Ticker

6/recent/ticker-posts

கூகுள் பற்றி தெரிஞ்சுக்கங்க!




கூகுள் சில தகவல்கள்




  • கூகுள் நிறுவனத்தில், முதல் முதலாக நியமிக்கப்பட்ட அலுவலர் பெயர் கிரெய்க் சில்வர்ஸ்டெய்ன் (Craig Silverstein) ஆவார்.
  • கூகுள் நிறுவனத்தின் முதல் அலுவலகம் இன்டெல் நிறுவன மேனேஜர் வீட்டில் இருந்த கார் ஷெட்டில் இயங்கியது
  • கூகுள் நிறுவனத்திற்கு உலகில் உள்ள அனைத்து தகவல்களும் அத்துப்படி. எதனைக் கேட்டாலும் இணையத்திலிருந்து தேடி எடுத்துத் தரும் அசகாய சூரன். 
  • கூகுள் தேடுதல் தளத்தில் உள்ள சர்ச் இஞ்சினுக்கு, இந்நிறுவனத்தினை நிறுவிய லாரி பேஜ் மற்றும் பிரின் இட்ட பெயர் பேக்ரப் (BackRub).
  • ஓர் இணைய தளத்தின் தரத்தினை அளக்க பேஜ் ரேங்க் (Page Rank)என்ற அலகினை கூகுள் பயன்படுத்துகிறது
  • ஜிமெயிலை உருவாக்கிய கூகுள் பொறியாளர் பால் புக்ஹெய்ட் (Paul Buchheit). இவர் தான் கூகுள் நிறுவனத்தின் புகழ் பெற்ற “Don’t be evil” என்ற வாசகத்தைக் கொண்டு வந்தவர்
  • கிராண்ட் சென்ட்ரல் (GrandCentral) என்ற நிறுவனத்தினைக் கையகப்படுத்தி, கூகுள், கூகுள் வாய்ஸ் (Google Voice) என்ற சேவையைக் கொண்டு வந்தது
  • கூகுள் நிறுவனத்தின் ஆண்டுக் கூட்டம் Google I/O என அழைக்கப்படுகிறது
  • இந்த ஆண்டு Google I/O கூட்டத்தின் போது, இதன் நிறுவனர்களில் ஒருவரான செர்ஜி பிரின், ஸ்கை டைவிங் செய்து, உலகத்தில் உள்ள பத்திரிக்கைகளில் செய்தியாக இடம் பெற்றார்.



Post a Comment

2 Comments

  1. உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி......

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்