Ticker

6/recent/ticker-posts

வியாபாரத்தில் வெற்றியடைய 10 வழிகள் - 2 ( தேவைகளை கண்டு பிடியுங்கள் )


வியாபாரத்தில் வெற்றியடைய 10 வழிகள் - 2 ( தேவைகளை கண்டு பிடியுங்கள் )

    அது ஒரு மிகப்பெரிய சந்தை. தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க, பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்து ஒன்றாக கூடுகின்றனர்.


    நம்மாளுக்கு ரொம்ப நாளா, அந்த சந்தையிலிருக்குற நூற்றுக்கணக்கான கடையில ஏதாவது ஒரு கடைய  நடத்துனும்னு ஆசை. ஒரு சின்ன பிளாட்பாரத்துல எடம் கெடச்சாலும் போதும் எப்படியும் டெய்லியும் 2000ரூவா கல்லா கட்டிடலாம். அவரு  நெனைச்சாப்ல ஒரு நா, 10x10 சைஸ்ல ஒரு கடைய அடிச்சு பேசி வாடகைக்கு புடிச்சு போட்டுட்டாறு. அப்பறம் தான் தலைவருக்கு புத்தியில் ஒரு டவுட்டு வந்துச்சு. எப்டியும் இந்த சந்தையில எல்லா ஐட்டமும் கிடைக்குது. பலம் தின்னு கொட்டபோட்ட வியாபார காந்தங்கள் உலாவிட்டு இருக்குற இந்த ஏரியாவுல, நம்ம எதைய விக்குறதுன்னு? அந்த டவுட்டு.


     தலைவரு நைசா ஒரு ரவுண்டு விட்டாரு. வரிசையா துணிக்கடை, செப்பல் கடை, பேக் கடை, எலக்ட்ரானிகஸ், வாட்ச் கடைன்னு புத்திக்கு எட்டற எல்லா ஐட்டமும் ஒன்னுக்கு, பத்தா எதிர எதிர போட்டி போட்டுட்டு வியாபாரம் நடந்திட்டு இருக்கு. சுத்தி சுத்தி களைச்சுப்போன தலைவரு கடைசியா வந்து நின்ன எடம், சாத்சாத் அவரோட கடையே தான். ஹப்பாடான்னு...!!ன்னு  துண்ட விரிச்சுட்டு உட்கார்ந்தாரு. 

     தலைக்கு திடீர்ன்னு "பல்ப்" எரிய ஆரம்பிச்சிடுச்சு. எப்படியும் நம்மது கடைசி கடைதான். இருந்தாலும் உள்ள எல்லா கடைக்கும் வர்றவக கடைசியா நம்மள கிராஸ் பன்னிதான் போகனும். "பல்ப்"க்கு வாட்ஸ்ச கூட்டுன்னாறு.


குறைந்தபட்சம் ஒருமணி நேரமாவது சுத்திட்டு வெளில போறவகளுக்கு எப்படியும் ரொம்ப டயார்டா இருக்கும். காலார உட்காரனும் தோனும், எனர்ஜியா எதாது குடிக்க கொடுத்தா வியாபாரம் "ஜம்ன்னு" பிச்சுக்கும்.

டீக்கடை போடலாம்னு யோசிச்சாறு. பின்னாடி, டிரம் டீ வச்சுட்டு நாலஞ்சு பேரு உள்ள சுத்தர யோசிச்சு பார்த்துட்டு டக்குன்னு தலைவரு " எனர்ஜி சூப்ன்னு "டைட்டில வச்சு :"வெரைட்டி சூப்ஸ்" கூடவே சுண்டல் மசால்ன்னு கலவையா கலந்தடிச்சாரு. "வியாபரம் பக்கா...."

அத்தோடு விட்டார..? உள்ள கடைக்காரங்க டெய்லியும் டீக்கு பதிலா சூப் பெட்டருன்னு யோசிக்கும்படி  "சூப்" பத்தின சமாச்சாரங்களையும், நன்மைகளையும் கடைல பிளக்ஸ் ல எழுதி வைச்சாரு, அப்படியே ஒரு பொடியன போட்டு டோர் டெலிவரி கடைகளுக்கு கொடுத்து பிஸினெஸ பிக்கப் பன்னிட்டாப்ல...

      நீங்கள் மிகவும் பாராட்டிற்குறியவர்; தைரியசாலி. ஆம், நீங்கள் ஒரு தொழில்முனைவோர்.

    புதிய சிந்தனைகளையும், போராடும் குணமும், கடின உழைப்பையும் முதலீடாக வைத்துக்கொண்டு எதற்காக காத்திருக்கின்றீர்கள்..? 

தொழில்முனைவோராக மாற, மக்களின் தேவைகள் பற்றிய விளிப்புணார்வு மட்டும் போதும். முதலீடு, இடம் போன்றவை தன்னால் உங்களுக்கு வந்து சேரும்.

      பெரும்பாலும்  அரைத்த மாவையே அரைக்காமல், புதிதாக முயற்சியுங்கள். இங்கே நியூக்ளியர் குடும்ப வாழ்க்கை முறைக்கு இன்னும் தேவைப்படக் கூடிய சமாச்சாரங்கள் எத்தனையோ இருக்கின்றன. தொடர்ந்து தேடினால் நிச்சயம் புதிய யோசனைகள் உங்களை பலப்படுத்தும்.

    தேவைகளை கண்டு பிடிப்பது மிக எளிதான காரியம், ஆனால் அதை பயன்படுத்தி தொழிலை வெற்றிகரமாக்குவதற்கு உங்கள் பார்வையை விஸ்தரப்படுத்திக் கொள்ளுங்கள்.

தேவைகளை கண்டறிவதென்பதில்,

  • சூழ்நிலைகளை ஆராய்வது
  • நுகர்வோர்களின் பழக்கங்களுடன் ஒத்துப்போவது
  • போட்டியாளர்களை கண்டுபிடிப்பது
  • கொள்முதல்லை திட்டமிடுவது
  • தொழிலின் வீழ்ச்சி நிலை எங்குள்ளது என்பதை அறிவது
  • மற்றும் யூகங்களை மற்றும் வீண் அகம்பாவத்தையும் ஒதுக்கி வைப்பது
போன்றவற்றை விரிவாக ஆராய்ந்து, கவனித்து செயல்பட வேண்டும். 

      இவற்றில் எந்த ஒரு இடத்தில் உங்களுக்கு சிறிது சந்தேகம் வந்தாலும், அதனை முழுமையாக தீர்த்துக்கொள்ளுங்கள். அல்லது தோல்வி பயம் உள்ளுக்குள் வந்தால் உடனடியாக "பிராஜெக்டை தள்ளிப் போட்டு விடுங்கள்".
தொழில் செய்வதும் ஒருவகை போர்க்கலையே!!!
தோற்கும் தருணத்தில் உடனே சரணடைவதும் ஒருவகை போர் தந்திரமே!!!
  • சூழ்நிலைகளை ஆராய்வது.
..... ஆராய்வோம்.