Ticker

6/recent/ticker-posts

உண்மையில் வருமானத்தை பெருக்க உதவும் 5 வகையான இணையதள தொழில்கள்

     நம்மில் பெரும்பாலானோர் இணையதளங்களை பயன்படுத்தி வெகு எளிதாக பணம் சம்பாதித்துவிடலாம் என்கின்ற மாயவலையில் விழுந்து கிடக்கின்றோம். உண்மையில் ஒரு கணினி மற்றும் ஒரு இணைய இணைப்பு மட்டும் வைத்துக்கொண்டு எளிதாக பணம் சம்பாதிக்க முடியுமா? 

           இதற்கான விடை உண்மையில் கசப்பாகத் தான் இருக்கும். 

    ஆம், உண்மையில் நீங்கள் சராசரியான வருமானத்தை அடைய வேண்டுமானால் கூட கடின உழைப்பு நிச்சயம் இருந்தாலே தவிர இணைய தளம் மூலம் வருமானம் பெற முடியாது. ( பி.டி.சி தளங்கள் குறித்து நாம் இந்த பதிவில் விவாதிக்கவில்லை)



மாறாக, உங்களின் நிறுவனத்தை (சிறு, நடுத்தர தொழில்) மேம்படுத்த மற்றும் பெருவாரியாக சந்தைபடுத்த இணையதளம் நிச்சயம் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளி தரும்.  அவ்வாறாக, பலனளிக்ககூடிய சக்திவாய்ந்த இணைய தொழில்களின் வகைகளாவன,
  • மின்வணிக தளங்கள் - e commerce website
  • மேட்ரிமோனியல் தளங்கள் - matrimony sites
  • டிக்கெட் புக்கிங் தளங்கள் -  Bookies
  • ஆன்லைன் டுடோரியல் தளங்கள் - Online Tutorial Site
  • ஊடக / விளம்பர தளங்கள் - e magazine / Classified Sites

# 1.  மின்வணிக தளங்கள் - e commerce website
     உங்களின் சொந்த தயாரிப்புகள் அல்லது சில்லரை விற்பனையில் அனுபவம் பெற்றிருப்பின் உங்களுக்கான சிறந்த தேர்வு மின்வணிக தளமாக இருக்கும். ஆடைகள், எலக்ரானிக் பொருட்கள், மளிகை மற்றும் இதர பர்னிச்சர் பொருட்கள் என எவற்றை வேண்டுமானாலும் துணிந்து சந்தைபடுத்த மின்வணிக தளங்கள் (e commerce website, shoping site) உதவும். 

# 2. மேட்ரிமோனியல் தளங்கள் - Matrimony sit
    இந்தியா போன்ற பெரும்பான்மையான இன மக்கள் வாழும் நாடுகளில் மேட்ரிமோனியல் தளங்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கின்றது. பல்வேறு மத மற்றும் இனங்களின் அடிப்படையில் மட்டுமல்லாது டாக்டர்ஸ் வெட்டிங்ஸ், அட்வகேட் அலைன்ஸ் என்றும் கூட துறைவாரியான மணமக்களுக்கான திருமண தகவல்களுக்கான தேவைகள்  பெருவாரியாக குவிந்துகிடக்கின்றன. அந்ததந்த மாவட்டத்திலுள்ள சிறு தரகர்களை நேரடி தொடர்பில் இணைத்து வைத்துக்கொண்டாலே போதும் நிறைவான வருமானத்தை மேட்ரிமோனியல் தளங்கள் அள்ளித் தரும்.

# 3. டிக்கெட் புக்கிங் தளங்கள் -   Bookies Sites
     டிராவல் ஏஜென்சிகள், ஹோட்டல் லாட்ஜ்கள், திரையரங்குகள் மற்றும் பணபரிவர்தனை நிலையங்கள் போன்றவற்றிற்கு இவ்வாறான புக்கி சைட்கள் நிச்சயம் உதவும். தொழிலை அதிகப்படியான மக்களுக்கு கொண்டு செல்ல இந்த வகையான இணைய தளங்கள் நிச்சயம் பயன்படும்.

# 4. ஆன்லைன் டுடோரியல் தளங்கள் - Online Tutorial Site.
    பள்ளி, கல்லூரி விரிவுரைகளை மட்டும் தான் இவ்வாறாக நேரடியாக ஆன்லைன் பன்ன முடியும் என்றில்லை. மாறாக, ஜோதிடஜாதக பலன்களை சொல்பவர்கள் கூட தங்கள் தொழிலை நவீனபடுத்தி முன்னேற்றம் காணமுடியும். கைத்தொழில் கற்றுத் தருபவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் வியாபார ஆலோசனை நிபுணர்கள், மனோதத்துவ மருத்துவர்கள் என பல்வேறு துறை சார்ந்தவர்களும் இவ்வாறான தளங்களை உருவாக்கி தங்களது தொழில்களை மேம்படுத்தலாம்.

# 5. ஊடக / விளம்பர தளங்கள் - e magazine / Classified Sites
      தயவுசெய்து ஆட்சென்ஸ் போன்ற பி.டி.சி (PTC) தளங்களை மட்டுமே நம்பி துவங்காமல் தரமான செய்திகளையும், பகிர்வுகளையும் தொடர்ந்து பதிவேற்றம் செய்து வாருங்கள். சிறந்த தொழில்முனைவோர்கள் தங்களின் விளம்பரங்களை உங்கள் தளத்தில் பதிய  தாமாகவே முன்வருவார்கள். மற்றும் கிளாசிபைட் சைட் (Classified Sites) என்பது ஓ.எல்.எக்ஸ் (OLX.com) போன்ற விளம்பர இணையதளமாகும். ரியல் எஸ்டேட், வாகன கன்சல்டன்சி நிலையங்கள், டொமஸ்டிக் & எக்ஸ்போர்ட் சர்ப்ளஸ் மார்கெட்டர்கள் என பலரும் தங்களது சேவைகளை சந்தைபடுத்த இவ்வகையான தளங்களை தேர்வு செய்து நிறுவலாம். உலக அளவிலான சந்தையை நிச்சயம் உருவாக்கிக்கொடுக்கும்.

      மேற்கண்ட சில தளங்களை உங்களின் சொந்த டொமைனில் நீங்களே உருவாக்க தனி, தனி ஓபன் ஸ்சோர்ஸ் (Open Source Software) மென்பொருள்கள் இலவசமாகவே இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. கொஞ்சம் எச்.டி.எம்.எல் (HTML Concepts) கான்செப்ட் தெரிந்துகொண்டால் போதும் பக்காவான இணைய தளம் சில நிமிடங்களில் உருவாக்கி விடலாம். அதுசரி, ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் என்றால் என்னவென்று கேட்கின்றீர்களா..? தொடர்ந்து வரும் பதிவுகளில் விரிவாக காண்போம்.

வாசிப்பவர்கள் தங்களுக்கு ஏதேனும் ஆலோசனை அல்லது சந்தேகம் இருப்பின் பின்னூட்டத்தில் தங்களது அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சலுடன் தங்களது கேள்வியை தட்டச்சிடுங்கள்.

Post a Comment

3 Comments

  1. நான் adsense க்காக மற்றும் affiliate காரணங்களுக்காக ஒரு website வைத்து அதை தொடர்ந்து update செய்ய முடியாமல் விட்டு விட்டேன்.தற்போது மீண்டும் ஏதேனும் செய்ய இயலுமா ?என்று மீண்டும் ஒரு வெப்சைட் ஆரம்பித்து உள்ளேன்.http://www.howtomakelegitmoneyonline.com

    நான் வீட்டில் இருந்து ஏதாவது வருமானம் கிடைக்குமா என்று முயற்சி செய்கிறேன்.

    மேற்கண்ட வெப்சைட் -யை e -commerce சைட் ஆக மாற்றி கொள்ளமுடியுமா?

    ReplyDelete
  2. e -commerce ஆரம்பிக்க வேண்டுமா அல்லது அதன் மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா?

    இரண்டிற்கும் வித்யாசம் இருக்கிறது, அது உங்களின் தொழில் அறிவை பொறுத்து தான் தீர்மானிக்க முடியும்.

    அதுசரி, மேற்கண்ட உங்கள் டொமைன் ஏன் இவ்வளவு பெரிதாக இருக்கிறது? ஆட்சென்ஸ் மூலம் வருமானம் ஈட்ட, உங்களின் முதல் செக் வருவதற்கே ( After Approved) 3 மாதங்கள் தொடர்ந்து உங்கள் சைட்சை மேம்படுத்திக்கொண்டிருக்க வேண்டியிருக்கும்.

    ReplyDelete
  3. i need just online job with weekly or daily payment can u help me

    ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்