Ticker

6/recent/ticker-posts

நலம் தரும் திராட்சை ! திராட்சை ரகசியம்…


நலம் தரும் திராட்சை ! திராட்சை ரகசியம்…

    திராட்சை பழத்தின் மகத்துவத்தை பல வரலாற்று நூல்களில் கூட நாம் படித்திருப்போம். இது தோன்றி ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பிய நாடுகளில் திராட்சை பழ ரசத்தை மக்கள் தினமும் பருகியதாக தகவல்கள் உள்ளன.நமது நாட்டின் பழங்கால ஆயுர்வேத மருத்துவ நூல்களில் திராட்சை சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

       திராட்சை பழத்தில் கருப்பு, பச்சை, பன்னீர், காஷ்மீர், ஆந்திரா, காபூல் என பல வகை உள்ளது. இதில் நம் நாட்டில் கருப்பு மற்றும் பச்சை நிற திராட்சை தான் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இப்பழத்தில் பெருமளவு நீர் உள்ளது. அதே போல் கொழுப்புச் சத்தும், மாவுச் சத்தும் அதிகளவு உள்ளது. இத்துடன் செம்பு, கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்களும், வைட்டமின் பி1,பி2,பி3 சத்துக்களும் இப்பழத்தில் உள்ளன.

        திராட்சை பழத்தை சாறாக உட்கொண்டால் உடம்பிற்கு நல்லது. குடல் புண் நோயால் அவதிப்படுபவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று திராட்சை பழச்சாறை குடிக்கலாம். இதே போல் ரத்த சோகை தீர, நல்ல பசி ஏற்பட,தலைவலி தீர, சிறுநீர் கழிப்பதில் உள்ள சிக்கலை தீர்க்க, வாய்ப்புண், நாக்குப்புண் ஆற, காக்காய் வலிப்பு நோய் கட்டுப்பட, ரத்தம் சுத்தமாக, இதயம் வலிமை பெற, இதயத்துடிப்பு சீராக மருத்துவ ஆலோசனை பெற்று கருப்பு, பச்சை திராட்சை பழங்களை உண்ணலாம். திராட்சைகள் பொதுவாக நா வறட்சியை போக்கும்.குடல் புண், உடலில் உள்ள புண்களை ஆற்றும் குணமுடையது.

      ஆதலால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திராட்சை பழத்தை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொண்டு நோயின்றி நலமுடன் வாழ்வோம்.                                 



Post a Comment

0 Comments