அனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங்களிலெல்லாம் நம்பி, பணம் செலுத்தி ஏமாறாமல் உங்களுடைய தன்னம்பிக்கை கூடிய முயற்சியை செலுத்தினால் நிச்சயம் யாரையும் எதிர்பார்க்காமல் உங்களால் இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை ஈட்ட முடியும். அவ்வாறாக,
Buy and Sale Business - வாங்கி விற்பது
கொஞ்சம் பர்சனல் இன்வெஸ்ட்மென்ட் மூலம் இணையத்தின் மூலமாகவே ஒரு பொருளை வாங்கி அதை இணையத்தின் மூலமாக வாடிக்கையாளர்களை பெற்று நல்ல இலாபத்திற்கு விற்க முடியும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொருளை பொறுத்து உங்களது இலாபம் கூடும்.
உதாரணமாக, டொமைன் நேம்களை வாங்கி வைத்து அதை விற்கலாம். இதில் இரண்டு வகை இருக்கிறது.
1. ஒரு பாப்புலரான பெயரை முதலில் புக் செய்து, தேவைப்படுபவர்களுக்கு ஏலம் மூலமாகவோ அல்லது குறிப்பிட்ட தொகைக்கோ விற்பனை செய்வது.
2. டொமைன் சேவைகளை வழங்கும் நிறுவனத்திடமிருந்து கணிசமாக பணத்தை செலுத்தி ரீட்டெய்லர் அடிப்படையில் விற்பது. ( விரிவாக இன்னொரு பதிவில் பார்ப்போம் )
அட, உங்களுக்கு டெக்னிக்கல் விசயங்களை பத்தி தெரியாதா..? கவலைய விடுங்க.. சுடிதார், சாரீஸ் போன்ற ஜவுளி ரகங்களை மொத்த வியாபரிகளிடமிருந்து கேட்லாக்ஸ் மட்டும் வாங்கி வைத்து, உங்களது வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர்களை பெற்று இலாபம் அடையுங்கள். பேஸ்புக், டிவிட்டர் தளங்களில் உள்ள நண்பர்களுக்கு கேட்லாக்ஸ் வைத்துள்ள லிங்கை தட்டி விடுங்கள். லைக்குடன் சேர்ந்து இலாபமும் கொட்டும்.
Service Business - சேவை வேலைகள்
வடிவமைப்பு வேலைகள் :
போட்டோசாப், கோரல் டிரா போன்ற வடிவமைப்பு மென்பொருட்களை கையாள தெரியுமா..? உங்களுக்கு உதவக்கூடிய ஃபிரிலேன்சர் தளங்களும் வேலைகளௌம் எக்கச்சக்கமாக கொட்டிக்கிடக்கின்றன. அல்லது நீங்களாகவே கூட ஆர்டர்களை தனிப்பட்ட முறையில் எடுத்து தேவையான வடிவமைப்பு வேலைகளை செய்து தந்து, தகுந்த வருமானத்தை பெறலாம்.
கன்டென்ட் ரைட்டர் :
கன்டென்ட் ரைட்டர்களுக்கு எக்கச்சக்க டிமாண்ட் இருக்கிறது. உங்களுக்கு கற்பனையுடன் கூடிய எழுத்து திறன் இருந்தால் போதும். நீங்கள் தினந்தோறும் வாசிக்கும் பல இணைய தளங்களும் கன்டென்ட் ரைட்டர்களை அள்ளிக்கொள்வதற்கு தயங்குவதில்லை
பேஸ்புக் மார்கெட்டிங் :
அதுபோலவே இன்றைக்கு குண்டீசி முதல் கம்ப்யூட்டர் வரை விற்கும் அனைத்து வியாபாரிகளும் தங்களுக்காக இணையத்தளத்துடன் கூடிய பேஸ்புக் லைக்பேஜ்களை உருவாக்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். உங்களது புரபோசல்களுக்கு அவர்கள் நிச்சயம் செவி சாய்ப்பார்கள். குறீப்பிட்ட பேஜ்ஜை நிர்வகிப்பதற்கு இவ்வளவு கட்டணம் என்று வாசூலியுங்கள்.
இதர சேவைகள் :
- ஆட்கள் தேவை / வேலை தேவை தொடர்பான கன்சல்டிங் கொடுக்கலாம்.
- வீடு, இடம், வாகனங்களை கமிசன் அடிப்படையில் விற்றுக் கொடுக்க உதவலாம்.
- ஸ்போக்கன் கிளாஸ் ஆன்லைனில் எடுக்கலாம்.
- ஆன்டிக் ஜிவல்ஸ், கைவினை பொருட்கள் செய்வது தொடர்பான பயிற்சி வகுப்புகளை ஆன்லனில் செய்ய முடியும். அல்லது விளம்பரபடுத்தி ஒரு பொது இடத்தில் ( உங்களது வீட்டில் கூட ) ஒரு நாள் பயிற்சி வகுப்பு எடுக்கலாம்.
- ஜோதிடம் அல்லது உளவியல் தொடர்பான கன்சல்டிங்க் கொடுக்கலாம்
- டூர் பேக்கேஜ் புக்கிங் ஆர்டர்கள் எடுக்கலாம்
இன்னும் உங்களுக்கு தெரிந்த தொழில்களை ஆன்லைனில் விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களை பெற்று வருமானம் அடையுங்கள்
5 Comments
என் பதிவுகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஆங்கில சைட் ஆரம்பித்து -நிர்வகிக்க உதவுவதாயின் -கூகுள் ஆட் சென்ஸ் வருவாயில் 40% தருவதாக கூட அறிவித்து பார்த்துவிட்டேன்.
ReplyDeleteசீந்துவார் இல்லை..என்ன செய்ய?
Hi sir i am interested to do website in English , i have some doubts please contact my mail sir - jbdsoftwareonly@gmail.com
ReplyDeleteBharathi பொதுவான சந்தேகம் எனில் இந்த பின்னூட்டத்திலேயே கேளுங்கள். தொடர்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ReplyDeleteதவிர்க்க வேண்டிதெனில் cpedenews@gmail.com கேள்வியை சொடுக்கி வையுங்கள்
Dear sir, please explain about domain name trading, such as marketing, transfering domain and payment method.
ReplyDeletesir example oda procedure explain panneengana inu nalla irkum.
ReplyDeleteஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்