ஒரு விளம்பரம் வெற்றி பெற்றுவிடுவது உண்மையான வெற்றி இல்லை. அதன் மூலம் எத்தகைய தொடர் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்பதே உண்மையான வெற்றி. அப்படி நிலையான வாடிக்கையாளர்கள் வேணும்ன்னா, அவங்க உங்களை தேர்ந்தெடுக்க வேண்டியதற்கான சரியான காரணத்தை நீங்கள் உருவாக்கி வைத்திருக்க வேண்டும். அது சுவை, பிரமாண்டம், ஈஸி அக்சசபிள், ஸ்டைல், லக்சுரி, தரம், வேகம், பிளக்சுவலிட்டிந்னு எதுவாவேனா இருக்கலாம்.
இதில் நீங்க சரியா கவனிக்க வேண்டிய விசயம் என்னன்னா, உங்கள் பொருளை வாடிக்கையாளர்கள் ஏன் வாங்க வேண்டும்? என்ற காரணத்தை எளிதாக அவர்களுக்கு புரிய வைக்கனும்.
பட்ஜெட்ட பொறுத்து எகனாமிக்கா இருக்கனும் சார், நாளைக்கு சர்வீஸ்ன்னா ஈஸியா ஸ்பேர்ஸ் கிடைக்கனும் சார் எந்த கார் வாங்கலாம்ன்னு கேட்டா பெரும்பான்மையானவர்களின் பதில் டொயோட்டா பெஸ்ட்ன்னு வரும்.
அதேபோல, ப்ரோ!! இந்த வருசம் பிஸினஸ்ல எக்கசக்க ப்ராபிட், இப்பதான் BMW பிளாக் ஒன்னு புக்கிங் பன்னுனேன் நெக்ஸ் மன்ந்த் ஹூஹ்ஹ்ஹ்ஹூ!!! பறக்கலாம்… வாட்ஸாப்!!! என்ற உரையாடலில் BMW பிராண்ட் என்றால் ஒரு கனவு என்பதை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் அல்லவா? அந்த பிராண்டிங் தன்னோட தயாரிப்பு பர்பெக்சன் மூலமா உலக பிரபலம் ஆனது. BMWந்ன பக்கா ஸ்டைலிஸ் அண்ட் சேப்டி கார் பிராண்ட் என்பது அதன் தனித்துவம். டொயோட்டா என்றால் யூசர் பிரண்ட்லி பட்ஜெட்க்கு ஒர்த்தான பிராண்ட் என்பது அவர்களின் தனித்தன்மை. இரண்டுமே ஒரே சேவை கார் விற்பனை தான். ஆனாலும் அவர்களுக்கென்ற ஒரு தனித்தன்மை இருக்கல்லவா?
லோ பட்ஜெட் மல்டியூசர் டிரக் என்ற வாசகத்துடன் ஈச்சர் பொலாரிஸ் மல்டிக்ஸ் என்ற 2 இன் 1 காரை(?) அறிமுகம் செய்தார்கள். வெறும் 3.5 லட்சத்துக்குள் உங்கள் விருப்பமான 2 இன் 1 கார். பின்னாடி இருக்குற கூறையை மடக்குன்னா சாமான்கள் எடுத்து போலாம். கார் போலவும் யூஸ் பன்னிக்கலாம், பின்னாடி சீட்ட மடக்கினா மினி டிரக் ஆகவும் யூஸ் பன்னிக்கலாம். பிரமாதம்ன்னு ஒரு ஐடியாவ மார்கெட்ல இறக்குனாங்க. என்னாச்சு?
கார் லோ பட்ஜ்ட்ல வாங்கனும்ன்னா ஆல்ட்டோ, ஆம்னின்னு வாங்கிட்டு போறேன். இத வாங்குனா கார் வாங்கின பீலே வராது எனக்கு வேணாம்ப்பான்னு ஒரு கூட்டம் விலகிடுச்சு. வியாபாரத்தை இப்ப கொஞ்சம் விரிவுபடுத்திருக்கேன் ஒரு குட்டியானை வாங்குனா சரக்கு எடுத்து போக வசதியா இருக்கும் டாடா ஏஸ் தான் என் சாய்ங்க, இது காருக்கு வேனா செட் ஆகும் லோடு வெச்சா இழுக்குமான்னு சந்தேகமா இருக்குங்க, வேணாங்க ப்ளீஸ்… என்று இன்னொரு சாரரும் கலண்டுகிட்டாங்க. இப்ப சொல்லுங்க, தனிதன்மையை உருவாக்கனும்ன்னா வாடிக்கையாளருக்கு காரணத்தை தெளிவா சொல்லிருக்கனும். அப்படியும் வெச்சுகலாம் இப்படியும் வெச்சுக்கலாம் என்றெல்லாம் குழப்பிவிட கூடாது. புரிஞ்சுதுங்களா?
வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் எதை தேர்வாக கொடுக்க போகின்றீர்கள் என்பதை பொறுத்தே உங்களின் வெற்றி அமையும்.
ஒரு புன்சிரிப்பு கூட உங்களின் தனித்துவமாக இருக்கலாம். அதற்கெனவே கூட வாடிக்கையாளர் உங்களையே தேடி வர வாய்ப்பு இருக்கிறது.
தொடர்ந்து வாசிப்போம்
முந்தைய பதிவுகளுக்கு
0 Comments
உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்