ஒரு லைட் வெளிச்சத்துக்கு கீழ ரொம்ப நேரமா தன்னோட கார் சாவியை தேடிட்டு இருந்தானாம் அவன். என்னப்பா இவ்ளோ நேரமா தேடியும் உனக்கு கிடைக்கலையா என்று கேட்டதற்கு ஆமாங்க நடந்து வரும் வழியில் கார் சாவி எங்கயோ விழுந்துடுச்சு அப்படின்னானாம்.
அடப்பாவி வரும் வழியில விழுந்த சாவியை இங்க ஏன் தேடிட்டு இருக்க அங்க போயி பாருன்னு சொன்னதுக்கு, இல்லை ப்ரோ இங்க தான் வெளிச்சமா இருக்கு அதான் இங்கேயே தேடிட்டு இருக்கேன் என்றானாம் அந்த அதிபுத்திசாலி.
இப்படித்தான் நமக்கு வசதியா இருக்கு, பாதுகாப்பா இருக்கு அப்படிங்கறதுக்காக ஒரே இடத்தில் அல்லது தேவையில்லாத இடத்தில் நம்மோட பொருளை விற்க நினைக்கிறோம்.
என்னதான் உங்க பொருள் தரமானதா இருந்தாலும், சரியான விலையில் கிடைத்தாலும் யாருக்காக நீங்கள் உங்க பிராண்ட்டை உருவாக்கி வெச்சிருக்கீங்கன்றதுல தெளிவா இல்லைன்னா அந்த பிராண்ட் விரைவில் உருக்கு ஆலையில் விழுந்த குண்டூசி போல சந்தையிலிருந்து காணாம போயிடும்.
உங்கள் வாடிக்கையாளர்கள் யார்?
அவர்களின் பழக்க வழக்கங்கள் என்ன?
அவர்களின் வாங்கும் சக்தி எப்படி?
எங்கே இருக்கிறார்கள்??
இந்த கேள்விகளுக்கெல்லாம் சரியான விடையை கண்டுபிடிக்கப் போகின்றோம். என்ன போலாமா??
ஒரு சின்ன கேள்வி…
உலகிலேயே அதிக நபர்கள் விரும்பி பார்க்கும் பிரபலமான விளையாட்டு எது?
கிரிக்கெட்!!! (?)
இப்படி ஒரு பதிலை சொல்லியிருந்தால் நீங்க அன்பிட் ஆயிடுவீங்க. இந்தியாவில் அதிகம் விரும்பும் விளையாட்டு எது என்றால் கிரிக்கெட் என்று ஆணித்தரமாக அடித்து சொல்லலாம். ஆனால் உலகிலேயே அதிக பேர்கள் விரும்பி பார்க்கும் விளையாட்டு "ஃபுட்பால்" தான்.
கிட்டதட்ட 3.5 பில்லியனுக்கும் அதிகமான வெறிபிடித்த ரசிகர்கள் கொண்டது ஃபுட்பால் விளையாட்டு போட்டிகள்.
மக்களின் விருப்பம் என்பது இடத்திற்கு தகுந்தாற்போல, கலாச்சாரத்திற்கு தகுந்தாற்போல, காலநிலைகளுக்கு தகுந்தாற்போல மாறக்கூடியது. உங்கள் புரோடக்ட்டை வடிவமைக்கும் முன் முதலில் வாடிக்கையாளர்கள் யார் என்பதை தெரிந்துகொண்டு அவர்களின் விருப்பம் மற்றும் தேவைகளை நிறைவு செய்யும்படியான கான்செப்டை உருவாக்குங்கள். இதில் 100% முழுமையான திருப்தி உங்களுக்கு வரவில்லை என்றால் அந்த தொழிலை ஒத்திவையுங்கள்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், சுவீடன், சுவிச்சர்லாந்து, சிங்கப்பூர், தாய்லாந்து, சைனா என உலகில் பல முன்னணி நாடுகளிலும் தங்கள் நேரடி விற்பனை மையங்களை ( ரீடைல் ஸ்டோர்) திறந்து நெம்.1 பிராண்டாக இருந்தும் ஆப்பிள் ஸ்டோர்ஸ் இந்தியாவில் தனது ஆப்பிள் ரீடைல் ஸ்டோர்களை திறக்காமல் இருப்பதற்கான உண்மையான காரணம் என்ன??
இந்தியாவின் (FDI) பாரின் டைரெக்ட் இன்வெஸ்ட்மெண்ட் பாலிசி மூலம் எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனமும் நேரடியாக இந்தியாவில் கடை துவங்க முடியாது. பிரான்சிஸி மூலமாக இந்திய நிறுவனத்துடன் டையப்ஸ் வைத்துகொணால் மட்டுமே அனுமதி என்ற கொள்கையாலா??? இது தான் உண்மையான காரணம் என்றால் மேக் இன் இந்தியா திட்டத்தில் இணைந்து ஏதேனும் நூலை பிடித்து இந்திய நகரங்களில் தங்கள் கரங்களை இறுக்கி ஆக்கிரமிக்க துவங்கியிருக்கும் ஆப்பிள் நிறுவனம். ஏனென்றால் இந்திய சந்தை என்பது ஒரு பொன்முட்டையிடும் வாத்து.
உலகில் 5இல் ஒரு பங்கு மார்கெட் இந்நிய நுகவோர்களின் கையில் இருந்தும் ஆப்பிள் அமைதியாய் இருப்பதற்கான காரணம் வால்மார்ட் போல வாலை ஆட்டி வெட்டுபடாமல் தன்னை தற்காத்துகொள்ளவே…
இந்திய வாடிக்கையாளர்கள் ஆப்பிளின் அடிபக்தர்களாக இருந்தாலும் கூட ஏற்கனவே டெல், லினோவா, சாம்சங், விவோ வரை நூற்றுக்கணக்கான பிராண்டுகள் சந்தையில் ஆதிக்கம் செலுத்த் வருகின்றன. இந்தியாவின் பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு கலர்கலரான டிசைன்களும், பட்ஜெட்களில் அடங்கி இருக்கும் பிரண்டுகளிலேயே அதிக நாட்டம் இருக்கிறது.
ஆப்பிளின் தரம், பிராண்ட் இந்த இரண்டுமே அதன் விலையை பொறுத்த மட்டில் வாங்கும் திறன் உள்ள வாடிக்கையாளர்களை அடைவதில் ஏற்கனவே இப்போதுள்ள விற்பனை முறையே ஆப்பிள் நிறுவனத்திற்கு போதுமானதாக இருக்கிறது. இத்தோடு நிறுத்திக்கொண்டால் நலம் என்ற உள்ளுணர்வே ஆப்பிளின் நேரடி ரீடைல் ஸ்டோர் ஆசையை இந்தியாவில் கைவிட உண்மையான காரணம்.
KFC, பர்கர்கிங், மெக்டொனால்டு போன்ற பல உலகின் முன்னணி பிரண்ட்களும் இந்திய வாடிக்கையாளர்களின் டேஸ்ட் என்ன தெரியாமல் முன் வைத்த காலை பின் வைக்க முடியாமல் திண்டாடி வருகிறதல்லவா?
தொடர்ந்து வாசிப்போம்
முந்தைய பதிவுகளுக்கு
0 Comments
உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்