Ticker

6/recent/ticker-posts

எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் வெற்றி பெற வேண்டுமா?


கல்வியில் இந்த மாவட்டம் முதலிடம், இந்த மாணவன் இத்தனை மதிப்பெண் என்று வகைபடுத்துவதால் கல்வி வணிகமயமாவதை ஊக்குவிப்பதாக தான் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு புதுமாடல் மொபைல் வந்தால் அதை பற்றி விளம்பரம் செய்து விற்பது போல இந்த கல்வி மதிப்பெண் முறை எமக்கு தோன்றுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மாநில, மாவட்ட, பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற அனைவருமே டாக்டர், இன்ஜினியர், கலெக்டர் ஆகிவிட்டார்களா? பின் பெஞ்சு மாணவர்கள் நல்ல நிலைக்கு இன்று வரவில்லையா? எதற்கு மதிப்பெண் மூலம் ஒரு பள்ளி-மாணவனின் தரம் அறியப்படுகிறது?

ஆண்டுதோறும் போட்டோ போட்டு பேப்பரிலும், பிளக்ஸ் பேனரிலுன் சிரித்து கொண்டிருக்கும் மாணவர்களை இலவச மாடலாக வைத்து பள்ளிகள் தங்கள் விற்பனையை பெருக்கி கொள்கிறதா? இன்னும் என்னற்ற சந்தேகங்களை கொடுக்கிறது இந்த மதிப்பெண் கல்வி முறை.
இன்னமும் தோல்வி அடைந்த மாணவர்களின் தற்கொலைகள் நடக்கிறதே அவர்களின் கதி?

16 வயதில் உடலுறவு கொள்வது தவறில்லை என்றுரைக்கும் அரசு நிர்வாகத்திற்கு, மதிப்பெண் குறைவால் வாழ்க்கை முடிந்து விட போவதில்லை  நீயும் முன்னேற முடியும் என்று ஊக்கம் கூற முடியவில்லையோ?


பெற்றோர்களுக்கு புரிந்துகொள்ள வேண்டிய ஒரே விசயம் இது தான். உங்கள் பிள்ளை 5 சப்ஜெட்டில் வெற்றி பெற்றுவிடுவான் ஆனால் வாழ்க்கையில்?

வெறும் பாடக்கல்வி சார்ந்த பள்ளிகளை விடுத்து பாட்டு, இசை, விளையாட்டு,  அறிவியல், வரலாறு என தனித்துவமான கல்வி நிலையங்கள் எதிர்காலத்திலாவது தோன்ற வேண்டும். முதல் ஐந்து வகுப்பில் சேர்ந்து அடிப்படை எழுத படிக்க தெரிந்தால் மட்டும் போதும்.

Post a Comment

0 Comments