Ticker

6/recent/ticker-posts

தோல்வி பயத்தை (Negative Thoughts) விடுவது எப்படி?

எந்த ஒரு செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்யும் பொழுது தோல்வி குறித்தான பயத்தை நாம் யோசிக்க வேண்டியதே இல்லை. இருப்பினுக் வாழ்வின் பல நேரஙகளில் நமக்கு எதிர்மறை எண்ணங்கள் வந்து போவது என்பது இயல்பானதே. முதலில் எதிர்மறை எண்ணம் குறித்த பயத்தை விடுவது நாம் எடுத்து வைக்கும் முதல் படி.

ஒரு சீடன் தன் குருவிடம், நான் எப்பொழுதும் பயிற்சியை தவறாது செய்கிறேன். ஒருநாளும் நான் பயிற்சி செய்யாமல் இருந்தது இல்லை இருப்பினும் எப்படி குருவே என்னால் சரியாக இலக்கை அடிக்கவே முடியவில்லை என்று கேட்டான். 

குரு அமைதியாக எதும் கேட்காதது போல இருந்தார்.  

திரும்பவும் சீடன், குருவே நான் கூறியது உங்களுக்கு சரியாக கேட்டிருக்கவில்லை என நினைக்கிறேன்
"என்னால் ஏன் இலக்கை சரியாக அடிக்க முடியவில்லை?" என்று திரும்பவும் கேட்டான். குருவும் வழக்கம் போல காதில் எதுவும் கேட்காதது போல அமைதியாக இருந்முடியாத


  • சீடனுக்கு குழப்பம் அதிகமாகியது. குருவிற்கு கண்டிப்பாக நாம் சொன்னது கேட்டிருக்கிறது ஏன் பதில் சொல்ல மாட்டிங்கிறார் என்று யோசித்தவாறே திரும்ப திரும்ப இதே கேள்வியை அவரிடம் கேட்டான். ஆனால் குரு அவனின் கேள்விக்கு கடைசி வரை பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்தார். பொறுமை இழந்த சீடன், குருவே எனது கேள்விக்கு பதில் சொல்ல நீங்கள் மறுப்பதற்கு நிச்சயம் ஏதேனும் காரணம் இருக்கும் என்னால் அதை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை நீங்களே கொஞ்சம் தயைகூர்ந்து பதிலளிக்க வேண்டுகிறேன் என்றான். 

சீடனின் நிலையுணர்ந்த குரு அவனை அழைத்தார். ஒரு நீண்ட கயிற்றை எடுத்து அதில் பலவாறு சிக்கலான முடிச்சுகளை அவன் கண்முன்னே போட்டார்.  இதை விடுவித்து காட்டு என்றார். அட இவ்வளவுதானா!! இதோ செய்கிறேன் என்று ஒரிரு வினாடிகளில் அந்த முடிச்சுகளை அவிழ்த்து குருவின் கையில் கொடுத்தான். 

குரு இப்போது சீடனை பார்த்து, இந்த கயிற்றின் முடிச்சுகளை அவிழ்க்கும் போது உனது மனதில் இதை எளிதாக செய்துவிட முடியும் என்று நம்பியதால் உன்னால் விரைவாக முடிச்சுகளை அவிழ்க்க முடுந்தது. ஆனால், வில்லிருந்து அம்பெய்தும் பொழுது உன்னால் இது முடியுமா முடியாதோ என்று ஒரு நிமிடம் பயப்பட துவஙகுகிறாய். அதனால் உன் இலக்கை நீ தினமும் தவற விடுகிறாய். நீ என்னிடம், இலக்கை சரியாக அடிப்பது எப்படி என்ற கேள்வியை கேட்கவில்லை, என்னால் ஏன் அடிக்க முடியவில்லை என்று கேட்கிறாய். நீயே உன்னை நம்பாமல் இருக்கும் பொழுது நான் உன்னிடம் என்ன பதில் சொல்லி என்ன ஆக போகிறது. உன்னை நீ நம்பும் நேரத்தில் இந்த கேள்வியை நீ கேட்க அவசியமே வராது என்றார்.

நம்மில் பலரும் இப்படியான பயத்தோடு தான் வாழ்கிறோம். பரிச்சையில் இந்த கேள்வி வருமா? இதில் முதலீடு செய்தால் லாபம் வருமா? பணி இந்த நிறுவனத்தில் நமக்கு கிடைக்குமா என்றெல்லாம் முன்கூட்டியே பயந்து தேவையான முனெச்சரிக்கை வேலைகளை செய்ய தவறிவிடுகிறோம்.


தோல்வி பயத்தை, எதிர்மறை எண்ணத்தை விட சில எளிய வழிகளை தெரிந்துகொள்வோம்.


  • எப்பொழுதும் தனிமையில் இருக்காதீர்கள். கலகலப்பாக எல்லோரிடமும் மனம் விட்டு பேசி பழகுங்கள்.
  • உங்களுக்கு பரிச்சயமில்லாத தொழிலில்/வேலையில் ஈடுபடும் பொழுது முன்கூட்டியே நன்கு பயிற்சி எடுக்க முயற்சி செய்யுங்கள்.
  • உங்கள் பழைய தோல்வியின் போது கற்றுக்கொண்ட  விசயஙகளை பட்டியல் இடுஙகள். 
  • எதிர்மறை கருத்துடையவர்களை தள்ளுஙகள்.
  • உங்கள் மனதிற்கு பிடித்த வாசகம் ஒன்றை அடிக்கடி சொல்லுங்கள்.
  • எப்பொழுதும் தூய்மையான சிரான ஆடைகளை அணியுஙகள். பளிச்சென்ற நிறங்களை தேர்வு செய்யுங்கள்.
  • விபத்து, அதிக வன்முறை, பாலியல் காட்சிகளை சமூக ஊடகங்களில் பார்வையிடாதீர்கள்.
  • மிடுக்காக நடக்க பழகுங்கள்.
  • உங்கள் வேலையை மற்றவர்களிடம் திணிக்காதீர்கள்.
  • எப்பொழுதெல்லாம் உங்கள் மனதில் ஒரு இனம்புரியாத பயம் எட்டிபார்க்கிறதோ அப்பொழுதெல்லாம் உங்கள் வலது கையின் கட்டை விரலையும் மோதிர விரலையும் ஒன்றோடொன்று படும்படி வைத்து உங்கள் புருவத்தின் மத்திய ஸ்தானத்தில் ஒரு மலரை நினைத்து இருபது வரை எண்ணி முடியுங்கள்.


தோல்வி இனி உங்களிடம் தோற்று ஓடும்.


///உங்கள் மேலான கருத்துகளை பின்னூட்டமிடுங்கள்.

Post a Comment

1 Comments

  1. நிஜமான கருத்து. சூப்பர்

    ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்