Ticker

6/recent/ticker-posts

இன்டக்ஸ்சன் ஸ்டவ் வாங்க போறிங்களா...? தெரிந்துகொள்ளுங்கள்

விறகு அடுப்பிலிருந்து  கேஸ் அடுப்பிற்கு மாறிகொண்டிருந்த காலத்தில் கேஸ் ஸ்டவ் செலவு அதிகம்,  வெடித்துவிடும், ஆபத்தானது என்று பயத்தில் பெரும்பாலனவர்கள் கேஸ் ஸ்டவ் வாங்குவதையே தள்ளிப்போட்டு வந்தனர். ஆனால் இன்றைக்கு கேஸ் அடுப்பு இல்லாத வீடுகளே இல்லை.
நவீன கால மாற்றங்களுக்கு ஏற்ப நாமும் சில நவீனங்களை தெரிந்துகொள்வதும் நல்லது தானே??


இன்டக்ஸ்சன் ஸ்டவ் ( INDUCTION STOVE )

கரெண்ட்  பில் அதிகமா வந்துமோ.. சீக்கிரம் ரிப்பேர் ஆகுமோ, நிறைய நேரம் பயன்படுத்த முடியாதோ என பல சந்தேகங்கள் உங்களுக்கும் இருக்கிறதா?

அனாவசியமான கவலைய விடுங்க... ஒவ்வொரு வீட்டிற்கும் இன்டக்சன் ஸ்டவ் இருப்பது உபயோகமா தான் இருக்கும்.

அடிப்படை தொழில்நுட்பத்தை நீங்கள் தெரிந்துகொண்டாலே தேவையற்ற பயம் போயிடும்.

பொதுவாக, காந்தபுலத்தில் அதை ஈர்க்கக்கூடிய புறவிசை கிடைக்கும் பொழுது ஏற்படும் வெப்ப ஆற்றல் விளைவை மையப்படுத்தியே இன்டக்சன் ஸ்டவ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 

Inside of Induction Stove
மேற்கண்ட படத்தில் இன்டக்சன் ஸ்டவ்வின் உள்பகுதியை கவனியுங்கள். சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் காப்பர் காயில் மட்டும்தான் விசயமே. பொதுவா சைக்கில் டையனமோவுக்கான விதியை உல்டா பன்னுனா இன்டக்சன் ஸ்டவ் கிடைச்சுடும்.  அதாவது மின்சாரம் பாயும் ஒரு கம்பிச்சுருளினால் உண்டாகும் காந்தபுலத்துடன் இருப்பு போன்ற காந்த ஈர்ப்புகொண்ட பொருள் படும்பொழுது காந்தவிசையால் வெப்பம் கடத்தப்படுகிறது. இந்த வெப்பம் பாத்திரத்திலுள்ள பொருட்களை சமைக்கப் பயன்படுகிறது. 



இன்டஸ்சன் ஸ்டவ் ஆன் செய்தவுடன் சுருள் வைக்கப்பட்டிருக்கும் பக்கம் காந்தவிசையை பெற பாத்திரத்தின் அடிப்பாகத்தில் உள்ள மெட்டல் தகடு அதன் மேல வைக்கப்பட வேண்டும். அப்பொழுது மட்டும் தான் வெப்ப ஆற்றல் வெளியாகும். இதானால் தான் ஆன் செய்யப்பட்ட நிலையில் கூட இன்டக்சன் ஸ்டவ் மீது கையை வைத்துப்பார்த்தாலும் சுடுவது இல்லை. ஆக, அதிக பாதுகாப்பான சமையலுக்கு இன்டக்சன் ஸ்டவ் ஒரு அருமையான கண்டுபிடிப்பு தான்.

இருந்தாலும் அடிப்பாகம் தட்டையாக உள்ள பொருட்களை மட்டுமே இதில் பயன்படுத்தமுடியும் என்பதால் பானை போன்றவற்றில் சமைக்கும் உணவை விரும்புபவர்களுக்கு இது கொஞ்சம் எதிரியாகத்தான் தெரியும். 

மேலும் கேஸ் அடுப்பை விட வேகமாக இதனால் சமையலை முடித்துவிட முடியும். கேஸ்க்கான செலவை விட குறைவான மின்சாரமே இதில் இழக்கப்படுகிறது.

சுத்தம் செய்வதும் எளிது மற்றும் பார்க்க லேப்டாப் போல இருப்பதால் உங்கள் கிச்சனை இன்னும் அழகாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

மேலும் பல்வேறு டெம்பரேச்சர் அளவுகளை வைத்து சமையலை செய்யலாம்  என்பதால் கருகி போன கூட்டு வைச்சு கனவனிடம் திட்டுவாங்காத சமத்து மனைவியாய் மாற இன்டக்சன் ஸ்டவ் உங்களுக்கு ஒரு மிக சிறந்த தோழியாய் இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

Post a Comment

1 Comments

  1. தேவையான .அவசியமான தகவல்கள்.

    ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்