Ticker

6/recent/ticker-posts

வாடிக்கையாளர்களின் சைக்காலஜி தொழில் பழகு I தொடர்பதிவு 12 I I Business Secrets I #3. மக்கள் தொடர்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள்

 #3. மக்கள் தொடர்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள்

சந்தையில் வாடிக்கையாளர்களின் தேவைகளை ஆராய்ந்து சொல்வதும் மற்றும் நிறுவனத்தின் தயாரிப்பை சரியான வழிகளில் வாடிக்கையாளருக்கு கொண்டு சேர்ப்பதுமான ஒட்டுமொத்த  செயல்முறைகளை ஆங்கிலத்தில் "மார்கெட்டிங்" என்று சொல்வார்கள்.

நாம் இதனை "சந்தைபடுத்துதல்" எனும் அடையாளத்தோடு மேற்கொண்டு தொடரலாம்.


கார்ப்ரேட் நிறுவனமா இருந்தாலும் கட்டன்சாயா விற்றாலும் அடிப்படையில் அனைவருக்கும் பொதுவான விதிகள் சந்தைபடுத்துதலில் உண்டு. அனைத்திற்குமான மூலமந்திரமே  "வாடிக்கையாளர்".  ஒரு பொருளை தயாரிப்பதில் எவ்வளவு கவனம் இருக்க வேண்டுமோ அதைவிட இரண்டு மடங்கு பொறுப்பும், புத்திசாலிதனமும் சந்தைபடுத்துவதில் காண்பிக்க வேண்டும். வாடிக்கையாளருக்கு நமது சேவைகளை தெரிவிப்பதன் மூலம் அவராகவே விரும்பி நமது தயாரிப்பை வாங்கும்படி செய்வதே மார்கெட்டிங்கின் உண்மையான வெற்றி. 


சரி கொஞ்சம் பதில் சொல்றீங்களா??


நீங்கள் உபயோகிக்கும் மொபைல் போன் என்ன பிராண்டுங்க? 


விவோ… சாம்சங்… லினோவா… ரெட்மி….


சூப்பர் சூப்பர்ங்க.. ஆமா, அந்த போனுக்கு போட்டிருக்கும் மொபைல் கவர், டெம்பர் கிளாஸ் இதெல்லாம் என்ன ப்ராண்டுங்க? 

 

ஒக்கே.. அப்டியே இன்னும் இதுக்கும் பதில் சொல்லுங்க,


சமையல்ன்னா சக்தி மசாலா, பிராண்டுங்க… சாம்பர்ல போட்ட சின்ன வெங்காயம் என்ன பிராண்டுங்க?


பளிச்சிடும் வெண்மைக்கு ரின், பிராண்டுங்க… பால்கனியில் இருக்கும் பூந்தொட்டி என்ன பிராண்டுங்க?


ஸ்ட்ராங்கான தலைமுடிக்கு கிளினிக் பிளஸ், பிராண்டுங்க… சிக்கெடுக்கும் சீப்பு என்ன பிராண்டுங்க?


இப்படி வரிசையா கேட்டுட்டே போலாம். மார்கெட்டிங் என்றால் பெரிய பெரிய ஹோடிங்ஸ் வெக்கனும், சன் டிவில பிரபல மாடல வெச்சு விளம்பரம் போடனும், ரோடு முழுக்க தட்டி வெக்கனும் அம்மம்மா இதுக்கெல்லாம் செலவு பன்ன காசுக்கு நானெங்க போறது?? இப்டியெல்லாம் பயபடவே தேவையில்லை. இங்க நீங்க எதை வேண்டுமானாலும் ஈஸியா விற்க முடியும். அதற்கு, மார்கெட்டிங் எப்படி செய்வது  என்று கற்றுக்கொண்டால் போதும். 



நிறுவனத்திற்கும் வாடிக்கையாளருக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்துவதில் என்னை பொறுத்த வகையில் கீழ்காணும் இந்த மூன்று வழிமுறைகளே தீர்வாகும். 


  1. Create Broadcasting

  2. Develop Networking

  3. Make Availability


#1.Create Broadcasting

நம் தயாரிப்பு/சேவைகள் பற்றிய விவரங்களை அச்சு/காட்சி மற்றும் ஏனைய வழிகளில் வாடிக்கையாளருக்கு நேரடியாக தெரிவிப்பது. அதன் மூலம் வாடிக்கையாளர்ளை வாங்க வைப்பது


#2.Develop Networking 

நமது நண்பர்கள், உறவினர்களை மட்டுமல்லாது தொழில்சார் நெட்வொர்க்கிங் ஒன்றை உருவாக்கி வைக்க வேண்டும். 


காலையில் வாக்கிங் போகும் குரூப், சாய்பாபா கோவில் கமிட்டி, ரோட்டரி கிளப், BNI Membership, சேவா சங்கம், செம்மொழி மாநாடு, டீக்கடை பெஞ்சு, டிப்ளமோவில் படித்த நண்பர்கள் என்று எங்கெல்லாம் நண்பர்களை அதிகபடுத்த முடியுமோ வசதிக்கு தகுந்தாபோல உருவாக்கிகொள்ளுங்கள். அவர்களிடம் உண்மையாக பழகுங்கள். உங்கள் தொழில்பற்றி அவர்களின் காதில் போட்டு வையுங்கள். அவர்களே வாடிக்கையாளர்களை அனுப்பி வைத்துவிடுவார்கள்.


#3.Make Availability

  வாடிக்கையாளருக்கு ஒரு பொருள் தேவைப்படும் போது அவர் தேடும் நேரத்தில் நாம் அவரின் கண்ணுக்கு தெரியும் இடத்தில் இருக்க வேண்டும். முன்னணி நகரங்களில் ஷோரூம் அமைப்பது, பிரான்சிசி கொடுப்பது, சொந்தமாக இணையதளம், இந்தியாமார்ட், சோசியல் மீடியா போன்றவற்றில் நமது பொருள்/சேவைகள் பற்றிய விபரங்களை பதிந்து வைப்பது போன்ற உதாரணங்களை சொல்லலாம்.


//இந்த மூன்றையும் பற்றி தனியாக ஒரு முழு புத்தகம் எழுத வேண்டி இருக்கும். இறைவன் நாடினால் விரைவில் பதிவிடுகிறேன். //


உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ப தாராளமாக இம்மூன்றில் எந்த ஒரு வழியையும் உபயோகிக்கலாம். மிகச்சிறிய முதலீடே போதும் ஒரு நிறுவனத்தை துவங்க. லாவ்ரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் என்ற இரண்டு நண்பர்கள் சேர்ந்து கூகுள் தேடுபொறியை முதன் முதலாக ஒரு கார்செட்டில் தான் துவங்கினார்கள். நம்பிக்கை 


எடுத்த எடுப்பிலேயே உலகம் முழுவது ஒரு பொருளை விளம்பரம் செய்ய உங்களிடம் பணபலம் இல்லை என்றால், முதலில் உள்ளூரின் முக்கிய நான்கு தெருக்களில் சேவையை அறிமுகபடுத்துங்கள்.


நாம் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் உளவியல் குறித்தும், பிராண்ட் பற்றிய வாடிக்கையாளர்களின் எண்ணங்களை பற்றியும் பேசிக்கொண்டு இருக்கிறோம். ஆகவே தொடர்பு வழிகளை பற்றி சுருக்கமாக முடித்துகொண்டு அதனை எப்படி திறம்பட செய்வது என்பதை விரிவாக பார்ப்போம்.


தொடர்ந்து வாசிப்போம்
முந்தைய பதிவுகளுக்கு

Post a Comment

0 Comments