Ticker

6/recent/ticker-posts

வாடிக்கையாளர்களின் சைக்காலஜி தொழில்பழகு தொடர் பதிவு 01 I Business Secrets I #1. தனித்துவத்தை தக்கவையுங்கள்

பல்வேறு பகுதியிலிருந்தும் நூற்றுக்கணக்கான பிஸினஸ்மேன்கள் கூடியிருந்த அரங்கத்தில் அனைவரின் பார்வையும் மேடையின் மீதிருந்தவரை நோக்கி நிலையாய் நின்றிருந்தது. பல ஆண்டுகளாய் வணிக மேலான்மை மற்றும் மனோவியல் துறையில் நிபுணத்துவம் பெற்ற தன்னம்பிக்கை பேச்சாளர் மற்றும் பயிற்றுனர் அவர். அந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினரான அவரின் பேச்சை கேட்பதற்கே பலரும் வந்திருந்தனர்.


வெகுசுவாரசியமாய் பேசிக்கொண்டிருந்த அவர், தன் பாக்கெட்டில் கையை விட்டு சில ரூபாய் நோட்டுகளை எடுத்து அரங்கத்தில் இருந்தவர்களை நோக்கி ஒவ்வொன்றாக காண்பித்தார். "நண்பர்களே இந்த காகிதத்தின் மதிப்பு என்ன? என்று ஒரு இருபது ரூபாய் நோட்டை காண்பித்து கேட்டார்.  அனைவரும் அது இருபது ரூபாய் என்று சத்தமாக கூறினார்கள். அடுத்து வேறொரு நோட்டை காண்பித்து இந்த காகிதத்தின் மதிப்பு என்றார். அரங்கத்தினரும் அது நூறு ரூபாய் என்றனர்.  அவ்வாறே அடுத்தடுத்து  ஐநூறு ரூபாய் மற்றும் இரண்டாயிரம் ரூபாய் என்று அவர் காண்பித்த நோட்டுகளின் மதிப்பை அரங்கத்தினர் கூறினார்கள்.


இப்போது பேச்சாளர் ஒரு வெற்று காகிதத்தை காண்பித்து, " நண்பர்களே இதன் மதிப்பு என்ன என்று யாரேனும் சொல்ல முடியுமா? என்று கேட்டார். வந்திருந்த அனைவரும் மெளனமாய் இருந்தார்கள். வெறும் வெற்று காகிதம் அது. அதற்கு எங்களால் எப்படி மதிப்பை சொல்ல முடியும்? என்றனர். 


சரி என்றவாரே ஒரு பேனாவை எடுத்து, "ஸ்பெசல் பிஸினஸ் டெவலப்பிங் கிளாஸ் நடைபெற இருக்கிறது. சிறப்பு கட்டணம் 5000ரூபாய் என்றெழுதி அதனை கோடிட்டு அழித்து பின் 2000 ரூபாய் மட்டுமே" என்று எழுதி அரங்கத்தினரை நோக்கி காண்பித்தார். பின், நண்பர்களே இங்குள்ளவர்களுக்கு மட்டும் இந்த சிறப்பு சலுகை. பயிற்சியில் சேர விரும்புகிறவர்கள் தங்கள் கைகளை மேலே உயர்த்தவும் என்றார்.


அங்கிருந்த பலரும் ஆர்வமாகினார்கள். கிட்டதட்ட அறுபது பேர் கைகை தூக்கினார்கள். இப்போது பேச்சாளர், சற்று முன் வெறும் காகிதமாய் மதிப்பே இல்லததாக இருந்தது. ஆனால், அதே காகிதம் இப்போது கிட்டத்தட்ட ஒரு இலட்சத்தி இருபதாயிரம் ரூபாயை எனக்கு ஐந்தே நிமிடத்தில் சம்பாதித்து கொடுத்திருக்கிறது. இப்போது என்னை பொறுத்தவரை அந்த காகிதம் இலட்ச ரூபாய்க்கு சமமானதாய் மாறி இருக்கிறது என்றார். அரங்கத்தின் கைதட்டல் அடங்க வெகு நேரம் ஆகியது.


இவ்வளதாங்க விசயம். பலரும் வணிகம் செய்யும் வழிமுறைகளை வெற்று காகிதமாக நினைத்து கசக்கி காது குடையவோ அல்லது கையை துடைக்கவோ செய்து குப்பையில் வீசிக்கொண்டிருக்கிறோம். எதை எப்போது எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொண்டால் உங்கள் வணிகத்தில் உங்களை வெல்ல யாராலும் முடியாது.


எல்லாம் சரி, இங்கே நாம் மார்கெட்டிங் பற்றி பார்க்க போகிறோமா?


ஒரு வாடிக்களையாளருக்கும், நிறுவனத்திற்கும் இடையே சரியான தேவையை கண்டறிந்து அதனை பறிமாற்றிக்கொள்ள உண்டாக்கும் அனைத்து செயல்களுமே மார்கெட்டிங் எனலாம். 


மார்கெட்டிங்கின் செயல்வடிவம் காலத்திற்கு தகுந்தார்போல மாறக்கூடியது. 10 வருடங்களுக்கு முன்னர் படித்த ஸ்டேட்டர்ஜிகளை கொண்டு இப்ப செயல்படுத்தினால் சூடுபட்டுக்கொள்வீர்கள். இப்போது படிப்பதை அடுத்த பத்து வருடம் கழித்து நடைமுறையில் செய்தாலும் ஒர்கவுட் ஆகாது.  அதனால் இங்கு எந்த இடத்திலும் சார்ட் போட்டு 4P Process, மார்கெட்டிங் ஸ்டரக்சர்ன்னா என்ன? என்று கல்லூரியில் படித்ததையெல்லாம் அப்படியே சொல்ல மாட்டேன்.  ஆனால், 


மார்கெட்டிங் தண்ணீரின் ஒத்த குணத்தை பெற்ற ஒரு செயல்முறை தத்துவம். உங்கள் நிறுவனத்தின் வெற்றியை தக்க வைக்க வேண்டுமெனில் இந்த காலம், அந்தகாலம் எந்தகாலம் என்றாலும் மாறாமல் இருப்பது வாடிக்கையாளர்கள் மட்டுமே. அவர்களின் மனோவியல் பற்றிய உளவியல்களை புரிந்துகொண்டால் உங்கள் பிராண்ட் காலம் கடந்து நிற்கும். மார்கெட்டிங் என்றால் என்ன என்பதை நான் சொல்ல வரவில்லை. வாடிக்கையாளர்களின் தேவை என்ன என்பதை சொல்கிறேன்.

அடுத்த பதிவில்

Post a Comment

0 Comments