Ticker

6/recent/ticker-posts

உங்கள் தொழிலை மற்றவர்களிடம் எப்படி அறிமுகம் செய்ய வேண்டும்?

 புதியதாக  ஒருவரை சந்திக்கிறோம் அல்லது ஒரு அரங்கத்தில் பார்வையாளர்களிடம் பேச வாய்ப்பு கிடைக்கிறது என்றால் அந்த சந்தர்ப்பத்தில் நமது தொழில் பற்றி எப்படி அறிமுகம் செய்வது என்பதை பார்ப்போம்


உதாரணத்திற்கு, நான் என்னுடைய பிஸினஸ் பற்றி சொல்வதானால்,

ஹாய் சார்! ஐயம் அருணேஸ், நான் பிரிண்டிங் & அட்வர்டைஸ்மென்ட் பிஸினஸ் பன்னிட்டு இருக்கேன். என் கம்பெனி நேம் ரென் டிஜிட்டல் கிராபிக்ஸ். இப்படி மிடில் ஆவ்ரேஜ் ஆஹ் சொல்லலாம். ஆனா, இது அவ்வளவா எதிரில் இருப்பவரின் மனதில் ஒட்டியிருக்காது. அவரும் அப்படியா சார். சந்தோசம்ன்னு சொல்லிட்டு மறந்துடுவார்.

சோ, நாம நம்ம பிஸினஸ் பற்றி எப்படி அவருக்கு அறிமுகம் செய்கிறோம் என்பதை பொறுத்தே நமக்கான மார்க்கெட்டை உருவாக்க முடியும்.

எடுத்த உடனே உங்களை அறிமுகம் செய்யாதீர்கள். முதலில் அவருடன் ஒரு இணக்கமான உறவை உண்டாக்குங்கள். உங்கள் சேவையை அறியும் முன் அவருக்கு உங்கள் மீதான தனிப்பட்ட விருப்ப உனர்வை உண்டாக்க வேண்டும். 

ஒருத்தரை சந்திக்கறீங்க, ஹாய் சார் எப்படி இருக்கீங்க? ஆக்சுவளி நீங்க சென்னைங்களா?  இப்படி எதாவது அவர் பதில் சொல்லும்படியாக பேச்சை துவங்குங்கள். அவர், இல்லைங்க நான் கோயம்பத்தூருங்கன்னு சொல்றார், உடனே சூப்பர் சார், நானும் கோயம்பத்தூர் பக்கம் தான் பொள்ளாட்சிங்க.. இப்படியாக பேச்சை வளருங்கள். பிறகு அவருடைய கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படியாக அவரைப்பற்றி, அவரின் தொழில் பற்றி அக்கறையாக கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்.

இப்படி நீங்கள் பேச்சை துவங்கும் முன் ரொம்ப கான்பிடென்ட்டாக பீல் பன்னுங்க. உங்களுடைய உடை, பாவனை அனைத்தும் கம்பீரமாகவும் அதே சயமயம் ப்ரெண்டிலியாகவும் வைத்துக்கொள்ளுங்கள். பார்வையில் கணிவும் பேச்சில் துல்லியமும் இருக்க வேண்டும்.

நேரடியாக உங்க பிஸினஸ் பற்றி அறிமுகம் செய்தபின் உங்களின் பிஸினஸ் மூலம் அவருக்கு ஏதேனும் பலன் கிடைக்குமா என்பதை கண்டறிந்து அதை அவருக்கு உணர்த்துங்கள். அல்லது உங்கள் பொருட்கள் அல்லது சேவையில் ஏதேனும் ஆஃபர் இருந்தால் அதை அவருக்கு தெரிவித்து உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்க சார் என்று அந்த பேச்சை நிறைவு செய்யுங்கள்.

அதேபோல, எடுத்த உடனே உங்க போன் நம்பர் சொல்லுங்க சார் என்று கேட்டு அவரை சங்கடத்திற்கு உள்ளாக்காமல் உங்களை தொடர்புகொள்ளும்படியான இணையதள விபரத்தையோ அல்லது பிஸினஸ் கார்டையோ அவரிடம் கொடுத்துவிட்டு ஒரு புன்னகையோடு பாய் சொல்லி விடைபெறுங்கள்.

நிச்சயம் உங்களை அவர் நினைவில் வைத்துக்கொள்வார்

Post a Comment

0 Comments