ஆண்- பெண் புரிதல் என்பது ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் போல இருக்கனும். தனது துணைக்கு என்ன தேவை என்பதை நொடிக்கும் குறைவான நேரத்தில் சொல்லக்கூடிய அற்றலை உங்களுக்குள் வளர்த்துகொள்ளுங்கள். இல்லறவாழ்வில் சரியான புரிதல் மட்டும் இருவருக்குள்ளும் ஏற்பட்டுவிட்டால் உங்களை யாராலும் அசைக்க முடியாது.
பொதுவாக, கணவன் - மனைவிக்குள் ஏற்படும் கருத்து வேற்றுமை என்பது ஒருவருக்கொருவர் வெளிப்படையாக இல்லாமல் இருப்பதாலேயே ஏற்படுகிறது. நல்ல துணை என்பவர் முதலில் நல்ல நண்பனாக இருக்க பழக வேண்டும்.
திருமணமான புதிதில் எதெல்லாம் தம் துணைவியிடம் பிடித்தது என்று நினைத்தோமோ அதெல்லாமே பிற்காலங்களில் வெறுப்பதற்கான காரணங்களாக மாறிவிடுகிறது பெரும்பாலன குடும்பங்களில். இதையெல்லாம் தவிர்த்து ஒரு திருப்திகரமான மண வாழ்க்கையை வாழ, இருவருக்கும் இடையேயான ஆழமான புரிதலே அவசியம்.
.
மனைவியோ அல்லது கணவனோ இவற்றை கடைபிடித்தால் நிச்சயம் உங்கள் இல்வாழ்வு சுகவாழ்வாக மாறும்.
- உங்கள் துணையின் தனி திறமையை கண்டுபிடியுங்கள். அவ்வப்போது அதை சொல்லி அவரை பாரட்டுங்கள். அது மனைவி வைக்கும் ரசமாக கூட இருக்கலாம். கணவனின் குறைந்த அலுக்கான சட்டையாக கூட இருக்கலாம்.
- சிரீயலோ, கிரிக்கெட்டோ தங்கள் துணை விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் சிறிது நீங்களும் பார்த்து அதைப் பற்றி கொஞ்சம் பேசுங்கள்.
- முக்கியமாக தங்கள் துணையின் அழகை அவ்வப்போது சொல்லி புகழுங்கள். இருவருக்குள் நெருக்கத்தை அது இன்னமும் கூட்டும். உங்கள் துனையின் சிறு கண் சிமிட்டல் கூட உங்கள் ரசனையின் வரிசையில் வைத்துக்கொள்ளலாம்
- முக்கியமாக ஒருவருக்கு தெரியாமல் மற்றவர் கடன் வாங்குவது, கொடுப்பது போன்ற விசயங்களை செய்யாதீர்கள். தவிர்க்க முடியாத காரணத்தை விளக்குங்கள். ஆட்சேபம் தெரிவித்தால் உடனே தவிர்த்து விடுங்கள் அந்த செயலை.
- தவறுகளை மன்னித்துகொண்டே இருங்கள். ஆனால், கண்டியுங்கள் அது பொறுமையான ஆலோசனையுடன் கூடியதாக இருக்க வேண்டும்.
- ஒருவர் பேசுவதை மற்றவர் காது கொடுத்து கேளுங்கள். அது சுவாரசியமற்றதாக இருந்தாலும் கொஞ்சம் பொறுமையுடன் கேட்டு பழகுங்கள். நாளடைவில் உங்களுக்கு பிடித்த விசயங்களை அவர்களாகவே பேசத்துவங்கி விடுவார்கள். முக அசைவுகளை ஆழ்மனது ஒன்றோடொன்று கடத்தி மிக எளிதாக புரிந்துகொள்ளும்.
- இருவரும் வெவ்வேறு சூழ்நிலையில் வளர்ந்து வந்தவர்கள். எனவே, இருவருக்குமான ஒத்த சூழ்நிலைகள் அமைய நிறைய காலம் வேண்டும். கணவன் தட்டில் சாப்பிடும் முறையிலிருந்து மனைவி துணி உடுத்தும் நேர்த்தி வரை தங்கள் துணையின் சிறு சிறு விசயங்களை மாற்றிக்கொள்ள போதுமான நேரங்கள் தேவைப்படும். பொறுமையாக இருங்கள்.
- இருவீட்டாரிடமும் அன்பு செலுத்துங்கள். தங்கள் துணையின் வீட்டாரிடம் அதிகம் பாசம் காட்டுங்கள். அது மற்றவர்க்கு மிகவும் எதிர்பாக்கும் ஒன்றாகும். இந்த ஒரு விசயத்தில் நீங்கள் கெட்டிக்காரராக இருந்தால் உங்கள் துணை உங்களை உச்சத்தில் வைத்து கொண்டாடுவார்.
- ரொமான்ஸ்!!! இது இல்லாமயா...? கட்டில் ஆடுவதுவதற்கு முன் உங்க துணையை புகழ்ந்து தள்ளுங்கள். அது முழுமனதோடான ரசனையுடன் இருக்க வேண்டும். சின்ன சின்ன தீண்டுதல்களில் விளையாட்டும் குறும்புதனமும் மிஞ்ச வேண்டும். அவருக்கு வசதியான வகையில் படுக்கை அசைவுகள் இருக்க வேண்டும். துணையின் முழு திருப்தி என்பது உடல் தூய்ப்பதில் மட்டுமல்ல, சுகமான நினைவுகளில் தான் அதிகம் இருக்கிறது என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள். மற்ற நாட்களில் இந்த கட்டில் சத்தம் பற்றி பேசும்போது அந்த சுகானுபங்களை அசைபோடுவதில் தான் முழு தாம்பத்ய வெற்றி கிடைக்க கூடும்.
- தினந்தோறும் உடற்பயிற்சி இருவரும் செய்து பழகுங்கள். அதற்கென நேரம் கண்டிப்பாக ஒதுக்குங்கள்.
இனி உங்கள் துணை உங்களை கொண்டாட ஆரம்பித்துவிடுவார்.
0 Comments
உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்