புதுசா ஒரு பிராண்ட் அஹ் மக்கள் கிட்ட கொண்டு செல்ல எளிய வழி சோசியல் மீடியாவான பேஸ்புக், இன்ஸ்டா, டிவிட்டர் போன்றவைகள் தான். இப்படிப்பட்ட சமூக வலைதளங்களில் நம்ம பிராண்ட் பத்தின பதிவுகள் இடும்போது மிக கவனமாக கையாள வேண்டும்.
ஒரு மில்லி செக்கண்டுக்கும் அதிகமான நேரத்தில் உங்கள் வாடிக்கையாளர் ஸ்கோரல்டவுன் செய்யறதுக்குள்ள அந்த பதிவு அவரை பார்க்கும் படியான எண்ணத்தை தூண்டி விடனும். அதற்கு கீழ் கண்ட சில தவறுகளை செய்யாம இருந்தா போதும்.
1.அதிகமான கீ வேர்ட்ஸ்
பொதுவா (#) ஹேஸ்டேக்கை தொடர்ந்து எழுதப்படும் சொற்கள் கீவெர்டா சோசியல் மீடியாக்கள் எடுத்துக்கொள்ளும். சில பதிவர்கள் அளவுக்கு அதிகமான கீவேர்ட்ஸ் கண்டினியூவா கொடுத்திருப்பாங்க. டிவிட்டர்ல லெட்டர் அதிகமா போட முடியாது. ஆனா, பேஸ்புக் மாதிரியான தளங்களில் பதிவ விட கீவேர்ட்ஸ் அதிகமா இருக்கும். இது படிப்பவர்களுக்கு ஒருவித எரிச்சல கொடுக்கும். கீவேர்ட்ஸ் ரொம்ப இம்பார்டண்ட் தான் அதுக்காக அளவுக்கு அதிகமா கொடுத்தீங்கன்னா அந்த போஸ்ட் அஹ் யாருமே பார்க்க மாட்டாங்க. டைம் டோட்டலி வேஸ்ட்...
2.படங்கள் மற்றும் வீடியோக்கள்.
கண்டிப்ப தேவையான படங்களை பதிவுக்கு ரிலேட்டடா போடனும். கூகுள் பன்னி இலவசமா கிடைக்குதுன்னு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத போட்டோக்களை போட கூடாது. ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை பகிர்வதும் நல்லது தான். ஆனா எல்லா படங்களும் வாடிக்கையாளர் உங்க நோக்கத்தை புரிஞ்சுக்கும்படியா அமைஞ்சிருக்கனும். வீடியோக்கான தம்நைல் இமேஜ் கண்டிப்பா தனியா எடுத்து அப்லோட் பன்னுங்க.
3.அனைவருக்கும் ஒத்த கருத்து.
சென்னை பெருவெல்லம், ஜல்லிகட்டு சமயங்களில் அனைத்து சமூக வலைத்தள பதிவுகளும் எத்தனை மில்லியன் கணக்கில் சேர் பன்னப்பட்டதுன்னு யோசிச்சு பாருங்க? இங்க புட் இருக்கு, அங்க மெழுகுவர்த்தி வேணும் அப்டி இப்படின்னு எவ்வளோ பதிவுகள் முன்பின் தெரியாதவர்களிடமிருந்து? காரணம் எல்லோருக்கும் தேவையான, பிடித்த ஒத்த கருத்து அதிலிருந்தது தான்.
உங்களுக்கென்றே தனி நடையில் எழுத்து இருக்கலாம். ஆனா, வணிக ரீதியான பதிவில் அனைவருமே வாடிக்கயாளர்கள் தான். ஆக, உங்கள் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை வணிக பதிவுகளில் திணித்தால் வாடிக்கையாளர்கள் பை பை சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க
4.நீளமான பதிவிடாதீர்கள்
சொல்ல வந்த விசயத்தை வெகு சீக்கிரமா சொல்லி விடுங்கள். நாம சிறுகதையோ நாவலோ எழுத வரவில்லை. நம்ம பொருள விற்க வந்திருக்கோம். அதிக நீளமான பதிவுகளை யாரும் படிப்பதுமில்லை விரும்புவதுமில்லை. மேலதிக தொடர்புக்கு என்று வலைதள முகவரியோ தொலைபேசி எண்ணையோ கொடுத்து விடுங்கள். அனைத்தையும் ஒரே பதிவில் சொல்லாதீர்கள்
5.பிழைகளை சரிபாருங்கள்
எல்லாம் முடிந்தபிறகு ஒருமுறைக்கு இரண்டு முறை வாசித்து பாருங்கள். இப்பெல்லாம் பெரிய மீடியாக்களே பிழைகள் இல்லாம போஸ்ட் போட மாட்றாங்க. காரணம் அவசரம். இவ்வளவு வருசமா சேர்த்து வெச்சிருக்க நன்மதிப்பை சிறு எழுத்துபிழை கெடுத்துவிட கூடாதல்லவா? தேவையான இடங்களில் கமா, ஃபுல்ஸ்டாப் வெச்சிருக்கான்னு பாருங்க. ஒரு முறை சரிபார்த்து பிறகு பப்ளிஸ் செய்யுங்கள்.

0 Comments
உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்