நல்லா கொழுத்த மாம்பழம் ஒன்னு மரத்தின் உச்சியில பார்க்கறீங்க. இப்ப உங்ககிட்ட இருக்குறது ரெண்டு வாய்ப்பு. ஒன்னு, பழம் காத்துல ஆடி கீழ விழும்வரை காத்திருப்பது. இன்னொன்னு மரத்தை உழுக்கி பழத்தை விழ வைப்பது.
தானா விழும்வரை காத்திருக்கலாம்ன்னு சொல்றவஙகல்லாம் கொஞ்சம் அந்தாண்ட நில்லுங்க... அடிச்சு உழுக்கி பழத்தை பறிச்சுக்குவேன்னு சொல்றவஙக மட்டும் மேற்கொண்டு படியுஙக.
பணம்.... இது ஒரு கொழுத்த மாம்பழம் மாதிரி தாங்க. சும்மா பார்த்துட்டே இருந்தா பழம் அழுகிடும். பறிச்ச மாப்பழத்தை உடனே சாப்பிடுங்க. நமக்கு ஒரு தோட்டமே இன்னும் காத்திட்டு இருக்கு.
உண்மையிலே நாம முதலீடு பண்ணுற பணத்தை இரு மடஙகா திருப்பி எடுக்க முடியுமா? சில இன்சூரன்ஸ் நிறுவனஙகள் எப்படி இந்த வாக்குறுதிய கொடுக்கின்றன? இது எல்லாம் ஏமாற்று விளம்பரமா? வியாபார தந்திரமா? இப்டியெல்லாம் சும்மா யோசிச்சுட்டு இருக்காம கொஞ்சம் பொறுமையா சிந்தியுங்க.. ஒரு எளிய "பால் தத்துவம்" (Milk Theory) இதனை உங்களுக்கு விளக்கும்.
சாதாரணமா தொழிமுனைவோரா நாம ஒரு பொருளை வாங்கி 20-30% இலாபம் வெச்சு அந்த பொருளை விற்போம். உதராணம ஒரு பேன்சி கடைக்காரர் 500ரூபாய்க்கு ஒரு பொம்மைய வாங்கி அத 600ரூபாய்க்கு விற்கறார். அதை விற்க அவருக்கு சராசரியா ஒரு வாரம் டைம் எடுத்துகுதுன்னு வையுங்க. இதே 500ரூபாவ ஒரு பால்காரர் எப்படி பயன்படுத்துறார்ன்னு பாருங்க.
பால் 1லிட்டர் 35 ரூபாய்க்கு வாங்கி 40ரூபாய்க்கு விற்குறார். லிட்டருக்கு சராசரியா 5ரூபா லாபம். கிட்டதட்ட 13லி. பால் தினமும் வாங்கி விற்குறார். அப்ப அவருடைய லாபம் அந்த பேன்சி கடைக்காரர விட அதிகமா கம்மியான்னு யோசியுங்க...?
அமாஙக, தினந்தோறும் பால் வியாபரம் நடக்குறதால அவர் பன்னுன முதலீட்டிற்கு கிட்டதட்ட 250ரூபாய் இலாபத்தை அவர் ஒரு வாரத்துல எடுக்கறார். ஆன, பேன்சி கடைக்காரர் அதிக இலாபம் ஒரே பொருளில் வைத்தாலும் அதன் விற்பனை சராசரிய பொறுத்தமட்டிலும் பால் வியாபாரியே அதிக இலாபம் அடையறவரா இருக்கிறார் இல்லையா?
சாதரணமா உங்களுடைய பணத்தை எங்க எப்படி முதலீடு பன்னனும்னு கத்துகிட்டீஙகன்னா போதும். லாபம் இரண்டு மடஙக எடுக்கறது ஒன்னும் பெரிய மேட்டரே இல்லீஙக.
இந்த முழு தொடரும் காப்பீட்டு நிறுவஙகளின் நிறை, குறைகளை முழுமையாக அலாசும் நோக்கில் பதியபட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் நாம் முதலீடு செய்யும் பணம் எந்த அளவிற்கு உத்திரவாதத்துடன் நமக்கு திரும்ப கிடைக்கும்? அதில் முதலீடு செய்வதில் உள்ள உட்சபட்ச இலாபம் என்ன? நாம செலுத்தும் பிரீமியம் தொகையை காப்பீட்டு நிறுவஙகள் எப்படி முதலீடு செய்கின்றன? அந்நிறுவனங்களின் இலாபம் எவ்வளவு? பாதுகாப்பானதா? எதிர்காலத்தில் இன்சூரன்ஸ் நிறுவஙகல் எப்படி வளர்ச்சி அடைய போகுது? காப்பீடு சார்ந்த ஆவணஙகளை சரி பார்ப்பது எப்படி? இன்சூரன்ஸ் கிளைம் செய்து வாங்குவது எப்படி? ஆன்லைன் இன்சூரன்ஸ் அதிகரிக்கரிக்கும் பொழுது அதன் தாக்கம் காப்பீட்டு முகவர், ஆலோசகர்களுக்கு என்ன செய்யும்? ஒரு வெற்றிகரமான முகவராக வழி என்ன? நம்முடைய வருமானத்தை பெருக்க இன்சூரன்ஸ் நிறுவஙகளை எவ்வாறு பயன்படுத்துவது? போன்ற பல விசயஙகளை பற்றி முழுமையாக தெரிந்துகொள்வோம்.
தொடர்ந்து பதிவினை வாசியுங்கள். உங்கள் கருத்துகளை பின்னூட்டமாக இடுஙகள்.
0 Comments
உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்