Ticker

6/recent/ticker-posts

வாடிக்கையாளர்களின் சைக்காலஜி தொழில் பழகு I தொடர்பதிவு 11 I I Business Secrets I #2. கஸ்டமரை கண்டுபிடியுங்கள்

     தேவைகள் அல்லது கெளரவம் என்ற இந்த இரண்டு விதமான உளவியல் சிந்தனைகளின் வழிகளில் மட்டுமே பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் பொருள் அல்லது சேவைகளை வாங்குகிறார்கள்.


இதில் மூன்றாவதாக ஒரு உளவியல் சிந்தனையும் இருக்கிறது. அது "முதலீடு" என்ற மந்திரம்.


ஆண்கள், பெண்கள், முதியவர், குழந்தைகள் என்று அனைத்து வயதினருக்கும் பொதுவான, மிகவும் முக்கியான ஒரு ப்ரோடக்ட் என்ன தெரியுமா?  


…...இன்சூரன்ஸ்.


ஆமாங்க, நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் இன்சூரன்ஸ் எடுத்து வைத்துக்கொள்வது மிகவும் நல்லது. 


ஏனைய அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய நாடுகளை கம்பேர் செய்து பார்க்கும் போது 125கோடிக்கும் அதிகமானோர் வாழும் இந்தியாவில் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தவர்களின் விகிதாச்சாரம் 18 லிருந்து 25 சதவிகிதம் வரை மட்டுமே இருக்கிறது. இன்சூரன்ஸ்  நிறுவனங்களில் லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் (LIC) தவிர ஏனைய போட்டி நிறுவனங்கள் இந்த சந்தையை இன்னும் சரியாக பயன்படுத்தாமல் இருக்கின்றது. 


ஏதாவது விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் தொகை நம் குடும்பத்தாருக்கோ அல்லது மருத்துவ செலவுக்கோ உதவியாக இருக்கும் என்றோ அல்லது வயதான காலத்தில் பென்சன் தொகை வரும் என்றோ அல்லது பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு தேவைப்படும் என்றோ முன்கூட்டியே யோசிக்கிறார்கள் அல்லவா? அதான் முதலீடு. 

முதலீடு என்ற வார்த்தைக்கு பின்னால் "பாதுகாப்பு" "ஆசை" "கனவு" "பயம்" என்ற பல உணர்வுகளின் சங்கமம் இருக்கிறது. இதை நன்கு ஆழமாக புரிந்துகொள்ளுங்கள்.


தனக்கு லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தை வாடிக்கையாளருக்கு ஏற்படுத்தும்படியான உங்கள் தயாரிப்பு எதுவாயினும் அதை பட படவென விற்றுத் தள்ளிவிடலாம். எத்தனை முறை ஏமாற்றினாலும் தினந்தோறும் புது புது சீட்டு கம்பெனிகள் உருவாகுவதை மறுக்க முடியுமா?


ஜஸ்ட் டயல், ட்ரேட் இண்டியா, இந்தியாமார்ட் போன்ற நிறுவனங்களின் ஐடியாலஜி என்ன? ஒரு தொழில் முனைவோர் அதில் தன்னை இணைத்துக்கொண்டால் அதிக வாடிக்கையாளர்களை பெறலாம். இதற்காக அவர்கள் ஒரு தொகையை வசூலிப்பார்கள். இதுவும் ஒருவகை முதலீடு செலவு தானே?


ஆம்வே நிறுவனம் MLM கான்செப்டில் உண்மையில் விற்கும் பொருள் என்ன? உங்களில் யாரேனும் நண்பரின்  அழைப்பின் பேரில் ஆம்வே மீட்டிங் போயிருக்கீன்றீரா?? அங்க மெயின் டார்கெட்டே இவ்ளோ சம்பாதிச்சேன், அவ்ளோ சம்பாதிச்சேன்னு சும்மா அள்ளி விடுவாங்க… கடைசியா போனா போகுதுன்னு ஏதாச்சும் சோப்பு, பேஸ்ட்டை எடுத்து நீட்டுவார்கள். 


ஆம்வே என்ன விற்கிறது? வருமானத்தை தான் விற்கிறது. 


நீங்கள் ஒரு உற்பத்தியாளராக இருப்பின் உங்கள் டிஸ்டிரிபியூட்டருக்கு நீங்கள் இலாபத்தை கொடுக்கின்றீர்கள். அவர் வாடிக்கையாளர்களை கவனித்துக்கொள்வார். 


தங்கம், வெள்ளி, இடம், வீடு என்று இன்றும் முதலீடாக மட்டுமே வாங்கி குவித்து வைக்கின்றார்கள். இதில் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லை.


ஒரு மாவு அரைக்கும் இயந்திரம் தயாரிக்கின்றீர்களா??  விற்கும்


கால் டாக்சி ஓட்டுனர்களுக்காகவே புதிதாக யோசித்து ஒரு காரை தயாரிக்க போகின்றீர்களா? விற்கும்


பங்குசந்தை நிறுவனமா? விற்கும்


ஆன்லைன் டியூட்டர்/இகாமர்ஸ் ஆப்ஸ் தயாரித்து பிரான்சிசி தருகின்றீர்களா? 

விற்கும்


மொத்தத்தில் உங்களால் தனக்கு இலாபம் கிடைக்கும் என்று தோன்றினால் நிச்சயமாக மக்கள் உங்களை அங்கீகரிப்பார்கள். 


ஒவ்வொரு அக்கவுண்டிலும் 1.5 லட்சம் போடுகிறேன் என்றோ, கலர் டிவி, மிக்சி, கிரைண்டர் கொடுக்கிறேன் என்றோ வாக்குறுதியை அள்ளி வீசினால் எப்படி வாக்கு வாங்க முடியுமோ அப்படி சொல்லி அடிக்கலாம்.


தேவைக்காகவோ, கெளரவத்திற்காகவோ, முதலீட்டிற்காகவோ நீங்கள் கொடுக்கும் எந்த ஒரு பொருள்/ சேவையையும் மக்கள் எப்பொழுதும் வாங்க 100% தயாராக இருப்பார்கள். இம்மூன்று உளவியல் காரணங்களையும்  சரியாக புரிந்துகொண்டு அதில் உங்கள் தயாரிப்பு எதை நிவர்த்தி செய்யக்கூடியது என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்.


தொடர்ந்து வாசிப்போம் முந்தைய பதிவுகளுக்கு

Post a Comment

0 Comments