குறைந்த முதலீட்டில் துவங்ககூடிய ஐந்து புதிய தொழில்கள் பற்றிய விபரங்களை இந்த பதிவில் காணலாம்.
#1. ஆன்லைன் மீட் டெலிவரி பிஸினெஸ்
சிக்கன், மட்டன், பிஸ் உள்ளிட்ட ப்ரெஸ்னான இறைச்சி வகைகளை ஆன்லைன் மூலம் ஆர்டர்களை பெற்று டோர் டெலிவரி செய்யலாம். உங்களுக்கு இறைச்சிகளை கையாளுவது குறித்த அனுபவம் இல்லை எனில் முதலில் அருகில் உள்ள ஒரு இறைச்சி கடையில் டையப் முறையில் மொத்த விலைக்கு வெட்டி வாங்கி சரியான பேக்கிங் செய்து அதை சந்தைபடுத்துங்கள். குறித்த நேரத்தில் தரமாக கொடுப்பீர்களேயானால் வாடிக்கையாளர்களை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள முடியும்.
இதே போல காய்கறி, மளிகை, பழங்கள், பிஸ்கட், கேக் என அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் எடுத்து டெலிவரி செய்யலாம்.
#2. பிட்னெஸ் டிரைனர்
ஆன்லைன், ஆப்லைன்னு இப்ப அதிக அளவில் பிட்னெஸ் கன்சல்டன்ட்க்கு ஏகப்பட்ட மார்க்கெட் இருக்குங்க. உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்வதோடு மற்றவர்களுக்கும் அதை சொல்லிக்கொடுத்து அதன் வருமானம் ஈட்டலாம். சிலர், கூடவே ஹெல்த் ட்ரிங்ஸ், ஃபுட் வெரைட்டீஸ், எக்யூப்மென்ட்ஸ்கள் சேல்ஸ் செய்தளதன் மூலமும் வருமானத்தை அதிகரிக்கலாம்.
#3. மேட்ரிமோனியல் பிஸினஸ்
மேட்ரிமோனியல் வெப்சைட் மற்றும் மொபைல் ஆப்கள் பல ரெடிமேடாகவே மார்க்கெட்ல கிடைக்கும்ங்க. திருமண வரன்கள் குறித்த தகவல்களை பாதுகாப்பாக வைத்து நேர்மையாகவும், மனசாட்சிக்கும் உட்பட்டு இந்த தொழிலில் இறங்குனா நிச்சயமாக வெற்ற் பெறலாம். பொதுவாக ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு அல்லது மறுமணம் போன்ற தனித்துவமான வரன் தேடுதலுக்கு உதவும்படியாக உங்கள் சேவைகளை அமைத்தால் மார்க்கெட்டில் உங்களுக்கு தனி அடையாளம் எளிதாக கிடைக்கும். வருமானமும் குறையாது.
#4. மினி நர்சரி பிஸினெஸ்
வீட்டில் காலி இடம் அல்லது மொட்டை மாடியில் கிரீன் நெட் அடித்து குறிப்பிட்ட செடி வகைகளை வளர்த்து அதை விற்பனை செய்யலாம். பூச்செடி, மணி பிளான்ட், லைக்கி மூங்கில் மற்றும் இன்டோர் பிளேன்ட்களை தேர்வு செய்து வளர்த்து அதை விற்பனை செய்யாலாம். மேலும் பூந்தொட்டிகள், உரங்கள், கலர் மீன்கள் போன்றவைகளையும் விற்பனை செய்யலாம். ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக மாற்றவும் இந்த நர்சரி பிளினஸ் நல்லதொரு வாய்ப்பாக இருக்கும்.
#5. சோசியல் மீடியா மேனேஜர்
கொஞ்சம் கன்டென்ட் ரைட்டிங் ஸ்கில்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் நாலேஜ் இருக்கவங்க இதை முழுநேரம் அல்லது பகுதி நேர தொழிலாக செய்யலாம். இப்பெல்லாம் வான்டேட் விளம்பரங்களில் தங்கள் நிறுவனத்திற்கென சோசியல் மீடியா மேனேஜர்கள் தேவை என்ற விளம்பரங்களை அதிக அளவில் காண முடிகிறதல்லவா? குறிப்பிட்ட தொகைக்கு ஒப்பந்தம் செய்துகொண்டு இந்த வேலையை எடுத்து செய்யலாம். வருமானம் நிச்சயமாக கிடைக்கும்.
மேலும் இது போன்ற புதிய தகவல்கள், தொழில் வாய்ப்பு பற்றிய விபரங்களை தொழிற்களம் வெப்டைட்டில் தெரிந்துகொள்ளுங்கள்.
0 Comments
உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்