Ticker

6/recent/ticker-posts

தீவிர மொபைல் போன் அடிக்சனில் இருந்து வெளி வரவேண்டுமா? இதை செய்யுங்க

   இன்னைக்கு நேற்று என்று இல்லைஙக நம்ம பாட்டன் பூட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்தே நாம கலத்துக்கு தகுந்தாற்போல வரும் நவீன படைப்புகளுக்குள் நம்மை மூழ்கடித்துக்கொண்டு தான் வருகிறோம்.

 வயிறு ஆற சாப்பிட்டால் பிரச்சனை இல்லை. வயிறு முட்ட சாப்பிடும் போது தான் பிரச்சனையே ஸ்டார்ட் ஆகுதுஙக.

  நம்ம தலைமுறையிலாவது நவீனத்துடன் அடிமையாகி நேரத்தை தொலைக்காமல் நவீனத்தை பயப்படுத்து நாமும், சமூகமும் முன்னேறுவது எப்படி என்று சிந்தித்து செயல்படுத்துவோம்.   

 பேஸ்புக், டிவிட்டர், வாட்சப் மட்டுமில்லாம எக்கசக்கமான கேம்கள் இன்னைக்கு மொபைலில் நம்மை அடிமையாக்கி நமது நேரத்தை திருடிக்கொள்கிறது. சிலர் இந்த போதையிலிருந்து வெளிவர முடியாமல் சிக்கி தவிக்கின்றார்கள். 

 ஏன் மொபைல் போன் பயன்படுத்தினால் அடிமையாகி விடுவோமா என்ன? சரியாக பயன்படுத்தினால் எந்த விளைவுகளும் ஏற்படாது. ஒரு உலக சர்வே நிறுவனம், மொபைல் போனை மணிக்கொரு தரம், நிமிடத்திற்கு ஒருதடவ, ஏன் வினாடிக்கு ஒரு தடவை வரை பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள் என்பதை வெளியிட்டு அதிர்ச்சியளித்திருக்கிறது. 

  பொதுவாக என்னேரமும் மொபைல் போனும் கையுமாக இருப்பவர்களின் உடலில் பயோகெமிட்ஸ்ட்ரி சேஞ்ச் ஆகி அவர்களின் இயல்பு வாழ்க்கையில் இருந்து விலகி மனநோயாளிகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை கூறி அந்நிறுவனம் வேதனை தெரிவித்திருகிறது.

   உண்மைதாஙக, நமக்கே தெரியாமல் நாம் ஒரு உளவியல் நோயாளியாக மாறிக்கொண்டு இருக்கிறோம். இத்தகையவர்கள் அதிகமாக அடுத்தவர்களுடன் பேசுவதை குறைத்துக்கொண்டே வருவார்கள். எந்த ஒரு நிகழ்வுக்குன் தங்கள் உள்ளார்ந்த உணர்வுகளை வெளிக்காட்ட தெரியாதவர்களாக மாறிவிடுவார்கள்.

    குடும்ப உறவுகளில் நம்பிக்கை இழந்து அதைப்பற்றிய கவலை இல்லாத நபர்களாகி விடுவார்கள். இதையெல்லாம் அந்நிறுவனம் ஆணித்தரமாக நிரூபித்து காட்டியிருக்கிறது.

   மொபைல் போன் அடிக்சனிலிருந்து வெளிவரவில்லை எனில் குடும்ப பந்தங்களிலிருந்து விலகி வாழும் சூழ்நிலை ஒருநாள் உருவாகி விடும் என்பதை மறவாதீர்கள். சில எளிய வழிகளில் மொபைல் போன் அடிக்சனில் இருந்து வெளிவருவது எப்படி என்பதை காண்போம்.


நோட்டிவிகேசன் செட்டிங் மாத்துங்க
   உங்க மொபைல் போனில் முதல் வேலையாக அனைத்து ஆப்களில் உள்ள நோட்டிவிகேசன் செட்டிங்கில் சென்று ஆப் (Disable) பன்னி வைங்க. 

   நீங்க சும்மா இருந்தாலும் இந்த நோட்டிவிகேசன் உங்களை இழுத்துகொண்டு போய் அந்தந்த ஆப்பில் நுழைத்துவிடுகிறது. பணியின் போது மேலாளருக்கு தெரியாம திருட்டுத்தனமா சமூக ஊடகங்களில் நுழைய இந்த தூண்டில் தான் காரணம் ஆகிறது. மொதல்ல இந்த தூண்டிலை ஒடைத்து வீசுங்க

கிரேஸ்கேல் கலர் செட்டிங்
   என்னதான் மனக்கட்டுப்பாடு இருந்தாலும் அத்தியாவசியம் என்ற பொழுது மொபைல் போன் பயன்படுத்தாமல் இருப்பது கொஞ்சம் சிரமம் தான். அதே சமயம் பயன்பாட்டை குறைப்பதற்கும் இரவு நேரங்களில் அதிகம் பயன்பாட்டின் போது கண்களுக்கு பாதுகாப்பாக இருக்கவுக் உங்கள் மொபைல் போன் டிஸ்பிளேவை க்ரேஸ்கேல் மோட்டில் வைப்பது ஒரு சுலமான தேர்வு.

   அனைத்து அன்ரொயிட் போனிலும் Settings ---> Accessiblity---> Colors என்ற வழியில் சென்றால் உங்கள் மொபைல் டிஸ்ப்ளேவில் அனைத்தும் கலர்களும் கருப்பு வெள்ளைக்கு மாறிவிடும். 

  தீவிர அடிக்சன் இருப்பதாக உணர்பவர்கள் இதை தேர்வு செய்யுங்க. சில ப்ராண்ட் மொபைல்களில் அதனை ஆக்டிவேட் செய்ய வேறு ஆப்சன்கள் இருக்கும். தெரியாதவர்கள் பின்னூட்டம் இடுஙகள். மேலும் தேவையில்லாத கேம்கள், ஆப்களை அன் இன்ஸ்டால் பன்னுங்க

வேறு வேலைகளில் கவனம் 
செலுத்துங்கள்
  என்னதான் செடிங்க்ஸ் ஆல்டர் பன்னுனாலும் சில சமயம் நீங்களே முழு மனதாக இதிலிருந்து வெளிவர நினைக்க வேண்டும். 

     நல்ல புத்தகங்கள் வாசிப்பது, செடிகள் வளர்ப்பது, வெளியே சென்று வருவது, புதிதாக ஒரு டிஸ் சமையல் செய்து பார்ப்பது, ஆன்மீகத்தில் கவனம் செலுத்துவது, புதிதாக ஒரு மொழி கற்றுக்கொள்வது, விளையாடுவது போன்ற ஏதாவது விசயஙகளில் உங்கள் கவனத்தை திருப்புங்கள்.

மற்றவர்களுடன் நேரில் பேசுங்கள்
     முடிந்தவரை நண்பர்கள், உறவினர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் நன்கு மகிழ்ச்சியாய் பேசி பழக முயற்சி செய்யுங்கள்.  நேரம் கிடைக்கும் பொழுது நண்பர்களை சந்தியுஙகள். சிறு காபி கூட உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்க வைக்கும்.

     வார இறுதிகளில் உள்ளூரில் நடக்கும் சொற்பொழிவுகள், எக்ஸிபிசன்கள், கோவில், சர்ச் என்று எதாவது இடத்திற்கு சென்று மக்களுடன் கலந்துகொள்ளுங்கள். உங்கள் தனிமையை எதிர்த்து போராடுங்கள்.

லிமிட்டேட் ரீசார்ச் பிளேனுக்கு மாறுங்க
    எதுவுமே ஒர்க் அவுட் ஆகலையா..? பேசாம லிமிட்டேட் ரீசார்ச் பிளானுக்கு உங்க சிம்நெட்வொர்க்க மாத்திடுங்க. பார்த்து பார்த்து யூஸ் பன்னும்போது நீங்களாகவே தேவையில்லாத காணொளிகள், கேம்களை புறக்கணிக்க துவங்கி விடுவீர்கள்

பணமும் மிச்சமாகும். 

போன் ஃப்ரி டே ஒன்றை துவஙகுஙகள்.
     இது தீவிர மொபைல் போன் அடிக்ட் ஆனவர்களுகக்கு மட்டுமான யோசனை இல்லீஙக, நல்ல குடும்பம் அன்பான உறவுகள், நம்பகமான நட்புகள், நிம்மதியான தொழில் வேண்டும் என எண்ணும் நம் அனைவருக்கும் தேவையான தேர்வுங்க. 

   வாரத்தில் ஒரு நாள் மொபைல் போனுக்கு விடுமுறை  கொடுக்கலாம். அந்த நாளில் எக்காரணத்திற்காகவும் மொபைல் போனை பயன்படுத்த மாட்டேன் என்று உறுதி எடுங்கள். தவிர்க்க முடியாத நாளில் பழைய பட்டன் போனை கொண்டு செல்லுங்கள்.

     இந்த வாழ்க்கை இறைவன் நமக்கு கொடுத்திருக்கும் இரண்டாவது சான்ஸ். இந்த வாய்ப்பையும் ஏதாவது ஒரு போதைக்கு அடிமையாகி ஏன் வீணாக்க வேண்டும்.? முயற்சியுஙகள் உங்களாலும் முடியும். வாழ்த்துகள்!!

Post a Comment

2 Comments

  1. Super nanba... Mobile tha nammala use pannuthu. Its true

    ReplyDelete
  2. பயனுள்ள பகிர்வு நல்ல கருத்துகளை சொல்கிறீர்கள் நன்றி

    ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்