Ticker

6/recent/ticker-posts

வாடிக்கையாளர்களின் சைக்காலஜி தொழில் பழகு I தொடர்பதிவு 05 I I Business Secrets I #1. தனித்துவத்தை தக்கவையுங்கள்

இந்திய சந்தையை பொறுத்தவகையில் நீங்கள் இது தான் என்று எந்த வரையறையும் வகுத்து அதில் உங்க தொழிலை அடக்கி விட முடியாது. ஏனேனில் 50 பைசாவிற்கும் சேம்பு பாக்கெட் விற்கலாம் 5000 ரூபாய்க்கும் விற்கலாம். இந்திய சந்தை அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் கொண்ட ஒரு அற்புதமான கருவூலம். அதனால் தான் உலக தயாரிப்புகள் அனைத்தும் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஒருவேளை இந்தியர்கள் விளிப்படைந்து விட்டால் இந்திய தயாரிப்புகள் உலகின் அனைத்து பகுதியிலும் ஆதிக்கம் செலுத்தும்படியான உள்நாட்டு தயாரிப்புகள் வருங்காலத்தில் அதிகரிக்கவும் செய்யலாம். பார்ப்போம் 

இந்த உதாரணங்களெல்லாம் சொந்தமாக உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு மட்டும் தானா சார் பொருந்தும்? நாங்கெல்லாம் ரிசெல்லர்ஸ் பல்வேறு பிராண்டேடு நான் பிராண்டேடு பொருட்களை வாங்கி வெச்சு விற்கிறோம் அப்ப நாங்க எப்படி தனித்தன்மைய உருவாக்குறதுனெல்லாம் கேள்வி கேட்காதீங்க. ஏனென்றால் இந்த விதிகள் அனைத்தும் சூப்பர் மார்கெட்டிலிருந்து சுகுணா மோட்டர்ஸ் வரையிலும்,  அரசியல்வாதியிலிருந்து ஆபிசில் புரமோசன் வாங்கி முன்னணியில் வர நினைக்கும் அனைவருக்குமான பொது விதிகளே.


ஒரு நேர்த்தியான உடை உடுத்துவதில் கூட உங்கள் தனிதன்மையை உயரதிகாரிக்கு உங்களால் தெரிவிக்க முடியும். 


தயாரிப்பாளருக்கு வாடிக்கையாளர் குறி என்றால், அலுவலருக்கு உயரதிகாரி குறி, அரசியல்வாதிக்கு மக்கள் குறி அவ்வளவே..



அண்ணாவின் மேடைப்பேச்சும் கூட ஒருவகை தனித்தன்மையை நமக்கு சொல்லித்தருகிறதல்லவா? 


உங்களிடம் இல்லாத ஒன்றை நினைத்து எப்பொழுதும் வருத்தப்பட தேவையே இல்லை. உங்களிடம் எது இருக்கிறதோ அதை பயிற்சியால் மெருகேற்றுங்கள். அதற்கென ஒரு தனித்துவத்தை கட்டமையுங்கள். இந்த விசயத்துல இவன அடிச்சுக்க முடியாதுப்பா..! என்று அனைவரும் சொல்லுமாறு நடந்துகொள்ளுங்கள். அந்த தனித்துவமான விசயமே உங்களுக்கு தேவைப்படும் இதர காரியங்களை உதவிக்கு கொண்டு வந்து தந்துவிடும்.


ஒரு வாத்து தன் நண்பனான குதிரையை எப்பவும் மட்டம் தட்டிகிட்டே இருந்துச்சு. ஏய் குதிரையே என்னால் நீந்த முடியும், நடக்க முடியும், பறக்கவும் முடியும் ஹாஹாஹா நீயோ வெறும் நிலத்தில மட்டும் தான் இருக்க முடியும். இப்ப சொல்லு உன்னை விட நான் தான் சிறந்தவன். எங்கிட்ட எவ்ளோ திறமைகள் இருக்கு பார்த்தாயா என்று தம்பட்டம் அடிச்சுகிட்டே இருந்துச்சாம். கடுப்பான குதிரை வாத்துகிட்ட… அடேய் வாத்துமடையா நீ சொல்றதெல்லாம் வாஸ்தவம் தான் நீ நீந்த முடியும் ஆனா மீன்களை போல ஆழத்திற்கு சென்று நீந்த மாட்டாய், குண்டு உடலை வெச்சுகிட்டு பத்தடிக்கு மேல பறந்தா மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கி விழுந்துட்ற மற்ற பறவைகளை போல உயர பறக்க முடியாது. அடுத்ததா உன் நடைய பற்றி சொல்லவே தேவையில்லை தத்தக்கா பித்தக்கான்னு நீ நடக்குறத பார்த்து மக்கள் எல்லோரும் சிரிக்கிறார்கள்.


என்னைப்பார்… என் உடல் எவ்வளவு கம்பீரமாக இருக்கிறது. என்னால் உன்னை போல மூன்று வேலைகளையும் செய்ய முடியாவிட்டாலும் அதிவேகமாக ஓடுவது என்றால் என்னை மட்டுமே சொல்வார்கள். அதற்காகவே என்னை அரண்மனையில் ராஜ உபச்சாரம் செய்கிறார்கள். இப்ப சொல் என்னை விட நீ உயர்ந்தவனா?? 


இப்ப வாத்து கப்புசிப்புன்னு அடங்கி இருக்கும் என்பதை நான் சொல்லியா நீங்க தெரிஞ்சுக்க போறீங்க???


இதே போல தான், உங்கள் தனி ஆளுமையை வளர்த்திக்கொண்டாலும் சரி அல்லது உங்கள் பிராண்டின் வலிமையை உருவாக்கி கொண்டாலும் சரி உங்களுக்கென்ற ஒரு "ஸ்பெசல் பவர்" உருவாக்கி வெச்சுக்கனும். அதை மக்கள் எளிதாக விளங்கிகொள்ளுமாறு ஒரு கேப்சன எழுதி காண்பியுங்கள் போதும்.


சங்கர்ன்னா பிரமாண்டம், ஹரின்னா வேகம், விக்ரமன்னா குடும்பபடம், சுந்தர்-சி என்றால் சிரிப்புக்கு பஞ்சமில்லை என்பதெல்லாம் கடுமையான பயிற்சிக்கும், உழைப்புக்கும் உருவான அங்கீகாரமேயன்றி வேரல்லவே?


மார்கெட்டில் நாம வெறும்  வாய்ஜாலத்தை வைத்து ரொம்ப நாள் வண்டி ஓட்ட முடியாதுங்க. அப்படி ஓரு வாடிக்கையாளரை உங்கள் வாய்ஜாலத்தால் வாங்க வைப்பீர்களேயானால் உங்களுக்கு நீங்களே தோண்டிக்கொள்ளும் குழி அது. வாடிக்கையாளரின் தேவை என்னவோ அதை அவர் தேடும் போது நீங்கள் நியாபகத்திற்கு வருவீர்களேயானால் நீங்கள் தான் வெற்றியாளர். மாறாக ஆஃபர் மூலமோ அப்ளியேட்டேடு மூலமாகவோ மொத்த வியாபாரத்தையும் செஞ்சுடலாம்ன்னு பிளான் பன்னிடாதீங்க. அது நீடிக்காது.


Post a Comment

0 Comments