எவனெல்லாம் நீட் வேண்டாம், எண்டரன்ஸ் வேண்டாம், மும்மொழிக்கொள்கை வேண்டாம்ன்னு சொல்றியோ அவனெல்லாம்
மெட்ரிகுலேசன், சமச்சீர், CBSC என்று தனி தனி பாடத்திட்டம் வேண்டாம் தமிழகம் முழுவதும் அனைத்து மாணவருக்கும் ஒரே பாடத்திட்டம் வேண்டும் என்று நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் பேசுங்கள் பார்ப்போம்?
பேசமாட்டானுக... காரணம் DMK/ADMK/PMK/VCK என்று பாரபட்சமில்லாமல் பொறுப்பில் இருப்பவர்களின் பினாமி கான்வெண்ட் ஸ்கூலின் பிழைப்பு நாறிப்போயிடும். உங்களை தூண்டிவிட்டு விட்டு, மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு தங்கள் சுயலாப அரசியலை செய்வதில் ஆளும்கட்சி, எதிர்கட்சி என்று எந்த பாகுபாடுமில்லாத கயவர் கூட்டம் வெறிபிடித்து அழைகிறது.
எனதருமை பிள்ளைகளே, நீட் வைத்தாலும் சரி, எண்டரன்ஸ் எழுத வேண்டியிருந்தாலும் சரி, பள்ளி பாடபுத்தகத்தினை தாண்டி இந்திய/உலக அரசியல், பொருளாதாரம் என உங்கள் அறிவினை விரிவுசெய்ய முயற்சி எடுங்கள்.
ஆர்வம் இருப்பவர்கள் கைத்தொழில் கற்று வணிகத்தில் நுழையுங்கள்.
உங்கள் எதிர்காலத்தை நீங்கள் இப்படியாகத்தான் கடந்து செல்ல வேண்டியிருக்கும்.
வீணாக குழப்பிகொள்ள வேண்டாம். நிகழ்காலமே மிகுந்த போட்டியாளர்களின் மத்தியில் போராட்ட வாழ்வாக இருக்கிறது. வலியது வெல்லும் என்னும் கோட்பாட்டின்படி தான் உலகம் கடந்து செல்லும் எப்போதுமே...
பெற்றோர்களே உங்கள் சமூக கடமையை சோசியல் மீடியாவில் கருப்பு கொடி காட்டி போராடுவதை காட்டிலும் குழந்தைகளுக்கு சமூகத்தை புரியவைப்பதற்க்கான நேரத்தில் செலவிடுங்கள். கயவர்கள் ஆதாயம் தேடுவதற்கு நீங்கள் பழிகடா ஆகிவிடாதீர்கள் ஒருபோதும்.
#தொழிற்களம் அருணேஸ்
0 Comments
உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்