Ticker

6/recent/ticker-posts

கோழிபண்ணையில் கொட்டிக் கிடக்கும் இலாபம்!! சந்தைப்படுத்த அலோசனைகளுடன் தொழிற்களம் பார்வை

       கிராமத்து வீடுகளின் முற்றங்களில் சுற்றித் திரிந்த நாட்டுக்கோழிகளையும் இன்று ப்ரீட் செய்து பண்ணையில் வளர்த்து அதிக அளவில் இலாபத்தை பெற விவசாயிகளுக்கு ஒரு மாற்றுத் துணை தொழிலாக இருக்கிறது பண்ணை கோழி வளர்ப்பு



பண்ணை கோழி வளர்ப்பு :

கூகுளின் உதவியுடன் தேடியதில், பண்ணைக் கோழிகளை வளர்க்கும் முறைகளை இன்னும் பல தளங்கள் கோழி வளர்ப்பு மற்றும்  பண்ணை அமைப்பது குறித்த தகவல்கள் போன்றவற்றை விரிவாக கொடுத்திருந்தாலும் தொழிற்களம் மூலமாக உங்களுக்கு புதிய சில தகவல்களை கேட்டறிந்து அளிக்க முயற்சித்துள்ளேன்

நண்பர் ஒருவர் முகனூல் வழியாக கேட்டதற்கினங்க இந்த பதிவை பதிகிறேன். இது போன்று பலரும் ஆலோசனைகளை கேட்பதை ஒட்டி விரைவாக தகவல்கள் திரட்டி தர ஒரு புது ஆர்வம் ஒட்டிக்கொண்டு மகிழ்விக்கிறது.. 

நன்றி நண்பா!!!


பண்ணைக்கோழி வளர்ப்பு ::

நிச்சயமாக கோழிப்பண்ணை என்பது ஒரு  நல்ல இலாபகரமாண தொழில்தான். காரணம் கோழியின் கறி, முட்டை மட்டுமல்ல அதன் கழிவுகளும் கூட நல்ல விலைக்கு விற்பனை செய்துவிடலாம் என்பதே ஆகும்.

    நல்ல சீதோசனமும், ஆலோசனைக்கு நல்ல மருத்துவரையும் உங்கள் பக்கம் ஒத்துழைக்கும்படி அமைந்துவிட்டால் அடுத்த 90 நாட்களில் நீங்கள் இலட்சாதிபதியாக மாறிவிடுவீர்கள்.. ஆம், கோழி வளர்ப்பு நல்ல இலாபம் தரக்கூடியது தான்.

    முதலில் புதிதாக கோழிப்பண்ணை அமைக்க எண்ணம் உள்ளவர்கள் அடிப்படையில் அமைந்த சில விசயங்களை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

கோழி வளர்ப்பு கறிக்கோழி (பிராய்லர்), நாட்டுக்கோழி, முட்டைக்கோழி என தனித்தனி வளர்ப்பு முறை உள்ளது. இதில் உங்களுக்கு ஏற்புடையது எது என்பதை உங்கள் முதலீட்டு தொகையை வைத்து முடிவு செய்யுங்கள்.

கோழிவளர்ப்பில் கறிக்காக வளர்க்கப்படுபவை, முட்டைக்காக வளர்க்கப்படுபவை என்று இரு வேறு பண்ணைகள் உண்டு.

பெறும்பாலும் பலரும் கறிக்கோழி வளர்ப்பதையே குறைந்தம் முதலீடு என்பதற்காக தேர்வு செய்கின் றனர்.

காரணம், முட்டைக்காக பண்ணை அமைக்க மற்றும் பாதுகாக்க செய்யப்படும் செலவுகள் கறிக்கோழி பண்ணைகள் அமைப்பதை காட்டிலும் கொஞ்சம் கூடுதல் செலவு பிடிக்கும் என்பதால் கொஞ்சம் அனுபவம் பெற்ற பெரிய நிறுவனங்களே முட்டைக்கோழி வளர்ப்பில் அதிக இலாபம் பார்க்கின்றன.

முட்டைக்கோழி வளர்ப்பு :

கூண்டு முறையில் வளர்க்கப்படும் முட்டைகோழி வளர்ப்பில் முதல் 10 வாரங்கள்  செட்டில் வளர்க்கப்படும். ( கொட்டகை போன்ற அமைப்பு ) பிறகு செல்களில் அடைத்து முட்டையிடும் பருவத்தில் வாரம் ஆறு முட்டை வீதமாக கிட்டத்தட்ட 52 வாரங்களுக்கு ஒவ்வொரு கோழியும் முட்டையிடும். பருவம் முடிந்ததும் அந்த கோழிகள் கறிக்காக கொல்லப்பட்டு விடும்.

இவ்வாறு, முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகள் இடும் முட்டை இருவிதமாக வளர்க்கப்படும். நல்ல உயர் ரக சேவல்களிலிருந்து  செமன் எடுக்கப்பட்டு அதை கோழிகளுக்குள் இன்செமனேசன் செய்து குஞ்சு பொறிக்கத் தகுந்த முட்டைகள் ஒருபுறம் உற்பத்தி செய்யப்படும். இன்செமனேசன் செய்யாத முட்டைகள் தனியாக விற்பனைக்கு அனுப்படுகிறது.

அவ்வாறு இன்செமனேசன் செய்யப்பட்ட முட்டைகள் பண்ணைகளில் தனியே தரம் பிரிக்கப்பட்டும்  இயந்திரத்தின் உதவியுடன் குஞ்சுகளாக பொறிக்கப்பட்டு தனியே சிறு பண்ணைகளுக்கு "கோழி  வளர்ப்பிற்க்காக விற்பனை செய்யப்படுகிறது."



இவ்வாறான பெரிய நிறுவனங்கள் தான் பயனீர், சுகுணா, சாந்தி, எஸ்.ஆர்.எஸ் போன்றவைகள். 

      பொங்களூர், கோவை, பல்லடம் போன்ற தென்மாவட்டங்களில் அதிக அளவில் கோழிப் பண்ணைகள் உள்ளது. நாமக்கல் தமிழகத்தின் மிக முக்கியமான நகரமாக இருந்து வருகிறது. இங்கே முட்டை, கறிக்கோழிகளின் விலை தீர்மானிக்கப்படுகிறது.

கறிக்கோழி வளர்ப்பு :

  மேற்கண்ட நிறுவனங்களில் குஞ்சுகள் விற்பனைக்கு கிடைக்கும். சாதாரணமாக " பிராய்லர் இன கோழிகள் குஞ்சொன்றுக்கு ரூ.16 முதல் 22 ரூபாய் வரை விற்கப்படுகிறது.  அதுவே நாட்டுக்கோழி இனம் என்றால் ரூ 8 முதல் 13 ரூபாய் வரை கிடைக்கும்

     பிராய்லர் இன கறீக்கோழிகள் முழுமையாக 90 நாட்கள் வளர்ந்த பிறகு விற்பனைக்கு தயாராகிவிடும். அதுவரை  தீவனங்கள் போட்டு நன்றாக பராமரிக்கவேண்டும், நாள் தவறாமல் கோழிகளின் நிலைகளை பரிசோதிக்க வேண்டும், தேவையான பயோசெக்யூரிட்டிகளை கவனிக்க வேண்டும், மாடால்டியை கட்டுப்படுத்த வேண்டும்.

கோழிக்களுக்கன மருந்தை ஊசிகளிலும் உணவிலும் சரியாக கலந்து கொடுக்க வேண்டும்.

கருவாடு, சோளம், சோயா, கடற்சிப்பி, அரிசிஎண்ணை, போன்றவைகள் அரவை இயந்திரத்தில் கொடுத்து அரைத்து கோழிகளுக்கு உணவாக கொடுக்க வேண்டும். அதேபோல் செட்டில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தரையில் உமியை பரப்பி வைத்து வெப்பத்தை குறைக்க ஏது செய்ய வேண்டும், இரு நாட்களுக்கு ஒருமுறையேனும் அந்த உமிகளை களைத்துவிட்டு கழிவுகள் வழியே லார்வாக்கள் தோன்றாமல் பார்த்துக்கொள்ளவும்.

(Feeds) பொறுத்த வரையில் ஸ்டார்ட்டர் ஃபீட், கிரெளத் ஃபீட், ரெகுரல் என வகைப்படுத்தப்பட்டு குஞ்சு பருவம், வளர் பருவம் என உணவளிக்கப்படுகிறது

     90 நாட்கள் வளர்ந்த கோழிகளை வியாபாரிகள் நேரடியாக பண்ணைக்கு வந்து வாங்கி சென்று விடுவார்கள். பண்ணை விலையை செய்தித் தாள்களில் தினந்தோறும் தெரிந்துகொள்ளலாம்.

முக்கியமாக கோழிகளின் எடை நன்கு பராமரிக்கப்பட வேண்டும். 90 நாட்களுக்கு பிறகு இவற்றின் எடை கூடுதலாகாது என்பதால் உங்கள் சந்தை வாய்ப்பை கெட்டியாக பிடித்து வைத்துக்கொள்ளுங்கள். 



ஒவ்வொரு கோழியும் கிட்டத்தட்ட 2 கிலோவுக்கும் அதிகமாக எடை பிடித்திருக்கும். கிலோ ஒன்றுக்கு ரூ.52 முதல் விலை கிடைக்கும் என்பதால் ரூ.22க்கு வாங்கப்படும் குஞ்சுகள் ரூ.120 வரைக்கும் விற்று இலாபம் பெற செய்கிறது. 

கோழித்தீவனங்கள், ஆட்கள் சம்பளம் போக நிச்சயமாக கனிசமான இலாபத்தை இது உங்களுக்கு கொடுக்கும்.

ஆரம்பகட்டத்தில் புதிதாக தொழில்துவங்க நினைப்பவர்கள் நேரடியாக குஞ்சுகளை வாங்கி வளர்க்காமல், பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் குஞ்சுகளை வாங்கி வலர்ப்பது பாதுகாப்பான வழிமுறையாக இருக்கும். காரணம், அவ்வாறு ஒப்பந்த அடிப்படையில் குஞ்சுகளை வளர்க்கும் போது தேவையான தீவங்கள், மருத்துவர்கள் பராமரிப்பு நடைமுறைகள் என அனைத்தையுமே அந்த ஒப்பந்த நிறுவனக்கள் அளித்துவிடும் என்பதால் கூடுதலான உங்கள் உழைப்பும், பண்ணைக்கான முதலீடும் மட்டுமே உங்களுடைய செலவாக இருக்கும். முதல் ஆறுமாதங்கள் புதிதாக தொழில் துவங்குபவர்கள் இவ்வாறாக ஒப்பந்தம் செய்துகொள்வது மிகவும் நன்று. மேற்கண்ட நிறுவனங்களே ஒப்பந்த அடிப்படியிலும் கோழிகளை தருகிறது.

இருப்பினும், அவ்வாறக ஒப்பந்தம் செய்து தொழில்செய்யும் பொழுது கோழிவளர்ப்பில் அதிக அனுபவத்தை பெறலாமே தவிர இலாபத்தை எதிர்பார்க்க முடியாது.

கோழிக்கழிவுகள் ஒரு நல்ல உறம் என்பதால் அதன் கழிவுகள் கூட டன் ஒன்றுக்கு ரூ.600 முதல் 800 வரை விலை போகிறது

ஆக, வாழையை போல கோழியும் அனைத்தையும் பணமாக்கிறது.

மிகவும் முக்கியமானது சந்தை வாய்ப்பு

முட்டைக்கோழி வளர்ப்பவர்கள் முட்டைகளை தரம் பிரித்து விற்பனைக்கு அன்னன்னைக்கே அனுப்பிவிடுவது நல்லது.  உடைந்த முட்டைகளை பேக்கரி, ஹோட்டல் வியாபாரிகள் வந்து நேரடியாக வாங்கிசொல்கிறார்கள்(?) எனவே அதையும் விற்பனை செய்துவிடலாம் என்ற கொசுறு செய்தியையும் பண்ணையில் வேலை செய்யும் ஆட்கள் தருகிறார்கள்.

உங்கள் பண்ணை அமைந்துள்ள சுற்றளவில் உள்ள கடைகளுக்கு நேரடியாக சென்று உங்கள் கோழியின் தரத்தையும், விலையையும் கூறி ஆர்டர்களை எடுத்துவிட்டால் இன்னும் அதிகமான இலாபம் உங்களுக்கு கிடைக்கும்.

     கோழி இறைச்சிக்கு என்றுமே சந்தைவாய்ப்பு அதிகமாக இருப்பதால், அதிக உயர் ரக கோழிகளை உற்பனை செய்து அதன்  முட்டை மற்றும் இறைச்சிகளை பதப்படுத்தி எக்ஸ்போர்ட் செய்யலாம். 

    உயர் ரக கோழிகள் என்பவைகள் கிரேன்ட் பேரண்ட் இன்செமனேசன் செய்யப்பட்ட பேரன்ட் கோழிகளாக இருக்கும். இவற்றை சோதித்து வாங்குவது நல்லது.

அதேபோலவே நாட்டுக்கோழி உற்பத்தியும் நடைபெறுகிறது. இதன் வளர்ப்பு காலம் முதல் 45 நாட்கள் முடிந்ததிலிருந்தே விற்பனைக்கு தயாராகிவிடும். எவ்வளவு அதிக நாட்கள் வளர்க்கிறோமோ அவ்வளவு லாபத்தை நாட்டுக்கோழிகள் தரும். 

பண்ணை அமைக்கும்பொழுது செட்டின் அளவு கோழிகளின் கொள்ளளவின் மூன்று மடங்கு வரை அதிகமாக உளாத்த ஏதுவாக அமைத்துக்கொள்க.

      உங்கள் பகுதியில் உள்ள மாவட்ட தொழில்வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரடியாக சென்று தங்களுடைய பிராஜெக்ட் வேல்யூ கொடுத்து கடன் உதவி பெற அதிக வாய்ப்புகளை அரசு தருகிறது. மானியத்துடன் கூடிய  கடன் உதவி என்பதால் கொஞ்சம் தாமதித்தாலும் தொடர்ந்தி தக்க ஆவணங்களுடன் முயற்சியுங்கள்..

வாழ்த்துகள்!!!

- தொழிற்களம் அருணேஸ்


உதவிய தளங்கள் :  

இன்னும் விரிவாக சொல்லும்.
http://sreekaviyafarms.blogspot.in/2013/04/blog-post_14.html
http://poultry.tamilnadufarms.com/tamil/
http://www.vinavu.com/2010/10/16/suguna-broiler/
http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=11558
http://www.alibaba.com/product-gs/585503928/chicken_poultry_design.html

Post a Comment

2 Comments

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்