புதிதாக தொழில் துவங்கிய ஆர்வத்தில் மனம் விரும்பிய போக்கில் இவ்வளவுதானே, இவ்வளவு தானேன்னு சின்ன சின்னதா முதலீட்டு தொகைய பிரிச்சு செலவழிச்சுட்டு, கடைசியில் கடைய திறந்து ரெண்டு மூனு மாசத்திலேயே கல்லா கட்டமுடியாம ஆட்டத்தை களைச்ச பயபுள்ளைங்க கதைங்க எக்கச்சக்கமா இருக்கு.
சக்சஸ் பார்முலான்னு பார்த்தம்னா ரெண்டே ரெண்டு பார்முலா தான் இருக்கு. ஆனா, தேர்வு செய்ய ஏதாவது ஒன்னுக்கு தான் அனுமதி, எங்கே உங்க தேர்வு எதுன்னு சொல்லுங்க பார்ப்போம்..?
தேர்வு 1. வெற்றிகரமான வியாபாரத்தை அடைய 10 வழிகள்
தேர்வு 2. வியாபாரத்தில் வெற்றி அடைய 10 வழிகள்
நீங்க தேர்வு 1. ஐ செலக்ட் செஞ்சிருந்தீங்கன்னா கண்டிப்பா ஆட்டத்தை இடையில இருந்து தான் ஆரம்பிக்கனும். அதுக்குன்னு தனி வழி இருக்கு. சுலபமா ஜெயிக்கலாம் ஆனா போராடித்தான் நிலைக்க முடியும்.
தேர்வு 2 ஐ செலக்ட் பன்னிருந்தா "சபாஷ் பாஸ்"" நீங்க ரொம்ப பொறுமையானவருங்க. அடுத்த 10 வருசத்துக்கு உங்களை ஜெயிக்க உங்க காம்பிட்டேட்டர்ஸ் மண்டய பிச்சுக்குவாய்க.
விசயத்துக்கு போவோம்.,
எங்க ஊர் பக்கம், பாய்ங்க ஏரியாவுல மதியம் போனோம்னா அந்த ஒரு பிரியாணி கடையில மட்டும், பந்திக்கு உட்கார பத்து நிமிசத்துக்கு மேல வெயில்ல, வெளிய காத்து கிடக்கனும். நிக்க கூட எடம் இருக்காது. ஆனாலும் கமகமக்குற "பிரியாணி" வாசத்தை பிடிச்சுக்கிட்டே நம்மாளுக வெய்ட் பன்னுவாக.
இத்தனைக்கும் அந்த ஒரு கடைய சுத்தி கிட்டத்தட்ட இருபது, இருபத்தஞ்சு பிரியாணி ஸ்பெசல் கடைங்க இருக்கு. ஆனா, கடைய திறந்து மூடுற வரைக்கும் அந்த ஒரு கடைல மட்டும் கூட்டத்துக்கு பஞ்சம் இருக்காது.
அது "பாபு பிரியாணி"
அந்த பேர்ல என்ன இருக்குன்னு தெரியாது. ஆன, பிரியாணில ஸ்பெசலா என்னமோ இருக்குங்க.
இத்தனைக்கும் மதியம் 12 மணில இருந்து சயந்திரம் 4 மணி வரைக்கும் மட்டுந்தான் கடை தொறந்திருக்கும்.
அப்படி "பாபு பிரியாணி" மட்டும் சக்க போடு போட என்ன காரணம்..?
பிராண்டிங்கா..?
குவாலிட்டியா...?
இல்ல மார்க்கெட்டிங்கா..?
அவசரப்படாம, பொறுமையா இந்த 10 விசயங்கலையும் ஆராய்ந்து, பதில தேடி கண்டுபிடிங்க.., நீங்களும் ஜெயிக்கலாம்.
1. எந்த தேவைய நீங்க கையில் எடுக்க போறீங்க..? அது யாருக்கானது..? ( Identify the Needs )
2. உங்களால முழுமையா அந்த தேவைய தீர்த்து வைக்க முடியுமா..? ( Source of Fulfill )
3. உங்கள எப்படி தனித்துவப்படுத்திப்பீங்க..? ( Unique Recognize )
4. அடடே!! பிடிச்ச பேர செலக்ட் செஞ்சிட்டீங்கலா..? ( Branding )
5. அழைப்பிதழ் எவ்வளவு அச்சடிக்கனும்..? ( Market Analysis )
6. அப்படின்னா, முதல்ல பட்ஜெட்ட ஃபிக்ஸ் பன்னிடுவோம் ( Investment Plan )
7. நாளும் கிழமையும் பார்த்தாச்சா..? ( Fix Target )
8. அழைப்பு சொல்ல யார் யார் போறாங்க..? ( Media Resource )
9. மொய் நோட்டு பத்தரமா இருக்கா..? ( Securiy Controls )
10. ட்ரீட்டு ரெடியா..? ( Organisation Welfare )
தொடர்ந்து வாசிப்போம்.