள்ளுவதால் பயனேதுமில்லை இனியவர்களே....

#பணம்_செய்வோம்

#தொழிற்களம்_அருணேஸ்

Post a Comment

0 Comments