Ticker

6/recent/ticker-posts

உங்கள் வேலையில் தலைவலி இல்லாமல் செய்ய 7 அலோசனைகள்

      உங்கள் நிறுவனத்தில் அல்லது நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமையால் ஏற்படும் அதிக தலைவலி அல்லது மனச்சோர்வை போக்கும் அற்புதமான ஏழு வழிகளை தெரிந்துகொள்ள நீங்கள் தயார் தானே?


  1.         வேலையை தள்ளிப் போடாதீர்கள். தள்ளிப்போடுவதால் ஏந்த ஒரு  பயனும் பெரிதாய் ஏற்பட்டுவிடாது. கொடுக்கப்பட்ட வேலையை  உடனே செய்து முடிக்க பழகிக்கொள்ளுங்கள். அல்லது குறிப்பிட்ட நேரத்தில் சர்வ நிச்சயமாய் திரும்ப செய்துவிடுங்கள்
  2.    எப்பொழுதெல்லாம் உங்கள் வேலையை திருப்திகரமாக முடிக்கின்றீர்களோ, அப்போதெல்லாம் சின்னதாய் ஒரு பரிசை உங்களுக்கு நீங்களே கொடுத்து கொள்ளுங்கள்.  அது, ஒரு கோப்பை தேனீராகவோ அல்லது சிக்கன் பிரியாணியாகவோ கூட இருக்கலாம்.
  3.   சிறிய உடற்பயிற்சிகளை அலுவலத்தில் அவ்வப்போது செய்துகொள்ளுங்கள். அல்லது ஒரு ஐந்து நிமிட நடையையாவது தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். அதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்கி வைத்துக்கொள்ளுங்கள்
  4.     உங்களுடைய வேலைகளை மற்றவர்களிடம் கொடுத்து செய்ய பழகிவிடாதீர்கள். இதைவிட தலைவலி தரும் விசயம் வேறு ஏதுவாகவும் உங்களுக்கு அமைந்திடாது. குப்பைக் கூடையில் ஒரு காகிதத்தை கசக்கி போடுவதான வேலையாக இருந்தாலும் சரி, அதை நீங்களே செய்யுங்கள்.
  5.     உங்களால் செய்யமுடியாது என்று தோன்றினால் முயற்சிட்து பார்ப்பதை  காட்டிலும், அதை முன்னரே முடியாது என்று கூறி விடுங்கள். பெரும்பான்மையான நேரங்களில் இந்த முடிவு உங்களுக்கு சாதகமாய் தான் அமையும். இதை  தைரியாகவே சொல்லுங்கள். அல்லது போதிய அவகாசம் தேவை என்று  நிதர்சனமாக கூறிவிடுங்கள்.
  6.     சாப்பிடும் பொழுது உங்கள் மொபைல் போனை சைலன்ட் மோடில் அல்லது சுவிட்ச் அஃப் செய்துவிடுங்கள். அல்லது அழைப்பை ஏற்க மற்றவரிடம் கொடுத்துவிடுங்கள்.
  7. இரவில் நன்றாக தூங்குங்கள். வீணாக கண்விளிக்காதீர்கள்
Mega Sale Domains @ Rs.99

Post a Comment

0 Comments