Ticker

6/recent/ticker-posts

மாதம் 65 லட்சம் சம்பாதிக்கும் இளைஞன் கதை தெரியுமா? பெட்டிக்குள் குட்டியிடும் பணம் 2

  எந்த ஒரு சூழ்நிலையிலும் விட்டுகொடுக்காத மனப்பானமையில் வாழ்பவர்களே வெற்றியாளர்களாய் மாறியிருக்கிறார்கள்.  அத்தகைய வெற்றியாளர்கள் அனைவருமே அதிகாலையில் எழும் பழக்கத்தை கொண்டிருப்பவர்களே ஆவார்.  

  அதிகாலையில் எழுந்திருக்கும் பொழுது உங்களின் அன்றைய நாளை "முழுமையாக" பயன்படுத்திக்கொள்ள உங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.  எவ்வளவு உழைச்சாலும் பணம் கையிலயே நிக்க மாட்டிங்குதுங்க, வீட்டு வாடகை கொடுக்க பணம் கொஞ்சம் பத்தலந்னு தலைய சொரிஞ்சுட்டு நிக்குற சிவராமும், இந்த டீல் முடிஞ்சதும் அடுத்து ரோல்ஸ்ராய்  நியூ மாடல் புக் பன்னிடனும்ன்னு ச்சியர்ஸ் சொல்லுற ராம்பிரசாத்தும் தங்களோட நேரத்த எப்படி வடிவமைச்சுகிட்டங்கன்னு தெரிஞ்சுக்கனும்ன்னா மொதல்ல அதிகாலை 5 மணிக்குள் எழுந்திருக்கும்பழக்கத்தை உருவாக்கி கொள்ளுங்கள். 

    பணம் குட்டிபோடனும்ன்னா மொதல்ல அதுக்கு தீனி போடனும். பட்டினி போட்டீங்கன்னா உள்ளதும் போயிடும். நீங்க எவ்வளவு சம்பாதிக்கறீஙக? அப்படிஙகறது முக்கியமில்ல, அதுல எவ்வளவு பணத்தை சேமிக்கறீங்கன்றது தான் முக்கியம். 

   இங்க சிக்கனத்துக்கும், சேமிப்புக்கும் வித்தியாசத்தை சொல்லித்தாரம விட்டுட்டாங்க... சம்பாதிக்குற காச செலவு செய்யாம வாயகட்டி வயத்தை கட்டி மிச்சம் பன்னுறதுக்கு பேரு சேமிப்பு இல்லீஙக, நீங்க உங்க விருப்பத்தை விட்டுக்கொடுக்காம அதே சமயம் உங்க சேமிப்பையும் செஞ்சாகனும். 

 மும்பை சிட்டியின் முக்கிய பல மிகப்பெரிய வணிக நிறுவனர்களின் சார்ட்டேட் அக்கவுண்ட்ஸ் அத்தனையையும் நிர்வாகிக்கும் ஆடிட்டர் அவர். தேவையில்லாத,  நம் நேரத்தை வீணாக்கும் எந்த ஒரு பொழுது போக்கும் கூட எனக்கு பிடிக்காது. அதுவும் உன்னை மாதிரி ஒரு இன்சூரன்ஸ் ஏஜெண்ட்கிட்ட பேசுற அளவுக்கு எனக்கு சுத்தமா டைம் இல்ல. உங்கிட்ட என்னோட நேரத்தை கொடுக்கற அளவுக்கு எனக்கு உன்னோட இன்சூரன்ஸ் மூலம் எந்த ஒரு பெனிபிட்டும் கிடைக்காது. இப்ப நீ கிளம்பலாம். திரும்பவும் என்னை தொந்தரவு பன்னாதேன்னு முகத்துக்கு நேரா கோபமா சொல்லிட்டு அந்த ஆடிட்டர் படீர்ன்னு கதவ சாத்திட்டார். 

    அப்படி பட்டுன்னு சாத்தப்பட்ட கதவுக்கு வெளியே அந்த இளைஞன் கொஞ்சமும் வருத்தத்தை காமிக்காத, தனது வழக்கமான புன் சிரிப்பை சிரித்தவாறே நேரே தனது அறைக்கு சென்றான். 

    வழக்கமா இன்சூரன்ஸ் பெனிபிட் பத்தி பேசி அப்பாயிண்மெண்ட்  வாங்க தான் அந்த இளைஞன் நம்ம ஆடிட்டர பார்க்க போயிருந்தான். ஆனா, அங்க அவனுக்கு கிடைச்சது என்னவோ அவமானம் தான். 

   அந்த இளைஞனோட இடத்துல நீங்களோ நானோ இருந்திருந்தா, அட போய்யா நீயாச்சு உன் அப்பாயின்மெண்டாச்சு, பாலிசி எடுத்தா எடு எடுக்காட்டி போ... உனக்கு தாம்லே நட்டம், எனக்கென்ன போ?ந்னு உதறி தள்ளிட்டு அடுத்த வேலைய பார்க்க போயிருப்போம். ஆனா, அந்த இளைஞன் என்ன செஞ்சான் தெரியுமா? 

    நேரா வங்கிக்கு போனான். செலான வாங்கி நம்ம ஆடிட்டர் பேருல ஒரு ஐயாயிரம் ரூபாய்க்கு டிமாண்ட் டிராப்ட் (D.D) எடுத்தான். தான் எப்பவும் அப்பாயின்மெண்ட் வாங்க அனுப்பும் ரிஜிஸ்டர் தபாலில் இந்த டி.டி.அஹ் இணைச்சு ஒரு கடிதம் எழுதினான். 

"மன்னிக்கனும் ஆடிட்டர் சார். உங்களது நேரத்தின் முக்கியத்துவத்தை சரியா தெரிஞ்சுக்காம வீணக்க இருந்தேன். அப்படியும், என்னால் வீணான நேரத்தை ஈடு செய்ய முழுவதுமாக முடியாவிட்டாலும் இத்துடன் இணைத்திருக்கும் சிறிய தொகை கொஞ்சம் உதவக்கூடும். மேலும், நான் உங்களிடம் இன்சூரன்ஸ் பாலிசி பற்றி பேசி பாலிசி போட வைக்க நினைக்கவுமில்லை மாறாக, உங்களின் வருமானத்தை சரியாக கட்டமைத்து மேலும் பெருக்கும் விதமான எனது ஆலோசனைகளை  தெரிவித்து போகலாம் என்றே வந்திருந்தேன். ஒருவேளை நீங்க அதனை கேட்க விரும்பினால் இதே போல் இன்னும் உங்கள் நேரத்திற்கு ஈடுசெய்ய முடியுமான தொகையையும் நானே கொடுக்கவும் தயாராக உள்ளேன். ஆவன செய்யவும்". இப்படி ஒரு கடிதத்தை பார்த்ததும் நம்ம ஆடிட்டர் வெலவெலத்து போனார். 

யாரு சாமி இவன்? எங்க இருக்கான்? உடனே தொலைபேசிய எடுத்து அந்த இளைஞன தொடர்புகொண்டார்.

அடுத்த ஒரு மணி நேரம் நம்ம ஆடிட்டரின் நேரத்தை வாங்கிகொண்ட அந்த இளைஞன் ஒரு மிகப்பெரிய தொகைக்கு தான் பணிபுரியும் நிறுவனத்தில் ஆடிட்டரின் பெயரில் புதிய பாலிசி ஒன்றை துவக்கி வெச்சான். மேலும், நம்ம ஆடிட்டரே தன்னோட எல்லா வாடிக்கையாளர்களையும் அந்த இளைஞனுக்கு அறிமுகம் செஞ்சு வச்சு பெரிய பெரிய தொகைக்கு இன்சூரன்ஸ் பெனிபிட்ஸ் எடுக்க உதவி செஞ்சார்.

  எதையுமே வித்தியாசமான கோணத்தில நேர்மறையா சிந்திச்சோம்ன்னா வெற்றி பெறலாம். இது தான் என்னோட சீக்ரேட்ன்னு சொன்ன அந்த இளைஞனோட பேரு என்ன தெரியுமா?

"பாரத் பரேக்"

இந்தியாவின் முதன்மை காப்பீட்டு ஆலோசகர்.
உலகின் இரண்டாவது காப்பீட்டு ஆலோகர் "பாரத் பரேக்" தான் அந்த இளைஞன்.


இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான LIC- ன் முலமாக இவர் பெரும் மாத வருமானம் எவ்வளவு தெரியுமா? மாதம் சுமார் அறுபத்தி ஐந்து லட்சம் ரூபாய்!!!

இந்த அளவிற்கு வருமானத்தை பெருக்க ஒரு சிறிய ஐடியாவ தான் பாரத் பரேக் வழக்கமா பயன்படுத்தினாரு.

அது என்னான்னு தெரிஞ்சுக்கனுமா? உங்க பணத்திக்கு தீனி போட இன்னும் சொல்லித்தரலையே நான்? 

தொடர்ந்து வாசியுங்க

பெட்டிக்குள் குட்டியிடும் பணம்.

Post a Comment

0 Comments