இன்றைய சந்தை பாசிட்டிவ்வாகத்தான் துவங்கி தயங்கத் தயங்கி மேலே சென்று கொண்டிருக்கிறது.டெலிவரியாகப் பார்க்கும்போது நேற்று முன்தினம் லாங் எடுத்திருந்தவர்கள் இன்றைக்கு அதன் பலனைப் பெற்றிருப்பார்கள்.ரிலையன்ஸ் பங்கு முன்னால் வந்து நின்று கொண்டிருக்கிறது.எத்தனை பேரை அது இன்றைக்கு ஏமாற்றப் போகிறதோ என்று தெரியவில்லை.பொதுவாக ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளும் டாடா நிறுவனப் பங்குகளும் சந்தையில் இரட்டை வேடம் போட்டுக் கொண்டு வந்து நிற்கும்.அதனால் புதிய முதலீட்டாளர்களை இந்த பங்குகளில் நாம் டிரேடிங் செய்ய அனுமதிப்பதில்லை.
காலையில் உலோகப் பங்குகள் ஏற்றம் தருவது போல தோற்றம் காட்டின.இப்போது எண்ணைப் பங்குகள் மேலேறிக்கொண்டிருக்கின்றன.பிபிசிஎல் கெயில் ஐஓசி போன்றவை தனித்து தெரிகின்றன.வங்கிப் பங்குகள் எல்லாம் பதுங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் பாங்க்பரோடா மட்டும் மேலே ஏறிக்கொண்டு வருகிறது.அடுத்தடுத்த நாட்களில் இதே போல பிஎன்பியூம் மேலே போகுமென்று கருதுகிறௌம்.வங்கிப் பங்குகளில் எஸ்பிஐ வங்கியை மறந்து விடாதீர்கள்.நாம் முன்பு சொன்ன
ரூ 268 என்ற எல்லையே நேற்றே கடந்து விட்டது அடுத்த எல்லையாக
ரூ 276 என்ற எல்லையைக் கடந்து விட்டால் ரூ 310ஐ அடைய வாய்ப்பு இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
http://bullsstreetdotcom.blogspot.in
0 Comments
உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்