Ticker

புற்றுநோய்க்கான வெளிநாட்டு மருந்துகளின் இறக்குமதி வரி ரத்து- மத்திய அரசு அரசாணை

 மத்திய ஒன்றிய அரசு சத்தமில்லாமல் ஒரு வேலையை செய்து முடித்திருக்கிறது. நேற்றைய தினம் (30.03.2023) புற்று நோய் மற்றும் ஒரு சில அரியநோய்களுக்கான மருந்துகளை 💊 வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொழுது முற்றிலுமாக வரி விலக்கு அளித்து ஆளும் மோடி அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. 

இதன்மூலம் இறக்குமதி வரியால் அதிக விலை கொடுத்து வாங்கும் இந்திய பயனாளிகளுக்கு அவர்களின் மருந்து செலவில் கனிசமான தொகை நிச்சயமாக சேமிக்கப்படும் என்பது 100% உண்மை. இந்த சாதனையை(!?) கொஞ்சமும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் மத்திய அரசு செய்திருக்கிறது.

இது எந்த அளவிற்கு பலனளிக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டுமேயானால், 2021 ஆகஸ்ட்டில் நாமக்கல், குமாரபாளையத்தை சேர்ந்த குழந்தை மித்திரா அரியவகை (ஸ்பைனல் மஸ்குலர் ஆட்ரோஃபி) நோயினால் பாதிக்கப்பட்டு அதன் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்து உடனடியாக "ஸோல்ஜென்மா" என்னும் மருந்தை வரவலைக்க கிட்டத்தட்ட 16கோடி தேவைப்படுகிறது என்ற மித்திராவின் பெற்றோர்களின் கதறல்கள் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் ஒலித்தது.

 தொடர்ந்து பலரும் நிதி உதவி அளித்து இறுதியாக மத்திய அரசு தலையிட்டு 35% வரிக்கான விலக்கு அளித்து (கிட்டத்தட்ட வரி மட்டும் 5கோடி) குழந்தையின் உயிரை காப்பாற்றியது. #SaveMithra ஹேஸ்டேக் சமூகவலைதளம் முழுவது பரவிக்கிடந்தது உங்கள் நியாபகத்துக்கு வரலாம்.

இப்படியான வெளிநாட்டு மருந்துகளுக்கு தான் மத்திய அரசு இப்போது முழு விலக்கு அளித்து அரசாணை வழங்கியிருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியான வரவேற்க்கதக்க செய்தி.

கவனிக்க, உலக மருந்து உற்பத்தியில் இந்திய நிறுவனங்கள் மட்டுமே கிட்டத்தட்ட 90,000 கோடி ரூபாய்க்கு மேலான உற்பத்தியை உள்நாட்டு சந்தையில் வணிகம் செய்கிறார்கள். சீனா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் பலவற்றிற்கும் இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் 2இலட்சம் கோடி வரையிலான ஏற்றுமதி வணிகம் நடைபெறுகிறது. 

 2016 ஆம் ஆண்டுகளில் இதே மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வரவலைக்கப்படும் இந்திய நிறுவனங்கான வெளிநாட்டு மூலப்பொருட்கள் இறக்குமதிக்காக இருந்த வரிவிலக்கு சலுகையை ரத்து செய்து  22% வரி வரை உயர்ந்து இந்திய நிறுவன மருந்துகளின் விலையேற்றத்துக்கான காரணமாக இருந்தது என்றும்,

அதே நேரத்தில் மருந்து உற்பத்தியில் 100% அந்நிய முதலீட்டிக்கான கதவை திறந்து விட்டது. இதனால் பல இந்திய நிறுவனங்களை கார்ப்பரேட் வெளிநாட்டு நிறுவனங்கள் விழுங்கியதாகவும் செய்திகள் வந்தன.

இங்கே கொஞ்சம் உற்றுநோக்கும்படியாக சொல்வதாயின், வெளிநாட்டு மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வரி விலக்கு கொடுக்கும் போது அந்நாட்டு ஏற்றுமதி அதிகரிக்கும். அதனால் வணிக ரீதியாக அந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கே இலாபம் அதிகரிக்கும். ஏற்கனவே இந்திய மருந்து தயாரிப்பாளர்கள் உலக தரத்திற்கு போட்டியாக சந்தையில் உள்ள நிலையில் இந்திய நிறுவனங்களில் அம்மருந்துகளின் பெடெண்ட் உரிமையோ அல்லது நிகர சிகிச்சை மருந்துகளையோ உற்பத்தி செய்ய ஊக்குவித்தால் அது இந்திய பொருளாதரத்திற்கு நன்மையளிக்கும். 

மாறாக, இந்த வரிசலுகை என்பது ஒருவித பொருளாதார சுரண்டலோ என்ற கேள்வியும் சாமானி மக்களுக்கு எழாமல் இல்லை. ஆனாலும் இந்நிய நோயாளிகள் பலனாளியாவர்கள் என்பதால் எதிர்ப்பாளர்களின் வாயிற்கு பூட்டு போட்டிருக்கிறது.

எப்பேர்பட்ட நோயாகினும் அதற்கு கோடிக்கணக்கில் செலவளித்து தான் உயிரை காப்பற்ற முடியுமேயானால் அந்த மருந்தானது சமூக விசமே ஆகும்.

துயநீரும், கல்வியும், தரமான மருத்துவமும் இலவசமாக தருவது அரசின் கடமை. அதே சமயம் இந்திய நிறுவனங்களையும் வளர்த்தெடுக்க அரசு ஆவண செய்ய வேண்டும். செய்கிறது என்றே நம்புவோமாக...

#தொழிற்களம்_அருணேஸ்

Post a Comment

0 Comments