மூளையில் என்ன இருக்கு?
நம்மில் பலருக்கு கோபம் வந்தாலோ அல்லது நம் கீழ் வேலை செய்பவர்கள் தவறு செய்தாலோ, திட்டுவதற்காக முதலில் வரும் வார்த்தை, உனக்கு மண்டையில் மூளையிருக்கா? என்று தான். ஏனென்றால் நம் உடல் இயக்கத்திற்கு மூளை இன்றியமையாதது என்று நாம் அனைவரும் அறிந்ததே!அத்தனை அதிசயங்கள் நிறைந்த மூளை ஆனால் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மூளை அழிவதில்லை என்று கண்டு பிடித்துள்ளார்கள் விஞ்ஞானிகள்
ஆம், எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து, மம்மி ஆக்கப்பட்ட மனிதனின் மூளையைக் கொண்டு, மனித மூளையின் ரகசியங்களையும் அதன் எண்ண ஓட்டத்தையும் கண்டறிய முடியும் என்கின்றனர், ஜூரிச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். அந்தப் பதினெட்டு மாத மம்மிக் குழந்தையின் மண்டை ஓட்டுக்குள் அதன் மூளையின் நியூரான்கள் மற்றும் மூளைச் செல்கள், சிதைந்து அழியாமல், இன்றும் நன்றாகவே உள்ளது என்கின்றனர்.
பத்தாண்டுகளுக்கு மேலாக - அதாவது, 1998ல் தோண்டி எடுக்கப்பட்ட புளிப்புக் காடியான களிமண் மற்றும் உப்பு நீரில் கிடந்த அக்குழந்தையின் மூளைக்கு ஊறுகாய்க்குக் கிடைக்கும் பலன்கள் கிடைத்துள்ளதாக “நியூரோ இமேஜ்’ ஏட்டில் வந்த அவர்களின் கட்டுரை குறிப்பிடுகிறது.
இயற்கையில் கிடைத்த அந்தப் பாதுகாப்பான மூளைத் திசுக்களை ஆராய்வதன் மூலம் மூளையின் வலுவான பல அரிய இயல்புகளையும், அவை எப்படி வேலை செய்கின்றன என்பதையும் அறிய முடியும் என்கிறார் “ருஹ்லி’ என்பவர். எப்படி எல்லாம் யோசிக்கிறது மனித மூளை...!
0 Comments
உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்