Ticker

6/recent/ticker-posts

நீங்கள் புதிதாக செய்யும் தொழிலில் வெற்றி பெற வேண்டுமா?

நாம் அனைவரும் தொழில் செய்கிறோம். ஆனால் அதில் வெகு சிலரே வெற்றி பெறுகின்றோம். வெற்றி பெற்றவர்களிடம் அதற்கான காரணம் என்ன என்று கேட்டபோது, அவர்கள் தந்த வெற்றி ரகசியங்கள் சில

வாய்ப்புகளை உருவாக்குங்கள்

        எப்பொழுதுமே வாய்ப்புகள் நம்மை தேடி வராது. நாம்தான் அதை தேடிச் செல்ல வேண்டும். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை தேடாமல்,கிடைத்த வேலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்பவர்களே வெற்றி பெறுகின்றனர்.

வாய்ப்புகள்… ஏணிப்படிகள்

    அப்படி நாம், கிடைக்கும் வாய்ப்பை ஏணிப்படியாக கொண்டு முன்னேற வேண்டும்.கடின உழைப்பு இருந்தால் எதையும் சாதிக்க முடியும். வாழ்க்கையில் வெற்றி பெற பல தடைகளை கட்டாயம் தாண்டியே ஆக வேண்டும். வெற்றி எப்போதும் எளிதாக கிடைத்துவிடாது. அப்படி கிடைத்தாலும் அது பெரும்பாலும் நிலைக்காது.

தொடர்ந்து முயலுங்கள்

       ஒரு முயற்சியில் நமக்கு பல இடையூறுகள் வரலாம். அந்த இடையூறுகள் வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் படிக்கட்டுக்கள் என்று உணர்ந்தால் போதும். நாம் முன்னேற வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும். கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு சரியான முறையில் உழைத்தால் முன்னேற்றம் நிச்சயம்.

திட்டமிட்டு செலவு செய்யுங்கள்

        நாம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவு சேமிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள். உங்களிடம் இருக்கும் கையிருப்பு தொழிலிலோ அல்லது ஆபத்துக் காலங்களிலோ பெரிதும் உதவும்.

தொழிலை மாற்றாதீர்கள்

        தொழிலை மாற்றிக்கொண்டே இருக்காதீர்கள். வெற்றியோ தோல்வியோ அது நம் கையில் தான் இருக்கிறது. தோல்வியை வெற்றியாக மாற்றும் சூட்சமத்தை மட்டும் அறிந்து கொள்ளுங்கள். பின்பு அனைத்தும் உங்கள் வசமாகும். தோல்வியை கண்டு துவண்டு தொழிலைக் கைவிட்டால் மொதலீடும் வீணாகும், உழைப்பும் விரயமாகும். வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு உழைக்க வேண்டும். அடிக்கடி தொழிலை மாற்றிக் கொண்டே இருந்தால் வேற்றி கிடைப்பது கடினமே.

நீங்கள் தான் ஹீரோ

       மேலே கூறியவற்றை பின் பற்றி ஒரு தொழிலை தொடங்கி, அதில் வெற்றியும் பெற்று விட்டோம். அதை தக்க வைத்துக்கொண்டு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான சில யோசனைகள்

  • எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள். முதலீடு போடாமல், திரும்ப கிடைக்கக் கூடிய பொக்கிஷம் இது ஒன்று தான்.
  • பொய் சொல்லாதீர்கள். உங்கள் நன்னடத்தையை இது பெரிதும் பாதிக்கும்.
  • உங்கள் தோழர்/ தோழிகளிடம் சிறிது நேரத்தை செலவிடுங்கள். அப்போதுதான் உங்களின் நிறைகளும், குறைகளும் தெரியவரும்.
  • எதுவாக இருந்தாலும் மனம் திறந்து பேசுங்கள்.உள்ளுக்குள் ஒன்று புறம் ஒன்று பேசாதீர்கள்.
  • அடிக்கடி, உங்களைப் பற்றி தம்பட்டம் அடிப்பதை தவிர்த்து விடுங்கள். உங்களுக்கு இருக்கும் புகழை அது கெடுப்பதாக மாறிவிடும். பழம் பெருமையை இப்போதுள்ள நிலைமையோடு ஒப்பிடுவதை கை விடுங்கள்.
  • அலுவலகத்தில் வேலை செய்பவர், பாராட்டும் படியான காரியத்தை செய்தால், அனைவர் முன்னிலையில் பாராட்டுங்கள். குத்தம் சொல்லக் கூடிய காரியமாக இருந்தால், தனியாக அழைத்துச் சொல்லுங்கள்.
  • நண்பர்களை தேர்வு செய்யும் போது கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்.
     தொழில் தொடங்கும் பொது, இவை அனைத்தையும் பின்பற்றினாலே, தொழிலில் பாதி வெற்றி அடைந்து விடுவீர்கள்.பிறகு நீங்கள் தான் உங்கள் தொழிலில் ஹீரோ. உங்கள் தொழில் வெற்றி பெற வாழ்த்துகள். 

Post a Comment

3 Comments

  1. தொழிலில் வெற்றி பெற உங்களது ஊக்குவிப்பு தொடரட்டும்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தன்னம்பிக்கை பகிர்வுக்கு பாராட்டுக்கள்... நன்றி...

    ReplyDelete
  3. தொழிலை மாற்றாதீர்கள்... உண்மை மகேஸ்வரி...? ஒரே தொழில்துறையில் இருந்ததின் விளைவு இன்று நானும் ஒரு நிறுவனம் துவங்கும் அளவு வளர்ந்துள்ளேன். நன்றி. தொடருங்கள்...

    ReplyDelete

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்