இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த மார்ச் மாத
மொத்தவிற்பனைப்புள்ளியின் (டபிள்யூபிஐ) எண் -2.33 ஆக
குறைந்திருக்கிறது.சென்ற மாதம் இதே இன்டக்ஸ் எண் -2.06 ஆக
இருந்தது.ஒட்டுமொத்தமாக வைத்துப் பார்க்கும்போது நமது நாட்டில் பணவீக்கம்
குறைந்து வருவதை இது காட்டுகிறது.இந்த நிலைமை இப்படியே தொடரருமானால்
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர ஆர்பிஐ ரேட் கட் செய்ய வேண்டிய நிலைக்கு
ஆளாகலாம்.அப்படி ஒரு வேளை வந்தால் வங்கிப் பங்குகளும் வீட்டுக் கடன்
வழங்கும் நிறுவனப் பங்குகளும் ஒரு அழுத்தத்தை சந்திக்கும்.இன்னொரு புறம்
டாலரின் மதிப்பு வலிமையடைந்து கொண்டே வருகிறது.இன்னொரு பக்கம் தங்கத்தின்
விலை பக்கவாட்டில் சென்று கொண்டே இருப்பதுடன் இன்னும் குறைந்து விடலாம்
என்ற தோற்றத்தையூம் தங்கம் காட்டுகிறது.
இதையெல்லாம் வைத்துப்
பார்க்கிறபோது ஈக்விட்டி சந்தையில் முதலீடு செய்வதற்கு பிரகாசமான
வாய்ப்புகள் தென்படுகின்றன.அப்படி செய்யப்படும் முதலீடு நீண்டகால
அடிப்படையில் நல்ல லாபம் தரும் என்றும் இடைக்காலத்தில் பங்குகளின் ஏற்ற
இறக்கத்தை கருத்தில் கொள்ளாமல் பிக்சட் டெபாசிட்டில் பணத்தைப் போட்டு
வைப்பதைப் போல பங்குகளின் மீது பணத்தைப் போட்டு வைத்திருக்கலாம்.அப்படி
போட்டு வைப்பதற்கு எந்த பங்குகளை அதாவது எந்த துறை சார்ந்த பங்குகளை
தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதுதான் ஒரு சவாலான விஷயம்.
0 Comments
உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்