Ticker

6/recent/ticker-posts

விளம்பரம் விரும்பாத வரலாறுகள் - தாய்த்தமிழ் பள்ளியின் குழந்தைகள் திருவிழா!!

விழாக்கள் என்பது கொண்டாடி மகிழ மட்டும் அன்று அது ஒரு நினைவு கூறும் நிகழ்வு. அல்லது நினைவு படுத்த வேண்டிய நிகழ்வாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பொது நிகழ்வும் நம்மை அழைக்க மட்டுமே செய்கின்றனவாய் இருக்கும். உண்மையில் யோசிக்கவும், பிரம்மித்து நின்று ஆச்சரியப்படுத்தவும் ஒரு சில விழாக்களே முத்தாய்ப்பாய் செய்கின்றன.

அந்த வகையில் தொழிற்களம் மூலம் இன்றைய நாளில் நம்முடன் நெருங்கிய தொடர்பு கொண்ட நம் குழந்தைகளுக்கான, திருப்பூர் தாய்த்தமிழ் பள்ளியின் குழந்தைகள் திருவிழாவை உலகம் முழுவதும் உள்ள நம் சக நண்பர்களுக்கு தெரியப்படுத்துவதில் பெரு மகிழ்வு கொள்கின்றோம்.

ஒவ்வொரு மேடையிலும் வித்தியாசமான திறமைகளை நம் தமிழ் வழி குழந்தைகள் செய்து காட்டுவது அடடா!! வார்த்தைகளில் அடக்க முடியாத ஆற்றல் அது. 

பள்ளியின் அன்றாட அலுவல்களுக்கே போதிய நிதி வசதி இல்லாத மிக நெருக்கடியான சூழ்நிலையிலும் தங்கள் குழந்தைகளை அவர்கள் உற்சாகத்தை மெத்தனப்படுத்தி வீணாக்க கூடாது என்ற உறுதியான முனைப்புடன் போராடி வரும் கு. தங்கராசு அய்யா அவர்களின் முயற்சியே திருப்பூர் தாய்த் தமிழ் பள்ளியின்

குழந்தைகள் திருவிழாவாக
நாள் : 17.03.2013 ஞாயிறு, திருப்பூர் தாய்த்தமிழ் பள்ளி வளாகம்

உருவாகி இருக்கிறது.

இந்த விழாவை நேரலையில் உங்களுடன் பகிர்வதற்கான வேலைகளை தொழிற்களம் செய்திருக்கிறது.




  குழந்தைகள் திருவிழா என்பது திரைப்பட பாடல்களுக்கான சாமானியனியர்களின் நடனம் அல்ல,, இது முற்றிலும் தமிழ் சார்ந்த ஒரு பெரும் முயற்சி..

ஆம், குழந்தைகள் நடத்திக் காட்டும், பாரம்பரிய தமிழர்களின் அட்டகாசமான அனைத்து நடனங்களையும் நேரடியாக கண்டு மகிழ இருக்கிறோம் இன்றைய தினத்தில் (பார்க்க விளம்பர பதாகை படம்) ...

அதுமட்டும் அல்ல,,, 

உணவு ...

   தமிழன் உணைவை மருந்தாக்கி உண்டு ஆயுள் வாழ்ந்தவன். மருத்துவ நலன்களுடன் கூடிய பாரம்பரிய உணவுகள் அரங்கத்திலேயே செய்து தருகிறார்கள்.

  முளைகட்டிய தானியங்கள், முற்றிலும் எண்ணையை உயோகிக்காத திண்பண்டங்கள், பருதிதிப்பால் என நாம் கேள்விப்படாத பல விசயங்களை இன்று இந்த குழந்தைகள் நமக்கு கற்றுத்தர இருக்கின்றார்கள்.

     ஒவ்வொரு நாளும் நமக்கு இந்த திருவிழாவில் கேட்டறிந்த செய்திகள் நம் உணவு பழக்கத்தையே மாற்றிவிடும் என்பதை என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். 

        காரணம் இரு தினங்களுக்கு முன்பு இவ்விழா ஏற்பாட்டு கூட்டத்தில் கலந்துகொண்டு நானும் இதில் பங்கேற்றேன்(?) என்ற முதற்காரணத்தை கொண்டு சொல்கின்றேன். அக்கூட்டதில் தங்கராசு அய்யாவின் நிர்வாக திட்டமிடலும், உணவு பழக்க வழக்க அபாய கட்டத்தை பற்றிய கூரிய விளிப்புணர்வையு ம்தெரிந்து கொண்டேம் ( நிச்சயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உணவு பழக்க வழக்க முறைகள் ஏராளமாக  இருக்கின்றன பிரிதொரு பதிவில் பகிர்கிறேன்)


   வலையகம் அகரன் நேரலையில் காணொளி செல்ல ஏற்பாடு செய்து தருகிறார். 

    தொழிற்களதில், தமிழ்செடி தளத்தில், தேவியர் இல்லம் தளத்தில், திண்டுக்கல் தனபாலன் அண்ணன் தளத்தில், திடம்கொண்டு போராடு தளத்தில்  மட்டும் அன்று மற்ற நமது தொழிற்களம் பதிவர்கள் தளத்திலும் இந்நிகழ்வை நேரலையில் கண்டு மகிழுங்கள்.

உங்கள் உணவு பழக்கத்தை நிச்சயம் மாற்றும் ஒரு அருமையான நிகழ்வை காணத்தவராதீர்கள்.

    தாய்த்தமிழ் பள்ளியின் நிதி நெருக்கடிக்கு உதவ நினைக்கும் அனைத்து நல்உள்ளங்களுக்கும்  தொழிற்களம் சார்பாக நன்றி!!

தொடர்புக்கு :

கு. தங்கராசு ( பள்ளி தாளாளர் )
98439 44044

இணையத்தால் என்ன வேண்டுமானலும் செய்ய முடியும். ஒரு ஆக்க பூர்வமான முயற்சிக்கு இதை பகிர்வதும்  கூட அதில் அடங்கும் தானே..??

-  தொழிற்களம் அருணேஸ்

Post a Comment

0 Comments